search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூய்மை பணி"

    • வேதாரண்யம் கடற்கரையில் தூய்மைப்பணி மேற்கொண்டனர்.
    • அரசு மாதிரிப்பள்ளி மாணவர்கள் 100 பேர் இதில் கலந்து கொண்டனர்.

    நாகப்பட்டினம்:

    சென்னை சுற்றுச்சூழல் துறையும் நாகப்பட்டினம் மாவட்ட தேசிய பசுமை படையும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியமும் கிரேட் எப் தொண்டு நிறுவனமும் இணைந்து உலக கடற்கரை தூய்மை தினத்தை முன்னிட்டு வேதாரண்யம் கடற்கரையில் தூய்மைப்பணி மேற்கொண்டனர்.

    தோப்பு துறை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 100 பேர் இதில் கலந்து கொண்டனர்.

    தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் திலீப் குமார் தூய்மை பணியினை தொடங்கி வைத்தார்.

    கடற்கரை தினம் கொண்டாடப்படும் காரணம், கடற்கரை தினத்தை ஒட்டி ஐநா சபை வகுத்த நெறிமுறைகள் மக்கும் குப்பை மக்கா குப்பை பிரித்தெடுத்தல் இவற்றை பற்றி தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் எடுத்துரைத்தார்.

    நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க தலைவர் கார்த்திகேயன் மற்றும் ரோட்டரி சங்கத்தினர், பசுமை செயல்பாடுகளை கண்காணிக்கும் அலுவலர் பசுமை டிவைனியா மாணவர்களுக்கு மஞ்சப்பை வழங்கினார்.

    சுற்றுச்சூழல் துறை சார்பில் மாணவர்க ளுக்கு பச்சை வண்ண த்தொப்பி வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் தோப்பு த்துறை அரசினர் மேல்நி லைப்பள்ளி தலைமையாசி ரியர் எஸ் கவி நிலவன் தேசிய பசுமை படை ஆசிரியர் வி கண்ணையன், மாவட்ட சூழல் ஒருங்கிணைப்பாளர். இமய சிவன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் மணி வண்ணன், மற்றும் ஆசிரியர்கள் தூய்மை பணியாளர்கள், ரோட்டரி சங்கத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    உலக கடற்கரை தூய்மை தினத்தை (ஒவ்வொரு வருடம் செப்டம்பர் மூன்றாவது சனிக்கிழமை) முன்னிட்டு உலக ஓசோன் தினத்தை முன்னிட்டும் கலைக்கு ழுவினர் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்.

    பின்னர் நகராட்சி தலைவர் புகழேந்தி விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்.

    பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று உப்பு சத்தியாகிரக மண்டபத்தை அடைந்தது.

    மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை பொது மக்களுக்கு விநியோகித்தனர். முடிவில் மாணவர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    • தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றதால் காலை 6 மணி முதல் 12 மணி வரை தரிசனம் ரத்து செய்யப்பட்டது.
    • 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் பிரம்மோற்சவ விழா 26-ந் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெறுகிறது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 17-ந் தேதி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் சுத்தம் செய்யும் பணி இன்று காலை நடந்தது.

    பரிமளம் என்னும் பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு மூலவர் சன்னதி, கொடிமரம் மற்றும் கோவில் வளாகம் முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டன.

    கோவில் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றதால் காலை 6 மணி முதல் 12 மணி வரை சுமார் 6 மணி நேரம் தரிசனம் ரத்து செய்யப்பட்டது.

    இதேபோல் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் மற்றும் ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.

    வரும் 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் பிரம்மோற்சவ விழா 26-ந் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெறுகிறது.

    பிரம்மோற்சவ விழா நாட்களில் ஏழுமலையான் சமேதராக ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோர் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

    பிரம்மோற்சவ விழாவையொட்டி கோவில் வளாகம் முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட பூக்கள் பழங்கள் கொண்டு அலங்கரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    கோவிலில் வெளிப்புறத்தில் வண்ண வண்ண மின்விளக்குகள் கொண்டு அலங்கரிக்கப்படுகின்றன.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 66,199 பேர் தரிசனம் செய்தனர். 29,351 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.

    ரூ.4.17 கோடி உண்டியல் காணிக்கை வசூல் ஆனது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் சுமார் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    • திருக்கொள்ளிக்காடு கிராமத்தில் பிரசித்திபெற்ற பொங்கு சனீஸ்வரர் கோவில் உள்ளது.
    • பணியாளர்கள் கோவிலின் உள்பிரகாரம், வெளிபிரகாரம் உள்ளிட்ட இடங்களை சுத்தம் செய்தனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அடுத்த திருக்கொள்ளிக்காடு கிராமத்தில் பிரசித்திபெற்ற பொங்கு சனீஸ்வரர் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் நேற்று தூய்மை பணி நடந்தது.

    இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் ஆணைப்படி, கோவில் செயல் அலுவலர் ஜோதி மேற்பார்வையில், நடந்த திருப்பணியில் ஏராளமான பணியாளர்கள் கலந்து கொண்டு கோவிலின் உள்பிரகாரம், வெளிபிரகாரம், நந்தவனம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுத்தம் செய்தனர். 

    • பாபநாசம் அரசு பள்ளி தேசிய மாணவர் படை உள்ளிட்டோர் இணைந்து தூய்மை பணிகள் மேற்கொண்டனர்.
    • பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலிகபிலன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ெரயில் நிலைய வளாகத்தில் பாபநாசம் ரயில் பயணிகள் சங்கம் மற்றும் பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தேசிய மாணவர் படை உள்ளிட்டோர் இணைந்து தூய்மை பணிகள் மேற்கொண்டனர்.

    தூய்மை பணியை ஒட்டி தேசிய மாணவர் படையினர் ரெயில் நிலைய நடைமேடை பகுதியில் தேங்கியிருந்த குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தி, தூய்மை செய்தனர்.

    மேலும் ெரயில் தண்டவாள பகுதிகளில் தேங்கியிருந்த குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகளை அள்ளியும், வளர்ந்திருந்த செடி, கொடிகளை வெட்டி அப்புறப்படுத்தியும் தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.

    பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலிகபிலன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.

    தஞ்சை சரக ெரயில்வே வணிக ஆய்வாளர் ராம்குமார், ெரயில்வே முதுநிலை பொறியாளர் (பணிகள்) பிரேம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த பணிகளை உடற்கல்வி ஆசிரியர் செல்வகுமார், பட்டதாரி ஆசிரியர் சரவணன் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை பாபநாசம் ரயில் பயணிகள் சங்க செயலாளர் சரவணன் செய்திருந்தார்.

    • மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு குளத்தில் தேங்கி இருந்த குப்பைகளை அகற்றி தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
    • 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் அரிமா சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    நத்தம்:

    நத்தத்தில் உள்ள அம்மன்குளத்தில் அரிமா சங்கம் மற்றும் மீனாட்சி மெட்ரிக் பள்ளி நிர்வாகம் சார்பில் தூய்மை பணிகள் முகாம் நடந்தது. இதற்கு நத்தம் அரிமா சங்க தலைவர் மகேஸ்வரன் தலைமை தாங்கினார்.

    பள்ளி முதல்வர் சத்யா முன்னிலை வகித்தார். இதில் மீனாட்சி பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு குளத்தில் தேங்கி இருந்த குப்பைகளை அகற்றி தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

    இந்த தூய்மை பணியில் 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் அரிமா சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • நெற்குப்பையில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
    • பிடாரி அம்மன் கோவிலில் தூய்மை பணி நடந்தது.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நெற்குப்பை பேரூராட்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழா நடந்தது. பேரூராட்சி சேர்மன் பழனியப்பன் (பொறுப்பு) தலைமை வகித்தார்.

    இளநிலை உதவியாளர் சேரலாதன், வரித்தண்டர் துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள் கவுரவிக்கப் பட்டனர். தூய்மை பணியா ளர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கப்பட்டது. மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது. பின்னர் பிடாரி அம்மன் கோவிலில் தூய்மை பணி நடந்தது.

    • நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
    • நிகழ்ச்சியில் தி.மு.க. நிர்வாகிகள், சுகாதார ஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் நகராட்சியில் தூய்மைப் பணிகளுக்காக 15-வது நிதி குழு மானியம் மூலம் 20 பேட்டரி வாகனங்கள் சுமார் ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    ராஜா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

    நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் தலைமை தாங்கினார். கமிஷனர் சபாநாயகம், சுகாதார அலுவலர் பாலச்சந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிய பேட்டரி வாகனங்களை நகராட்சி பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மேலநீலதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, நகர செயலாளர் பிரகாஷ், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சரவணன், சிவகிரி சேது சுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர்கள் வெங்கட்ராமன், மாரிசாமி மாரிமுத்து, வக்கீல் சதீஷ், வீரமணி, தாஸ், ஜெயக்குமார், பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • உடல் நலம் பாதித்த மனைவிக்கு பதிலாக போனவர்
    • நாகர்கோவிலில் இன்று பரிதாபம்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் அருகே உள்ள கீழகோணம் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 49). இவரது மனைவி முத்துசெல்வம். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். முத்து செல்வம் நாகர்கோவில் மாநக ராட்சியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.

    முத்து செல்வத்துக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தது. இதனால் அவரது பணியை கணவர் பரமசிவம் மேற்கொண்டார். இன்று காலை பரமசிவம் கோணம் கம்பி பாலம் பகுதியில் கால்வாயில் முட்புதர்களை வெட்டிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த பகுதியில் கிடந்த விஷ பாம்பு பரமசிவத்தை கடித்தது.

    இதையடுத்து அவர் கூச்சலிட்டார். உடனே பணியில் இருந்த சக ஊழியர்கள் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    பரமசிவத்தை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். பரமசிவத்தின் உடல் பிரேத  பரிசோதனைக்கு ஆசாரிப் பள்ளம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து ஆசாரிப்பள்ளம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். தூய்மை பணியின் போது ஒருவர் பாம்பு கடித்து பலியான சம்பவம் மாநகராட்சி ஊழியர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சியில் 5-ம் கட்ட ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம் நடைபெற்றது.
    • முகாமிற்கு பேரூராட்சி தலைவர் கருணாநிதி தலைமையில் துணைத் தலைவர் அன்பரசன், செயல் அலுவலர் ரவிசங்கர், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சியில் 5-ம் கட்ட ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பேரூராட்சி தலைவர் கருணாநிதி தலைமையில் துணைத் தலைவர் அன்பரசன், செயல் அலுவலர் ரவிசங்கர், வார்டு உறுப்பினர்கள். இளநிலை உதவியாளர் ஜெயசேகர், துப்புரவு மேற்பார்வை யாளர் குணசேகரன், பில் கலெக்டர்கள் குணசேகரன், பன்னீர்செல்வம், அலுவலக பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியா ளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக இணைந்து 9-வது வார்டு பகுதிகளில் உள்ள செடி, கொடி, முட்புதர்கள் அகற்றுதல், தெருக்களை சுத்தம் செய்தல், குடிநீர் பைப்லைன் பழுதுகள் சரி செய்தல், தெருமின் விளக்குகள் மற்றும் மின் இணைப்புகள், மின்மோட்டார்கள் பரா மரிப்பு செய்தல் போன்ற பொதுமக்களின் அத்தியா வசிய தேவைகள் அனைத்தும் மேற்கொண்டனர்.

    • நெற்குப்பை பேரூராட்சி கூட்டத்தில் புதிய தலைவர் தேர்வு செய்யப்பட்டார்.
    • முடிவில் தூய்மை பணி மேற்பார்வையாளர் சிற்றரசு நன்றி கூறினார்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நெற்குப்பையில் பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மன்ற செயல் அலுவலர் கணேசன் முன்னிலை வகித்தார்.பேரூராட்சியின் முன்னாள் சேர்மன் புசலான் உடல் நலகுறைவால் கடந்த சில தினங்களுக்கு முன்பு மரண மடைந்தார்.

    இதனால் துணைத்தலைவ ராக இருந்த பழனியப்பன் பொறுப்பு சேர்மனாக பதவி ஏற்று கொண்டார். முன்னதாக இளநிலை உதவியாளர் சேரலாதன் அனைவரையும் வரவேற் றார். தொடர்ந்து முன்னாள் சேர்மன் புசலான் மறைந் ததையொட்டி இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு மவுன அஞ்சலி செலுத்தப் பட்டது.

    அதனை தொடர்ந்து ஓய்வு பெறும் செயல் அலுவலர் கனே சனுக்கு வார்டு கவுன்சிலர்களும் அலுவலர் பணியாளர்களும் பொன்னாடை போர்த்தி பணிநிறைவு வாழ்த்துக்கள் தெரிவித்த னர். கூட்டம் முடிவில் தூய்மை பணி மேற்பார்வையாளர் சிற்றரசு நன்றி கூறினார்.

    • கடந்த 30 வருடங்களாக நஞ்சம்மாள் என்பவர் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார்.
    • பணியாற்றிய இத்தனை வருடத்தில் எந்தவிதமான கோபமும் படாமல் பொதுமக்களிடம் நன்மதிப்பை பெற்று வந்துள்ளார்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ளது கூடலூர் நகராட்சி.

    இந்த நகராட்சியில் கடந்த 30 வருடங்களாக நஞ்சம்மாள் என்பவர் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார்.

    அவர் தற்போது பணி நிறைவு பெற்றுள்ளார். இவர் பணியாற்றிய 30 வருடங்களில் எந்தவிதமான கோபமும் படாமல் பொதுமக்களிடம் நன்மதிப்பை பெற்று வந்துள்ளார்.

    அதுவும் நகராட்சி 19-வது வார்டில் புதுப்புதூர் பகுதியில் மட்டுமே அதாவது ஒரே பகுதியில் மட்டுமே பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் நேற்று அவர் பணி நிறைவு பெற்றதை தொடர்ந்து அந்த பகுதி மக்கள் அவரை கவுரவிக்க முடிவு செய்தனர்.

    இதற்காக சிறப்பு விழா எடுத்தனர். 19-வது வார்டு நகராட்சி கவுன்சிலர் கவிதாராணி அனைவரையும் வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினராக கூடலூர் நகராட்சித்தலைவர் அ.அறிவரசு கலந்துக்கொண்டார். தொடர்ந்து அந்த பகுதி மக்கள் நஞ்சாம்மாள் வேலை செய்தபோது எப்படி நடந்துக்கொண்டார் என்று பெருமையாக தெரிவித்தனர்.

    நகராட்சித்தலைவர் பேசும்போது, பணி நிறைவு பெற்ற நஞ்சம்மாளுக்கு மேற்கொண்டு உதவிகள் செய்யப்படும் என உறுதி அளித்தார்.

    தொடர்ந்து நஞ்சம்மாளுக்கு சால்வைகள், சந்தன மாலைகள் அனுவிக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து பணி நிறைவு பெற்ற நஞ்சம்மாளை கூடலூர் நகராட்சி தலைவர் அ.அறிவரசு தனது ஜீப்பிலேயே அழைத்து சென்று அவரை வீட்டில் விட்டுவிட்டு வந்தார்.

    • பள்ளிகள் அனைத்தையும் சுத்தம் செய்யும் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
    • தொழிலாளர்களுடன் சேர்ந்து ஆசிரியர் வசந்தா பள்ளியை சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    வேதாரண்யம்:

    தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் வருகிற 7-ந்தேதி (புதன்கிழமை) திறக்கப்படுகிறது. அதனால் பள்ளிகள் அனைத்தையும் சுத்தம் செய்யும் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல், நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த ஆதனூர் ஊராட்சியில் உள்ள அண்டர்காடு சுந்தரேச விலாஸ் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியிலும் தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், அப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் வசந்தா என்பவர் தொழிலாளர்களுடன் சேர்ந்து பள்ளி வளாகம், வகுப்பறைகள், சமையல் கூடம் என பள்ளியின் அனைத்து பகுதியிலும் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார்.

    தொழிலாளர்களுடன் சேர்ந்து ஆசிரியர் வசந்தா பள்ளியை சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் ஆசிரியரை பாராட்டி வருகின்றனர்.

    ×