search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துப்பாக்கி"

    • சுப்பிரமணியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    • குப்பை தொட்டி அருகே துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கோவை:

    கோவை சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் அண்ணா நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(வயது45).

    இவர் பள்ளபாளையம் பேரூராட்சியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த 1-ந் தேதி புத்தாண்டு தினத்தன்று, சுப்பிரமணியன் மற்றும் அவருடன் வேலை பார்க்கும் பெண் ஒருவர் அந்த பகுதிகளில் குப்பைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    பள்ளபாளையம் சாவித்ரி மில் பகுதியில் உள்ள குப்பை தொட்டியில் இருந்த குப்பைகள் அனைத்தையும் எடுத்து சுத்தம் செய்யும் பணியில் சுப்பிரமணியன் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது குப்பை தொட்டியின் அருகே ஒரு கறுப்பு நிற பெட்டி இருந்தது. இதைபார்த்த சுப்பிரமணி அருகே சென்று அந்த பெட்டியை கையில் எடுத்தார்.

    பின்னர் அதனை திறந்து பார்த்தார். அப்போது அதில் துப்பாக்கி ஒன்று இருந்தது. இதையடுத்து அவர் யாருக்கும் தெரியப்படுத்தாமல் அந்த பெட்டியையும், துப்பாக்கியையும் எடுத்து கொண்டு தனது வீட்டிற்கு சென்று விட்டார்.

    இந்த நிலையில் துப்பாக்கி வைத்திருந்தால் மாட்டிகொள்வோம் என அவருக்கு பயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் போலீஸ் அவசர எண்ணாண 100 தொடர்பு கொண்டார். அப்போது தான் கீழே கிடந்து ஒரு துப்பாக்கி எடுத்ததாகவும், அதனை தனது வீட்டில் வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

    இதையடுத்து சூலூர் போலீசார் சுப்பிரமணியின் வீட்டிற்கு சென்றனர். அங்கு இருந்த துப்பாக்கியை எடுத்து கொண்டனர். மேலும் சுப்பிரமணியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    துப்பாக்கி எப்படி கிடைத்தது, எங்கு கிடந்தது என பல்வேறு கேள்விகளை அவரிடம் கேட்டு விசாரித்தனர். அவர் கீழே கிடந்து எடுத்ததாக பதில் கூறி வருகிறார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

    மேலும் அந்த துப்பாக்கியையும் போலீசார் ஆய்வு செய்தனர். அதில் மேட் இன் ஜெர்மனி என எழுதப்பட்டிருந்தது.

    இந்த துப்பாக்கி ஒரிஜினலா அல்லது போலியா என்பது தெரியவில்லை. மேலும் சூலூர் பகுதி வழியாக காரில் ஹவாலா பணம், கஞ்சா கடத்தல் உள்பட பல்வேறு குற்ற செயல்கள் நடந்து வருகிறது. இதனால் அந்த கும்பல் யாராவது துப்பாக்கியை இங்கு வீசி சென்றனரா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. குப்பை தொட்டி அருகே துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடற்கரை பகுதிகளில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிர கண்காணிப்பு
    • படகு மூலமும் கடல் வழியாக போலீசார் தீவிர ரோந்து சுற்றி வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    குடியரசு தினத்தை யொட்டி கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. கடற்கரைப் பகுதிகளில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

    இந்தியாவின் 74-வது குடியரசு தினவிழா நாளை மறுநாள் (வியாழக்கிழமை) இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படு கிறது. இதை யொட்டி நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத் தப்பட்டு உள்ளது. சர்வதேச சுற்றுலா தலமான கன்னியா குமரி யிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி நகர பகுதி முழுவதும் போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. இதையொட்டி கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கிஏந்திய போலீஸ் பாதுகாப்புபோடப் பட்டு உள்ளது.கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவிலிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    கோவிலுக்கு சாமி கும்பிட வரும் பக்தர்களிடம் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்த பிறகே பக்தர்கள் கோவிலுக்குள் தரிசனம் செய்ய அனுமதிக் கப்படுகிறார்கள். மேலும் கன்னியாகுமரி ரெயில் நிலையம், பஸ் நிலையம், கலங்கரை விளக்கம், கடற்கரைப்பகுதி போன்ற முக்கியமான இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுஉள்ளது.

    கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் குமரி மாவட்டத்தில் உள்ள 48கடற்கரை கிராமங்களி லும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். படகு மூலமும் கடல் வழியாக போலீசார் தீவிர ரோந்து சுற்றி வருகிறார்கள். கடலோர பாதுகாப்பு குழும போலீசார் சொந்தமான சோதனை சாவடிகளில் இரவு பகலாக போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜ்களில் சந்தேகப்படும்படியான நபர்கள் யாரும் தங்கி இருக்கி றார்களா? என்று போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    • கடவூர் அருகே நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யபட்டது
    • இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    கரூர்:

    கடவூர் அடுத்த, பாலவிடுதி எஸ்.ஐ. தர்மலிங்கம் மற்றும் போலீசார் கடவூர், கீழ்சேவாப்பூர் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி, வலையப்பட்டியில் உள்ள கருணகிரி என்பவர் தோட்டத்து கொட்டகையில் சோதனையிட்டனர்.

    அப்போது அங்கு அரசு அனுமதி இல்லாமல் நாட்டு துப்பாக்கி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் துப்பாக்கியை பறிமுதல் செய்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


    • எதிரிகளை அச்சுறுத்த துப்பாக்கி வைத்திருந்த ரவுடி ப்ற்றி பரபரப்பு தகவல்கள் வெளிவந்துள்ளன.
    • ரவுடி அலெக்சிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை கீழஅண்ணா தோப்பை சேர்ந்தவர் அலெக்ஸ் என்ற பெரிய அலெக்ஸ் (வயது 38). பிரபல ரவுடியான இவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்கு கள் நிலுவையில் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக அவர் இட்லி கடை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் அலெக்ஸ் வீட்டில் கைத்துப்பாக்கி இருப்பதாக திலகர்திடல் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில் அவரது வீட்டில் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் நேற்று இரவு அதிரடி சோதனை நடத்தி னர்.

    அப்போது அவரது வீட்டில் ஏர் பிஸ்டல் ரகத்தை சேர்ந்த கைத்துப்பாக்கி இருந்தது. அதனை போலீ சார் கைப்பற்றி சோதனை செய்தனர். அப்போது அது ஆளை கொல்லும் அள வுக்கு சக்தியுடைய துப்பாக்கி இல்லை என்பதும், விசையை அழுத்தினால் அதிக சத்தத்து டன் வெடிக்கும் சாதாரண துப்பாக்கி என்பதும் தெரிய வந்தது.அலெக்ஸ் சில ஆண்டு களுக்கு முன்பு தி.மு.க. முன்னாள் மண்டல தலைவர் குருசாமியுடன் இருந்து உள்ளார். அப்போது தான் அவர் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    குருசாமி சிறைக்கு சென்றதும் திருந்தி வாழ்வது என முடிவெடுத்து அலெக்ஸ் இட்லி கடை நடத்தி வந்துள்ளார். ஏற்கனவே ரவுடியாக இருந்ததால் அவருக்கு மறைமுக எதிரிகள் இருப்ப தாக கூறப்படுகிறது. ஆகவே அவர்களை அச்சுறுத்துவதற்காக அவர் துப்பாக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ரவுடி அலெக்சி டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • துப்பாக்கியில் குண்டு இருந்ததா என்பது குறித்து தகவல் இல்லை.
    • கைத்துப்பாக்கியை எடுத்து செல்ல முறையாக விதிமுறைகளை பின்பற்றவில்லை என்று கூறப்படுகிறது.

    அமெரிக்கா புளோரிடா மாகாணத்தில் உள்ள விமான நிலையத்தில் பயணி ஒருவரிடம் இருந்து துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டது. அமெரிக்க விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணியிடம் அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது கோழிக்கறியில் துப்பாக்கி ஒன்று பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த துப்பாக்கியில் குண்டு இருந்ததா என்பது குறித்து தகவல் இல்லை. இருப்பினும், சம்பந்தப்பட்ட கைத்துப்பாக்கியை எடுத்து செல்ல முறையாக விதிமுறைகளை பின்பற்றவில்லை என்று கூறப்படுகிறது.

    • விண்ணப்பிக்க வில்லையெனில் துப்பாக்கியை அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து விட வேண்டும்.
    • கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தகவல்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் அனு மதி பெற்று துப்பாக்கி வைத் திருப்போர், அதற்கான உரி மத்தினை வருகிற டிசம்பர் மாதம் 31-ந்தேதிக்குள் விண் ணப்பிக்க வேண்டும்.

    அதாவது உரிமம் பெற்ற ஒற்றைக்குழல் மற்றும் இரட் டைக்குழல் துப்பாக்கிகள் (எஸ்.பி.பி.எல்., டி.பி.பி.எல்., ரிவால்வர் மற்றும் பிஸ்டல்) ஆகியவற்றின் உரிமங்களை புதுப்பிக்க வேண்டியவர்கள் 1.1.2023 முதல் 31.12.2027 வரை யிலான 5 ஆண்டுகளுக்குப் புதுப்பிக்கும் பொருட்டு, வரும் டிசம்பர் 31-ந் தேதிக்குள் குமரி மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட நடுவருக்கு கீழ் குறிப்பிட்டுள்ள ஆவணங் கள் மற்றும் உரிய படிவத்து டன் விண்ணப்பிக்குமாறு உரிமத்தாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    அதாவது துப்பாக்கி உரிமம் புதுப்பித்தல் படிவம் (A3) பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், அசல் உரிம புத்தகம், இருப்பிட முகவரிக்கான ஆதார ஆவண நகல் (2), இதையடுத்து 5 ஆண்டிற்குரிய உரிமம் புதுப்பித்தல் கட்டணம் ரூ.2,500 செலுத்திய தற்கான இ-செல்லான் அசல் மற்றும் நகல் மற்றும்துப்பாக்கி உபயோகப்படுத்தி பணி புரியும் பட்சத்தில் தொடர்பு டைய அலுவலகத்தில் இருந்து பணி நிமித்தமாக பெறப்பட்ட கடிதம் ஆகிய வற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

    புதுப்பிக்கப்பட்ட உரிமங்களை சரியான முகவரிக்கும் அனுப்பும் பொருட்டு உரிம தாரர்கள் தங்களது விண்ணப் பங் களில் சரியான அஞ்சல் முகவ ரியை கொடுக்க வேண்டும். விண்ணப்பத் தோடு பணம் செலுத்திய செலானை இணைத்து அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பத்தில் உரிம தாரர் மட்டுமே கையொப்ப மிட்டு அனுப்ப வேண்டும்.துப்பாக்கி உரிமம் செயல் திறன் முடிவடைவதற்கு 60 நாட்களுக்கு முன்பு புதுப்பிப்பதற்கு விண்ணப் பம் அளிக்கப்பட வேண்டும்.

    அவ்வாறு விண்ணப்பிக்க வில்லையெனில், வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் தங்களிடம் உள்ள துப்பாக்கியை அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து விட வேண்டும். தவறினால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
    • இந்த துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வரும் விநாயகர் சதுர்த்தி வரை தொடரும் என போலீசார் தெரிவித்து–ள்ளனர்.

    ஈரோடு:

    விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    விநாயகர் சதுர்த்தி அன்று இந்து முன்னணி சார்பில் ஈரோடு மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்ய–ப்படுகிறது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி விழா காலகட்டத்தில் இந்து முன்னணி பிரமுகர் மீது சமூக விரோதிகள் தாக்குதல் நடத்த கூடும் என்று உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் அச்சுறுத்தல் உள்ளதாக கருதப்படும் இந்து முன்னணி பிரமுகர்கள் 7 பேருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்து முன்னணி மாவட்ட தலைவர் ஜெகதீஷ், மாவட்ட செயலாளர் கார்த்தி, மாநில துணைத் தலைவர் சண்முகசுந்தரம், ஈரோடு மேற்கு மாவட்ட தலைவர் குருசாமி,

    ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் நாகராஜ், மேற்கு மாவட்ட துணை தலைவர் கிருஷ்ணசாமி, சேலம் கோட்ட செயலாளர் பழனிச்சாமிக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்ப–ட்டுள்ளது. இவர்களுக்கு போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இவர்கள் வெளியிடங்களுக்கு செல்லும்போது போலீசார் உடன் செல்வார்கள். இந்த துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வரும் விநாயகர் சதுர்த்தி வரை தொடரும் என போலீசார் தெரிவித்து–ள்ளனர்.

    • டி.என்.பாளையம் அடுத்த வினோபா நகர் ஆவின் பால் கொள்முதல் நிலையம் அருகே ஒரு நாட்டு துப்பாக்கி கிடப்பதாக அப்பகுதியினர் இன்று காலை பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • இதனையடுத்து போலீசார் நாட்டு துப்பாக்கியை மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்த கொங்கர்பாளையம் ஊராட்சி வனப்பகுதியையொட்டிய வினோபா நகர் ஆவின் பால் கொள்முதல் நிலையம் அருகே ஒரு நாட்டு துப்பாக்கி கிடப்பதாக அப்பகுதியினர் இன்று காலை பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே பங்களாப்புதூர் தனிப்பிரிவு போலீஸ்காரர் மஞ்சுநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு கிடந்த ஒற்றை குழல் நாட்டுத் துப்பாக்கியை கைப்பற்றி போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர்.

    துப்பாக்கி கிடந்தது வனப்பகுதியையொட்டிய பகுதி என்பதால் யாரோ வனவிலங்குகளை வேட்டையாட பயன்படுத்தி விட்டு விட்டு சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் விசாரணை நடத்தி வருகின்றார்.

    வழக்கமாக அப்பகுதியில் ரோந்து செல்லும் வனத்துறையினர் இது போன்று துப்பாக்கி கிடப்பதை எப்படி கவனிக்க தவறினர் என்றும் அப்பகுதியினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • போலீசார் காரில் நடத்திய சோதனையில் அவர்கள் ஏர் ரைபிள் துப்பாக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
    • ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் ஏர்ரைபிளை ரூ.32 ஆயிரம் கொடுத்து வாங்கி உள்ளார்.

    ஊட்டி;

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே எருமாடு போலீஸ்நிலையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து 4 பேர் காரில் வந்தனர். போலீசார் காரில் நடத்திய சோதனையில் அவர்கள் ஏர் ரைபிள் துப்பாக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் தேவாலா டி.எஸ்.பி. செந்தில்குமார் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    கேரள மாநிலம் வைத்திரி பகுதியில் சுற்றுலா விடுதி நடத்தி வரும் ஒருவர் துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் ஏர்ரைபிளை ரூ.32 ஆயிரம் கொடுத்து வாங்கி உள்ளார்.

    அதனை கடந்த வாரம் கோழிக்கோடு பகுதிக்கு எடுத்துச் சென்றபோது நண்பர்கள் 4 பேரிடம் கொடுத்துள்ளார். மீண்டும் அவரிடம் வழங்க கோழிக்கோட்டில் இருந்து தமிழக எல்லையான சுல்தான்பத்தேரி, எருமாடு வழியாக இவர்கள் வைத்திரி செல்ல இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை எச்சரித்த போலீசார் பின்னர் கேரள மாநிலத்துக்கே திருப்பி அனுப்பினர்.

    • ரெயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    • ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருடன் திருப்பூர் மாநகர போலீஸ் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    திருப்பூர் :

    அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டம் காரணமாக நாடு முழுவதும் ரெயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருப்பூர் ெரயில் நிலையத்திலும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருடன் திருப்பூர் மாநகர போலீஸ் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில் இன்று முதல் துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட தொடங்கியுள்ளனர். 

    காரில் இருந்த தந்தையின் துப்பாக்கியை எடுத்து விளையாடிய போது எதிர்பாராத விதமாக தோட்டா பாய்ந்து 13 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.
    லக்னோ:

    பஞ்சாப் மாநில மந்திரியிடம் உதவியாளராக இருக்கும் ரவிந்தர் சிங் பாபி, தனது மகன் அஹ்ரானுட்டன் கோடை விடுமுறைக்காக உத்தரகாண்ட் செல்லும் போது, காரின் முன் பகுதியில் உள்ள பெட்டில் இருந்து துப்பாக்கியை விளையாட்டாக எடுத்து அஹ்ரான் சுட, தோட்டா பாய்ந்து 13 வயது அஹ்ரான் உயிரிழந்துள்ளார்.

    இடுப்பில் வைத்திருந்த துப்பாக்கியை காரில் செல்வதால் பெட்டியில் வைத்ததாக கூறிய பாபி, கண் இமைக்கும் நேரத்தில் இது நடந்து விட்டது என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உலகம் முழுவதும் 100 கோடி துப்பாக்கிகள் புழக்கத்தில் உள்ளதாகவும், இவற்றில் 84 சதவிகிதம் பொதுமக்கள் கைகளிலும் மீதமுள்ளவை ராணுவம் மற்றும் போலீசார் கைகளில் உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

    உலகம் முழுவதுமுள்ள ஆயுதங்கள் குறித்த தகவல்களை சேகரிக்கும் ஸ்மால் ஆர்ம்ஸ் சர்வே என்ற அமைப்பு, உலகில் உள்ள 230 நாடுகளில் உள்ள கைத்துப்பாக்கிகள் குறித்த விரிவான ஆய்வு ஒன்றை நடத்தி அது குறித்த புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.

    பொதுமக்கள், ராணுவம் மற்றும் காவல்துறை போன்று சட்டத்தை நிலைநாட்டும் அமைப்புகள் ஆகியவை வைத்திருக்கும் பல்வேறு ரக துப்பாக்கிகள் போன்று உலகில் மொத்தமாக 100 கோடிக்கும் அதிகமான எண்ணிக்கையிலான துப்பாக்கிகள் உள்ளதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் கைத்துப்பாக்கிகளின் எண்ணிக்கை 17% ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதில், அதிர்ச்சி தரும் தகவலாக 85 கோடிக்கும் அதிகமான துப்பாக்கிகள் பொதுமக்கள் வசம் உள்ளது தெரியவந்துள்ளது. இதில் தனியார், தனியாரால் நடத்தப்படும் பாதுகாப்பு நிறுவனங்கள், திருட்டு, கொள்ளை கும்பல்கள் ஆகியவையும் அடங்கும்.

    உலக மக்கள் தொகையில் 4% அளவிற்கே பங்களிப்பை அளிக்கும் அமெரிக்காவில் உலக துப்பாக்கிகளின் எண்ணிக்கையில் 40% அளவுக்கு குவிந்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது. அங்கு 40 கோடி துப்பாக்கிகள் பொதுமக்கள் வசம் உள்ளது.

    அதாவது அங்கு வசிக்கும் 100 பேருக்கு 121 துப்பாக்கிகள் என்பது வியப்பை ஏற்படுத்துகிறது. கடந்த முறை வெளியிடப்பட்ட அறிக்கையில் 100 பேருக்கு 90 என்ற அளவிற்கே அங்கு துப்பாக்கிகளின் எண்ணிக்கை இருந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. அதாவது அங்கு வசிக்கும் மக்களை விட துப்பாக்கிகளின் எண்ணிக்கை அதிகம் என்பது கவனிக்கத்தக்கது.

    இந்த அறிக்கையில் வெளிவந்துள்ள மேலும் ஒரு சுவாரஸ்ய அம்சம் யாதெனில் பொதுமக்களிடம் குவிந்து கிடக்கும் துப்பாக்கிகளின் எண்ணிக்கையில் அமெரிக்காவிற்கு அடுத்து 2வது இடத்தில் இந்தியா இருப்பதே. இந்தியாவில் பொதுமக்கள் கைவசம் சுமார் 7 கோடி துப்பாக்கிகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 

    இந்தியாவிற்கு அடுத்த இடத்தில் 5 கோடி துப்பாக்கிகளை கொண்டுள்ள சீனா 3வது இடத்தையும் பெற்றுள்ளன. எனினும் சராசரியாக மக்கள் தொகை அடிப்படையில் பார்த்தால் 100 நபர்களுக்கு 52 துப்பாக்கிகள் கொண்டுள்ள ஏமன் 2 வது இடத்திலும் 39 துப்பாக்கிகளுடன் மாண்ரினெகரோ மற்றும் செர்பியா நாடுகள் 3வது இடத்தையும் பெற்றுள்ளன.

    இந்த புள்ளிவிவரங்களுக்கு நேர்மாறாக மேலும் ஒரு சுவாரஸ்ய அம்சமும் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. அதாவது இந்தோனேசியா, ஜப்பான் மற்றும் மாலாவி ஆகிய நாடுகளில் வசிப்போரில் 100 நபர்களுக்கு ஒன்றுக்கும் குறைவான துப்பாக்கியே உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த முறை இதே போன்றதொரு ஆய்வை இதே அமைப்பானது, 2007ஆம் நடத்தியிருந்தது. அப்போது உலகில் மொத்தமே 87 கோடி துப்பாக்கிகளே இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அவற்றில் 65 கோடி பொதுமக்களிடம் இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 32% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    ×