பல்லடத்தில் கழிவு நீர் கால்வாயை சீரமைக்க கோரி கையெழுத்து இயக்கம்

ராம் நகர் பகுதியில், முறையாக கழிவுநீர் கால்வாய் கழிவுகள் அகற்றப்படுவதில்லை.மனுவாக தயாரித்து மீண்டும் நகராட்சி நிர்வாகத்திடம் அளிக்கப்படும்.
கையெழுத்து இயக்கம் நடைபெற்ற போது எடுத்த படம்.
கையெழுத்து இயக்கம் நடைபெற்ற போது எடுத்த படம்.
Published on

பல்லடம் :

பல்லடம் நகராட்சி 14 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் ஈஸ்வரி அங்குள்ள ராம்நகர் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தினார். இது குறித்து அவர் கூறியதாவது:- 14வது வார்டு ராம் நகர் பகுதியில், முறையாக கழிவுநீர் கால்வாய் கழிவுகள் அகற்றப்படுவதில்லை. இதுகுறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.அதனால் தற்போது பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கப்பட்டு வருகிறது.இதனை மனுவாக தயாரித்து மீண்டும் நகராட்சி நிர்வாகத்திடம் அளிக்கப்படும்.

இதற்கு மேலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் பொதுமக்களை திரட்டி போராட்டங்கள் நடத்தப்படும் என அவர் தெரிவித்தார். இதில் பாஜக., நகர தலைவர் வடிவேல், 18 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் சசிரேகா மற்றும் பாஜக., நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com