search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுப்பி"

    • விண்ணப்பிக்க வில்லையெனில் துப்பாக்கியை அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து விட வேண்டும்.
    • கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தகவல்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் அனு மதி பெற்று துப்பாக்கி வைத் திருப்போர், அதற்கான உரி மத்தினை வருகிற டிசம்பர் மாதம் 31-ந்தேதிக்குள் விண் ணப்பிக்க வேண்டும்.

    அதாவது உரிமம் பெற்ற ஒற்றைக்குழல் மற்றும் இரட் டைக்குழல் துப்பாக்கிகள் (எஸ்.பி.பி.எல்., டி.பி.பி.எல்., ரிவால்வர் மற்றும் பிஸ்டல்) ஆகியவற்றின் உரிமங்களை புதுப்பிக்க வேண்டியவர்கள் 1.1.2023 முதல் 31.12.2027 வரை யிலான 5 ஆண்டுகளுக்குப் புதுப்பிக்கும் பொருட்டு, வரும் டிசம்பர் 31-ந் தேதிக்குள் குமரி மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட நடுவருக்கு கீழ் குறிப்பிட்டுள்ள ஆவணங் கள் மற்றும் உரிய படிவத்து டன் விண்ணப்பிக்குமாறு உரிமத்தாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    அதாவது துப்பாக்கி உரிமம் புதுப்பித்தல் படிவம் (A3) பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், அசல் உரிம புத்தகம், இருப்பிட முகவரிக்கான ஆதார ஆவண நகல் (2), இதையடுத்து 5 ஆண்டிற்குரிய உரிமம் புதுப்பித்தல் கட்டணம் ரூ.2,500 செலுத்திய தற்கான இ-செல்லான் அசல் மற்றும் நகல் மற்றும்துப்பாக்கி உபயோகப்படுத்தி பணி புரியும் பட்சத்தில் தொடர்பு டைய அலுவலகத்தில் இருந்து பணி நிமித்தமாக பெறப்பட்ட கடிதம் ஆகிய வற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

    புதுப்பிக்கப்பட்ட உரிமங்களை சரியான முகவரிக்கும் அனுப்பும் பொருட்டு உரிம தாரர்கள் தங்களது விண்ணப் பங் களில் சரியான அஞ்சல் முகவ ரியை கொடுக்க வேண்டும். விண்ணப்பத் தோடு பணம் செலுத்திய செலானை இணைத்து அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பத்தில் உரிம தாரர் மட்டுமே கையொப்ப மிட்டு அனுப்ப வேண்டும்.துப்பாக்கி உரிமம் செயல் திறன் முடிவடைவதற்கு 60 நாட்களுக்கு முன்பு புதுப்பிப்பதற்கு விண்ணப் பம் அளிக்கப்பட வேண்டும்.

    அவ்வாறு விண்ணப்பிக்க வில்லையெனில், வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் தங்களிடம் உள்ள துப்பாக்கியை அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து விட வேண்டும். தவறினால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×