என் மலர்
நீங்கள் தேடியது "Purification Mission"
- திருக்கொள்ளிக்காடு கிராமத்தில் பிரசித்திபெற்ற பொங்கு சனீஸ்வரர் கோவில் உள்ளது.
- பணியாளர்கள் கோவிலின் உள்பிரகாரம், வெளிபிரகாரம் உள்ளிட்ட இடங்களை சுத்தம் செய்தனர்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அடுத்த திருக்கொள்ளிக்காடு கிராமத்தில் பிரசித்திபெற்ற பொங்கு சனீஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவிலில் நேற்று தூய்மை பணி நடந்தது.
இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் ஆணைப்படி, கோவில் செயல் அலுவலர் ஜோதி மேற்பார்வையில், நடந்த திருப்பணியில் ஏராளமான பணியாளர்கள் கலந்து கொண்டு கோவிலின் உள்பிரகாரம், வெளிபிரகாரம், நந்தவனம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுத்தம் செய்தனர்.






