search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேங்காய்"

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • 10 அம்ச கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை முழக்கங்களையும் எழுப்பினர்.

    நீலாம்பூர்:

    தமிழகத்தில் 18 மாவட்டங்களில் விவசாயிகள் தென்னை விவசாயத்தை காக்க வலியுறுத்தியும், கொப்பரை தேங்காய் விலை வீழ்ச்சிக்கு உரிய நடவடிக்கை எடுப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அந்த வகையில், கோவை மாவட்டம் சூலூர், செஞ்சேரி மலை பச்சாபாளையத்திலும் விவசாயிகள், தேங்காய்க்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும். ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணை வழங்க வேண்டும்.

    விளைநிலங்களை சேதப்படுத்தும் வனவிலங்குகளிடம் இருந்து உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 5-ந் தேதி போராட்டத்தை தொடங்கினர்.

    ஒவ்வொரு நாளும் வித்தியாசமான போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று 8-வது நாள் போராட்டத்தின் போது, விவசாயிகள், கோவை மாவட்ட விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் வேலு மந்திராச்சலம் தலைமையில் கஞ்சித் தொட்டி திறந்து கஞ்சி காய்ச்சி அதனைக் குடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    10 அம்ச கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை முழக்கங்களையும் எழுப்பினர். இதில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இன்று 9-வது நாளாக போராட்டம் நடக்கிறது.

    • விவசாயிகள் சங்கம் சார்பில் ஜலகண் டாபுரம் பேருந்து நிலையத்தில் தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற்றது.
    • போராட்டத்திற்கு சங்க மாவட்ட துணை தலைவர் தங்கவேல் தலைமை வகித்தார்.

    நங்கவள்ளி:

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஜலகண்டாபுரம் பேருந்து நிலை யத்தில் தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சங்க மாவட்ட துணை தலைவர் தங்கவேல் தலைமை வகித்தார்.

    இதில் கொப்பரை தேங்காய் கிலோ ஒன்றுக்கு 140 கொள்முதல் செய்ய வேண்டும், அனைத்து தென்னை மரங்களுக்கும் பயிர் இன்சூரன்ஸ் வழங்க வேண்டும், சேலம் மாவட் டத்தில் நிபந்தனை இன்றி விவசாயிகளிட மிருந்து தேங்காய் கொப்பரையை அரசு கொள்முதல் செய்ய வேண்டும், தேங்காய் எண்ணெய்க்கு ஜி.எஸ்.டி, வரியை ரத்து செய்ய வேண்டு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. போராட் டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • கொப்பரை தேங்காய் கொள்முதலை அதிகரிக்க வேண்டும்.
    • ஏக்கர் ஒன்றுக்கு 291 கிலோ கொள்முதல் செய்யப்பட்டு கிலோ ஒன்றுக்கு ரூபாய் 108.60 வீதம் வழங்கப்பட்டு வருகிறது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் மற்றும் நகர்ப்புறங்களில் ஏராளமான தென்னை சாகு படி செய்யப்பட்டுள்ளது. கரும்பு பயிருக்கு மாற்றாக கரும்பு தோட்டங்கள் உள்ள இடங்களில் தென்னை மரங் கள் நடவு செய்யப்பட்டுள் ளது.

    இந்நிலையில் தேங்காய் விலை படு பாதாளத்தை நோக்கி சென்றுவிட்ட நிலை யில் தென்னை விவசாயிகள் மாற்று வழி தெரியாத நிலை யில் கவலையில் உள்ளனர். தேங்காய்க்கு விலை நிர்ண யம் செய்ய இயலாத நிலை யில் தமிழக அரசு அறிவித் துள்ள கொப்பரை தேங்காய் தற்போது கிலோ ஒன்றுக்கு ரூ. 108.60 வீதம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் சார்பில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    தென்னை விவசாயிகளி டம் ஏக்கர் ஒன்றுக்கு 291 கிலோ கொள்முதல் செய் யப்பட்டு கிலோ ஒன்றுக்கு ரூபாய் 108.60 வீதம் வழங்கப் பட்டு வருகிறது. இது வெளி மார்க்கெட் ரேட்டை விட மிகவும் அதிகமாகும். என வே ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தென்னை விவசாயி கள் கொப்பரை தேங்காயை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்க மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் தமிழக அரசு ராஜபாளையம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் 300 மெட்ரிக் டன் கொள்முதல் என்று இருந்த தை தற்போது 200 மெட்ரிக் டன் மட்டுமே கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயித் துள்ளது. ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 500 மெட்ரிக் டன் வரை கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய இருக் கும் நிலையில் 200 ஆக குறைத்து இருப்பது தென்னை விவசாயம் இடை யே மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே தமிழக அரசு பரிசீலனை செய்து ராஜபாளையம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு 500 மெட்ரிக் டன் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டுமாய் தென்னை விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

    • மாநாட்டில் தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்து தேங்காய் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
    • நல்லதங்காள் அணைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய நிலம் இழப்பீடு தொகையை பொதுப்பணித்துறையினர் உடனடியாக வழங்க வேண்டும்.

    தாராபுரம்:

    தாராபுரம் அருகே உள்ள சந்திராபுரத்தில் 5-ந் தேதி உழவர் உழைப்பாளர் கட்சி மற்றும் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் உழவர் தியாகிகள் தின மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை பார்வையிட உழவர் உழைப்பாளர் கட்சி மாநில தலைவர் செல்லமுத்து தாராபுரம் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    விவசாயிகளின் கோரிக்கைக்காக நடந்த போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கான மாநாடு தாராபுரத்தில் நாளை 5-ந் தேதி நடக்கிறது. மாநாட்டில் தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்து தேங்காய் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். ஒரு காலி மதுபாட்டில் கொடுத்தால் 10 ரூபாய். ஆனால் உழைத்து உற்பத்தி செய்த தேங்காய் 8 ரூபாய்.தேங்காயை விவசாயிகளிடம் இருந்து முழுமையாக கொள்முதல் செய்ய வேண்டும். எனவே அந்த முழுமையான கோரிக்கையை இந்த மாநாட்டிலே எடுத்து இருக்கிறோம்.

    மேலும் பால், வெங்காயம், மக்காச்சோளம் போன்ற வேளாண் உற்பத்தி பொருள் அனைத்திற்கும் கட்டுப்படியான விலை கிடைக்க வேண்டும் என்று மாநாட்டிலே வலியுறுத்த இருக்கிறோம்.ஆனைமலை திட்டத்திற்கு ஒரு தீர்வு காண வேண்டும். உடனடியாக அதற்கு நிதி ஒதுக்க அறிவிப்பு செய்ய வேண்டும். கர்நாடக மந்திரி தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட விடமாட்டேன் என்று சொல்கிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி அந்த தண்ணீரை உரிய காலத்தில் விவசாயிகளுக்கு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.தமிழ்நாடு அரசு வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி இருப்பது கண்டிக்கத்தக்கது.

    நல்லதங்காள் அணைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய நிலம் இழப்பீடு தொகையை பொதுப்பணித்துறையினர் உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.  

    • அலுவலகத்தில் ஒரு வாரத்திற்குள் செலுத்தி நிரந்தர ரசீது பெற்றுக்கொள்ளலாம்.
    • தேங்காய்களுக்கு, தேங்காய் பெறப்படும் இடத்திலேயே தற்காலிக ரசீது வழங்கப்படும்.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாய குத்தகைதாரர்கள் பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில் காத்திருப்பு போ ராட்டம் அறிவிக்கப்பட்டது.

    அதற்காக நேற்று அந்த அமைப்பை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் வந்திருந்தனர். அப்போது தாசில்தார் அலுவலகத்தில் சமாதான கூட்டம் தாசில்தார் மகேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.

    இதில் முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் கோவிலூர் செயல் அலுவலர், வருவாய்த்துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதேபோல், போராட்டக்குழு சார்பில் அமைப்பின் மாநில தலைவர் செருகளத்தூர் ஜெயசங்கர், திருவாரூர் மாவட்ட தலைவர் துரையரசன், நாகை மாவட்ட தலைவர் விவேக் திரயகராஜன், திண்டுக்கல் மாவட்ட தலைவர் மூர்த்தி, மாநில செயலாளர் குன்னலூர் சந்திரசேகரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் தரப்பில் நெல் விவசாயிக்கு வழங்கப்பட்ட தற்காலிக ரசீதை அலுவலகத்தில் ஒரு வாரத்திற்குள் செலுத்தி நிரந்தர ரசீது பெற்றுக்கொள்ளலாம், தேங்காய்களுக்கு, தேங்காய் பெறப்படும் இடத்திலேயே தற்காலிக ரசீது தேங்காய்களின் எண்ணிக்கை குறிப்பிட்டு வழங்கப்படும், ஆர்.டி.ஆர். பதிவிற்கு விண்ணப்பம் தெரிவிக்கப்படுகிறது என உறுதியளிக்கப்பட்டது.

    பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில் காத்திருப்பு போராட்டம் கைவி டப்பட்டது.

    • தேசிய வேளாண்மை சந்தைக்கு கடந்த வாரம் 8 ஆயிரத்து 155 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
    • மொத்தம் ரூ.5 லட்சத்து 60 ஆயிரத்து 698-க்கு விற்பனை நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு கடந்த வாரம் 8 ஆயிரத்து 155 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

    இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.83.69-க்கும், குறைந்தபட்சமாக ரூ.58.71- க்கும், சராசரியாக ரூ.81.99-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.5 லட்சத்து 85 ஆயிரத்து 587-க்கு ஏலம் போனது.

    நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 7 ஆயிரத்து 234 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.88.30-க்கும், குறைந்த பட்சமாக ரூ.55.80-க்கும், சராசரியாக ரூ.82.90-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.5 லட்சத்து 60 ஆயிரத்து 698-க்கு விற்பனை நடைபெற்றது.

    • சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
    • இங்கு வாரந்தோ றும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.

    பரமத்தி வேலூர்:

    சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோ றும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.

    இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.

    இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 54.12 1/2 குவிண்டால் எடை கொண்ட 15,820 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.26.55-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.21.00-க்கும், சராசரி விலையாக ரூ.25.29-க்கும் என மொத்தம் ரூ.ஒரு லட்சத்து 26ஆயிரத்து 724-க்கு விற்பனையானது.

    தேங்காய் பருப்பு

    அதேபோல் 200.37 குவிண்டால் எடை கொண்ட 466-மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.83.69-க்கும், குறைந்த பட்ச விலையாக ரூ.81.69-க்கும், சராசரி விலையாக ரூ.82.99-க்கும் விற்பனையானது. 2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.79.69-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.65.99-க்கும், சராசரி விலையாக ரூ.77.89-க்கும் என மொத்தம் ரூ.15லட்சத்து 44ஆயிரத்து 780-க்கு விற்பனை யானது.

    எள்

    அதேபோல் 383.43 குவிண்டால் எடை கொண்ட 513-மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. இதில் கருப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.156. 99-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.130.99-க்கு ம், சராசரி விலையாக ரூ.148.99-க்கும், சிவப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.157.80-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.140.10-க்கும், சராசரி விலையாக ரூ.153. 89-க்கும், வெள்ளை எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.164.10-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.155.10-க்கும், சராசரி விலையாக ரூ.163.10-க்கும் என மொத்தம் ரூ.56லட்சத்து 91ஆயிரத்து 118-க்கு விற்ப னையானது.

    சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ. 73 லட்சத்து 62 ஆயிரத்து 642-க்கு விற்பனையானது.

    • 4 ஆயிரத்து 274 தேங்காய்களை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
    • ஒரு கிலோ தேங்காய் அதிகபட்ச விலையாக ரூ.25.25-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.21.25-க்கும் ஏலம் விடப்பட்டது.

    காங்கயம் :

    முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை தேங்காய், தேங்காய் பருப்பு, எள் ஆகிய வேளாண் விளை பொருள்களின் ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த ஏலங்களில் முத்தூர் நகர மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதி விவசாயிகள், ஈரோடு மாவட்டம் கொல்லன்கோவில், சிவகிரி பேரூராட்சி பகுதிகள், அஞ்சூர் ஊராட்சி, கரூர் மாவட்டம் அஞ்சூர், கார்வழி ஊராட்சி பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் வேளாண் விளை பொருட்களை விற்று பலன் அடைந்து வருகின்றனர்.

    இதன்படி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு சுற்றுவட்டார விவசாயிகள் 4 ஆயிரத்து 274 தேங்காய்களை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இவை டெண்டர் முறையில் ஏலம் நடைபெற்றது. இதில் ஒரு கிலோ தேங்காய் அதிகபட்ச விலையாக ரூ.25.25-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.21.25-க்கும் ஏலம் விடப்பட்டது.

    மேலும் 47 தேங்காய் பருப்பு மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ.81.10-க்கும், குறைந்தபட்சமாக என ரூ.57.25-க்கும் ஏலம் போனது. ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த வாரத்தை விட இந்த வாரம் 1,105 தேங்காய்களும், 13 தேங்காய் பருப்பு மூட்டைகளும் கூடுதலாக கொண்டு வரப்பட்டிருந்தது.

    தேங்காய், தேங்காய் பருப்பு 3¼ டன் அளவில் மொத்தம் ரூ.1 லட்சத்து 41 ஆயிரத்து 272-க்கு ஏலம் விடப்பட்டது. இந்த ஏலங்களில் திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர். இத்தகவலை முத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர் கே.தங்கவேல் தெரிவித்து உள்ளார்.

    • கடந்த சில நாட்களாக மார்க்கெட்டுக்கு வழக்கத்தை விட தேங்காய் வரத்து 50 சதவீதம் அதிகரித்துள்ளது.
    • கடந்த ஆண்டு பரவலாக பெய்த மழையால், தேங்காய் அமோக விளைச்சலை தந்துள்ளது.

    சேலம்:

    தமிழகத்தில் பொள்ளாச்சி, சேலம், உடுமலைப்பேட்டை, பெருந்துறை, கோவை, ஈரோடு, கன்னியாகுமரி, தஞ்சை உள்ளிட்ட பகுதிகளிலும், கேரளாவிலும் தென்னை மரங்கள் அதிகளவில் உள்ளன. இந்த பகுதிகளில் பறிக்கப்படும் தேங்காய் இந்தியா முழுவதும் அனுப்பப்படுகிறது. கடந்த ஆண்டு பெய்த மழையால் அனைத்து பகுதிகளிலும் தென்னை மரங்களில் தேங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது.

    இதன் காரணமாக கடந்த சில நாட்களாக மார்க்கெட்டுக்கு வழக்கத்தை விட தேங்காய் வரத்து 50 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் தேங்காய் விலை சரிய தொடங்கி உள்ளது. குறிப்பாக சேலம் மார்க்கெட்டில் ஒரு கிலோ தேங்காய் ரூ.32 முதல் ரூ.35 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    இது குறித்து சேலம் தேங்காய் மொத்த வியாபாரிகள் கூறுகையில், சேலம் மார்க்கெட்டுக்கு நாள் ஒன்றுக்கு 300 முதல் 400 டன் தேங்காய் விற்பனைக்கு வருகிறது. இதனை சில்லரை வியாபாரிகள் வாங்கிச்சென்று விற்பனை செய்கின்றனர். கடந்த ஆண்டு பரவலாக பெய்த மழையால், தேங்காய் அமோக விளைச்சலை தந்துள்ளது. இதனால் மார்க்கெட்டுக்கு வழக்கத்தை விட தேங்காய் வரத்து கூடியுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு டன் தேங்காய் ரூ.30 ஆயிரத்திற்கு விற்றது. தற்போது டன்னுக்கு ரூ.4 ஆயிரம் சரிந்து ரூ.26 ஆயிரம் என விற்பனை செய்யப்படுகிறது. சில்லரையில் சிறிய அளவுள்ள தேங்காய் ரூ.8 என்றும், நடுத்தர அளவு ரூ.10 முதல் ரூ.15 என்றும், பெரிய தேங்காய் ரூ.18 முதல் ரூ.20 என்றும் விற்பனை செய்யப்படுகிறது. எதிர்வரும் நாட்களில் தேங்காய் வரத்து அதிகரிக்கும். அப்போது மேலும் விலை சரிய வாய்ப்புள்ளது என்றனர்.

    • ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங் காய் மறைமுக ஏலம் வேளாண்மை துணை இயக்குனரும், முதுநிலை செயலாளர் தலைமையில் தேசிய வேளாண் மின்னணு சந்தை என்று இணையதளம் மூலம் நடைபெற்றது.
    • மொத்தம் 2 டன் எடை யுள்ள கொப்பரை தேங்காய் ரூ. 2 லட்சத்துக்கு ஏலம் போனதாக ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப் பாளர் பிரபாவதி தெரிவித்தார்.

    சேலம்:

    சேலம் அருகே உத்தமசோழபுரத்தில் உள்ள சேலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங் காய் மறைமுக ஏலம் வேளாண்மை துணை இயக்குன ரும், முதுநிலை செயலாளருமான கண்ணன் தலைமை யில் தேசிய வேளாண் மின்னணு சந்தை என்று இணையதளம் மூலம் நடைபெற்றது. இதில் 20 விவசா யிகளும், சேலம், நாமக்கல், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வியாபாரிகளும் கலந்து கொண்டனர். கொப்பரை தேங்காய் கிலோ குறைந்தபட் சமாக 55 ரூபாய் 75 காசுக்கும், அதிகபட்சமாக 82 ரூபாய்க்கும் விற்பனையானது. மொத்தம் 2 டன் எடை யுள்ள கொப்பரை தேங்காய் ரூ. 2 லட்சத்துக்கு ஏலம் போனதாக ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப் பாளர் பிரபாவதி தெரிவித்தார்.

    • ஒரு கிலோ ரூ. 20.65 முதல் ரூ. 26.60 வரை விற்பனையானது
    • ஏலத்தில் மொத்தம் 56 விவசாயிகள், 8 வியாபாரிகள் கலந்து கொண்டனா்.

    வெள்ளகோவில் :

    முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 3.50 டன் தேங்காய், கொப்பரை விற்பனை சனிக்கிழமை நடைபெற்றது.இந்த வார ஏலத்துக்கு 2,004 கிலோ எடையிலான தேங்காய் வரத்து இருந்தது. ஒரு கிலோ ரூ. 20.65 முதல் ரூ. 26.60 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 23.55.

    கொப்பரை 1,544 கிலோ வரத்து இருந்தது. ஒரு கிலோ ரூ. 60.10 முதல் ரூ. 81.55 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 80.20.ஏலத்தில் மொத்தம் 56 விவசாயிகள், 8 வியாபாரிகள் கலந்து கொண்டனா். ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 1.67 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா். 

    • பரமத்திவேலூர் வெங்கமேட்டில் மின்னணு தேசிய வேளாண்மை சந்தை (இ-நாம் செயலி) மூலம் நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது.
    • இதில் 7 ஆயிரத்து 857‌ கிலோ தேங்காய் பருப்பு, மொத்தம் ரூ.5 லட்சத்து 99 ஆயிரத்து 531-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஏலத்தில் தேங்காய் பருப்பு அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.84.39-க்கும், குறைந்த பட்சமாக ரூ.51.65-க்கும், சராசரியாக ரூ.84.39-க்கும் ஏலம் போனது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வெங்கமேட்டில் மின்னணு தேசிய வேளாண்மை சந்தை (இ-நாம் செயலி) மூலம் நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது.

    இதில் 7 ஆயிரத்து 857 கிலோ தேங்காய் பருப்பு, மொத்தம் ரூ.5 லட்சத்து 99 ஆயிரத்து 531-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    ஏலத்தில் தேங்காய் பருப்பு அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.84.39-க்கும், குறைந்த பட்சமாக ரூ.51.65-க்கும், சராசரியாக ரூ.84.39-க்கும் ஏலம் போனது.

    இ-நாம் செயலி மூலம் ஏலம் நடைபெற்றது, விவசாயிகளுக்கு விற்பனை தொகையானது அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டது. இதனால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ×