search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரமுகர்கள்"

    • வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை தொகுதிகளில் உள்ள முக்கியமான இடங்களில் அணிவகுப்பு நடக்கிறது.
    • பாதுகாப்புக்காக செல்ல 450 ரோந்து வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன.

    சென்னை:

    பொதுமக்கள் அச்சமின்றி ஓட்டுப் போட வர வேண்டும் என்பதற்காக போலீஸ் அணிவகுப்பு நடத்தப்படுவது வழக்கம்.

    சென்னையில் பதட்டமான, மிக பதட்டமான வாக்குச் சாவடிகள் அமைந்துள்ள பகுதியில் மக்கள் வாக்களிக்க முன்வர வேண்டும் என்பதற்காக போலீஸ் அணிவகுப்பு நாளை மாலை மற்றும் 18-ந்தேதி மாலை நடத்தப்படுகிறது.

    பொதுமக்கள் பயப்படாமல் ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி முக்கிய வீதிகள், தெருக்களில் துணை ராணுவப் படையினர் அணி வகுத்து செல்கிறார்கள். 190 துணை ராணுவப் படையினர் சென்னையில் பல்வேறு பகுதிகளில் முகாமிட்டு உள்ளனர். அவர்கள் துப்பாக்கியுடன் நகரின் பதட்டமான பகுதிகளில் அணிவகுப்பு நடத்துகின்றனர்.

    அந்தந்த பகுதியில் உள்ள போலீஸ் உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர்கள் மேற்பார்வையில் அணிவகுப்பு நடக்கிறது. வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை தொகுதிகளில் உள்ள முக்கியமான இடங்களில் அணிவகுப்பு நடக்கிறது.

    இது தவிர சென்னையில் பாரிமுனை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, எழும்பூர், ஆயிரம்விளக்கு, பெரிய மேடு உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள், லாட்ஜுகளில் வெளி மாவட்ட நபர்கள் தங்கி உள்ளவர்களின் விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

    அரசியல் பிரமுகர்கள் தங்கி இருந்தால் அவர்கள் நாளை மாலையில் இருந்து வெளியேற வேண்டும் என லாட்ஜ் உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. தொழில் ரீதியாக தங்குபவர்கள் அதற்கான ஆவணங்களை கொடுக்க வேண்டும்.

    வெளி மாநிலங்களை சார்ந்தவர்கள் யார்-யார் தங்கி உள்ளனர்? சந்தேகப்படும்படி யாரேனும் தங்கி இருக்கிறார்களா? என்று போலீசார் தங்கள் பகுதியில் உள்ள விடுதிகளில் கணக்கெடுத்து வருகின்றனர்.

    தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிகளிலும் 3,726 மையங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு எந்திரங்கள் எடுத்துச் செல்லப்படுகிறது.

    பாதுகாப்புக்காக செல்ல 450 ரோந்து வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன.

    இந்த ரோந்து வாகனங்களில் பணியாற்றும் போலீசார் எப்படி செயல்பட வேண்டும்? என்பது பற்றிய பயிற்சி நேற்று இரவு அளிக்கப்பட்டு உள்ளது.

    • கிராமிய சந்தை தொடக்கப்பட்டது.
    • பிரமுகர்கள் கண்ணன், செல்லம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள மல்லாங்கிணறு சீட்ஸ் விவசாய உற்பத்தியாளர் நிறுவனத்தின் நபார்டு கிராமிய சந்தை தொடக்க நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். அமைச்சர் தங்கம்தென்னரசு கிராமிய சந்தையை திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார்.

    பின்னர் நபார்டு வங்கி உதவியுடன் சீட்ஸ் நிறுவனத்திற்கு ரூ.20 லட்சம் மானியத்துடன் கூடிய சேமிப்பு கிடங்கை திறந்து வைத்தார்.

    சீட்ஸ் விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் நபார்டு வங்கி நிதி உதவியுடன் மற்றும் வழிகாட்டுதலின்படி செயல்பட்டு வருகிறது. முன்னேற விளையும் மாவட்டமான விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி, அருப்புக்கோட்டை, விருதுநகர் வட்டாரத்தில் உள்ள விவசாய பங்கு தாரர்களை கொண்டு இது செயல்பட்டு வருகிறது.

    பின்னர் நபார்டு நீர்வடிப்பகுதி பெண்கள் கூட்டமைப்பு வாழ்வாதார கடனுதவி திட்டத்தின் கீழ் 5 கூட்டமைப்புகளுக்கு மொத்தம் ரூ.16.59 லட்சம் மதிப்பிலான கடனு தவிகளையும், 2 பயனாளிகளுக்கு இலவச தார்ப்பாய்களைஅமைச்சர் வழங்கினார்.

    சிறுதானிய ஆண்டை முன்னிட்டு, விவசாய கடன் அட்டை மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.2.44லட்சம் மதிப்பிலான கடனு தவிகளையும், 2 பயனாளிகளுக்கு நபார்டு கிராமிய சந்தை உறுப்பினர் அட்டை களையும், விருதுநகர் வட்டார உழவர் உற்பத்தி யாளர் கூட்டுறவு சங்க பதிவு சான்றிதழையும் அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார், நபார்டு வங்கி துணை பொது மேலாளர் ராஜ சுரேஷ்வரன், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) சேதுராமன், பேரூராட்சி செயல் அலுவலர் அன்பழகன், பேரூராட்சி தலைவர்கள் துளசிதாஸ் (மல்லாங்கிணறு), செந்தில் (காரியாபட்டி), காரியாபட்டி யூனியன் துணைத்தலைவர் ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தங்கதமிழ்வாணன், சீட்ஸ் விவசாய உற்பத்தியாளர் நிறுவன தலைவர் பாண்டியன், முதன்மை செயல் அலுவலர் சிவகுமார், பிரமுகர்கள் கண்ணன், செல்லம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
    • இந்த துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வரும் விநாயகர் சதுர்த்தி வரை தொடரும் என போலீசார் தெரிவித்து–ள்ளனர்.

    ஈரோடு:

    விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    விநாயகர் சதுர்த்தி அன்று இந்து முன்னணி சார்பில் ஈரோடு மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்ய–ப்படுகிறது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி விழா காலகட்டத்தில் இந்து முன்னணி பிரமுகர் மீது சமூக விரோதிகள் தாக்குதல் நடத்த கூடும் என்று உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் அச்சுறுத்தல் உள்ளதாக கருதப்படும் இந்து முன்னணி பிரமுகர்கள் 7 பேருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்து முன்னணி மாவட்ட தலைவர் ஜெகதீஷ், மாவட்ட செயலாளர் கார்த்தி, மாநில துணைத் தலைவர் சண்முகசுந்தரம், ஈரோடு மேற்கு மாவட்ட தலைவர் குருசாமி,

    ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் நாகராஜ், மேற்கு மாவட்ட துணை தலைவர் கிருஷ்ணசாமி, சேலம் கோட்ட செயலாளர் பழனிச்சாமிக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்ப–ட்டுள்ளது. இவர்களுக்கு போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இவர்கள் வெளியிடங்களுக்கு செல்லும்போது போலீசார் உடன் செல்வார்கள். இந்த துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வரும் விநாயகர் சதுர்த்தி வரை தொடரும் என போலீசார் தெரிவித்து–ள்ளனர்.

    ×