என் மலர்
உள்ளூர் செய்திகள்

தூய்மை பணி மேற்கொண்ட மாணவ-மாணவிகள்.
நத்தம் அம்மன்குளத்தில் தூய்மை பணி மேற்கொண்ட மாணவர்கள்
- மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு குளத்தில் தேங்கி இருந்த குப்பைகளை அகற்றி தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
- 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் அரிமா சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நத்தம்:
நத்தத்தில் உள்ள அம்மன்குளத்தில் அரிமா சங்கம் மற்றும் மீனாட்சி மெட்ரிக் பள்ளி நிர்வாகம் சார்பில் தூய்மை பணிகள் முகாம் நடந்தது. இதற்கு நத்தம் அரிமா சங்க தலைவர் மகேஸ்வரன் தலைமை தாங்கினார்.
பள்ளி முதல்வர் சத்யா முன்னிலை வகித்தார். இதில் மீனாட்சி பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு குளத்தில் தேங்கி இருந்த குப்பைகளை அகற்றி தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
இந்த தூய்மை பணியில் 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் அரிமா சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story






