search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேதி"

    • பொதுமக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் பற்றி அறிந்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
    • குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தகவல்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினமான 26-ந் தேதி அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெ றுகிறது. அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டத்தை ஊராட்சிகளின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையில் காலை 11 மணி அளவில் நடத்திட வேண்டும்.

    குமரி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 95 கிராம ஊராட்சிகளிலும் நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட உள்ளது.

    அரசால் பல்வேறு துறைகளின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்குத் தேவையான விவரங்களை, அதிகாரிகள் இக்கிராம சபைக் கூட்டத்தில் வெளியிட வேண்டும்.

    எனவே, பொதுமக்கள் அனைவரும் அந்தந்த பகுதிகளில் நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் பற்றி அறிந்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரூ.8 கோடி செலவில் தாமிரபரணி, திருவள்ளுவர் என்ற அதிநவீன சொகுசு படகுகளை சுற்றுலா துறை வாங்கி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்துக்கு வழங்கியது.
    • இவை இயக்கப்படாமல் கடல் உப்பு காற்றினால் துருப்பிடித்து பாழாகும் நிலையில் படகு துறையில் கடந்த 2 ஆண்டுகளாக முடங்கி கிடக்கிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல்நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும், அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டுள்ளது.

    இவற்றை சுற்றுலா பயணிகள் பார்வையிட தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது. இதற்கிடையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.8 கோடி செலவில் தாமிரபரணி, திருவள்ளுவர் ஆகிய பெயர்களை தாங்கிய அதிநவீன சொகுசு படகுகளை சுற்றுலா துறை வாங்கி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்துக்கு வழங்கியது.

    இந்த 2 அதிநவீன படகுகளும் விவேகானந்த மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு இயக்கப்படாமல் கடல் உப்பு காற்றினால் துருப்பிடித்து பாழாகும் நிலையில் படகு துறையில் கடந்த 2 ஆண்டுகளாக முடங்கி கிடக்கிறது.

    சொகுசு படகுகளை கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டை வரை கடலில் சுற்றுலா பயணிகள் உல்லாச பயணம் சென்று வர பயன்படுத்த வேண்டும் என்று தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    அதன் பயனாக இந்த 2 அதிநவீனசொகுசு படகுகளையும் வருகிற 17-ந்தேதி முதல் படகு சவாரி நடத்த பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    • ஒரு மாணவர் 3 போட்டிகளிலும் கலந்து கொள்ளலாம்.
    • போட்டி களில் பங்குபெறும் மாண வர்கள் அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கி வரும் கன்னியாகுமரி ஜவகர் சிறுவர் மன்றங்களில் 5 வயது முதல் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கலை பயிற்சி வகுப்புகள் நாகர்கோவிலில் உள்ள எஸ்.எல்.பி. அரசு பெண்கள் உயர்நிலை பள்ளியில் நடத்தப்பட்டு வருகிறது.

    மேலும் ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட மற்றும் மாநில அள விலான கலைப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி மாவட்ட அளவில் பாட்டு, பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம் மற்றும் ஓவியம் ஆகிய போட்டிகள் வரு கிற 29-ந்தேதி காலை 9 மணிக்கு நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் நடக்கிறது.

    இதில் முதலிடம் பெறும் குழந்தைகள் மாநில அளவில் நடைபெறும் கலைப் போட்டிக்கு ஜவகர் சிறுவர் மன்ற செலவில் அழைத்துச் செல்லப்படுவார்கள். மாநில அளவிலான கலைப் போட்டிகளில் முதல் பரிசு பெறும் மாணவருக்கு ரூ.10 ஆயிரமும், 2-ம் பரிசு பெறும் மாணவருக்கு ரூ.7,500-ம், 3-ம் பரிசு பெறும் மாணவருக்கு ரூ.5. ஆயிரமும் பரிசு வழங்கப்படவுள்ளன.

    ஒரு மாணவர் 3 போட்டிகளிலும் கலந்து கொள்ளலாம். போட்டி களில் பங்குபெறும் மாண வர்கள் அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்படும். கூடுதல் தகவல்களுக்கு திட்ட அலு வலரை 75981 01177 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விண்ணப்பிக்க வில்லையெனில் துப்பாக்கியை அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து விட வேண்டும்.
    • கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தகவல்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் அனு மதி பெற்று துப்பாக்கி வைத் திருப்போர், அதற்கான உரி மத்தினை வருகிற டிசம்பர் மாதம் 31-ந்தேதிக்குள் விண் ணப்பிக்க வேண்டும்.

    அதாவது உரிமம் பெற்ற ஒற்றைக்குழல் மற்றும் இரட் டைக்குழல் துப்பாக்கிகள் (எஸ்.பி.பி.எல்., டி.பி.பி.எல்., ரிவால்வர் மற்றும் பிஸ்டல்) ஆகியவற்றின் உரிமங்களை புதுப்பிக்க வேண்டியவர்கள் 1.1.2023 முதல் 31.12.2027 வரை யிலான 5 ஆண்டுகளுக்குப் புதுப்பிக்கும் பொருட்டு, வரும் டிசம்பர் 31-ந் தேதிக்குள் குமரி மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட நடுவருக்கு கீழ் குறிப்பிட்டுள்ள ஆவணங் கள் மற்றும் உரிய படிவத்து டன் விண்ணப்பிக்குமாறு உரிமத்தாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    அதாவது துப்பாக்கி உரிமம் புதுப்பித்தல் படிவம் (A3) பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், அசல் உரிம புத்தகம், இருப்பிட முகவரிக்கான ஆதார ஆவண நகல் (2), இதையடுத்து 5 ஆண்டிற்குரிய உரிமம் புதுப்பித்தல் கட்டணம் ரூ.2,500 செலுத்திய தற்கான இ-செல்லான் அசல் மற்றும் நகல் மற்றும்துப்பாக்கி உபயோகப்படுத்தி பணி புரியும் பட்சத்தில் தொடர்பு டைய அலுவலகத்தில் இருந்து பணி நிமித்தமாக பெறப்பட்ட கடிதம் ஆகிய வற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

    புதுப்பிக்கப்பட்ட உரிமங்களை சரியான முகவரிக்கும் அனுப்பும் பொருட்டு உரிம தாரர்கள் தங்களது விண்ணப் பங் களில் சரியான அஞ்சல் முகவ ரியை கொடுக்க வேண்டும். விண்ணப்பத் தோடு பணம் செலுத்திய செலானை இணைத்து அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பத்தில் உரிம தாரர் மட்டுமே கையொப்ப மிட்டு அனுப்ப வேண்டும்.துப்பாக்கி உரிமம் செயல் திறன் முடிவடைவதற்கு 60 நாட்களுக்கு முன்பு புதுப்பிப்பதற்கு விண்ணப் பம் அளிக்கப்பட வேண்டும்.

    அவ்வாறு விண்ணப்பிக்க வில்லையெனில், வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் தங்களிடம் உள்ள துப்பாக்கியை அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து விட வேண்டும். தவறினால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பெத்தாம்பாளையம் பகுதியில் 14-ந் தேதி மின் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
    • கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் பெத்தாம்பாளையம் மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    ஈரோடு:

    கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் பெத்தாம்பாளையம் மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    இதையொட்டி வரும் 14-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பெத்தாம்பாளையம், கொளத்தான் பாளையம், மூலக்கடை, செங்கோடன் பாளையம், பூச்சம்பதி, கே.ஜி.புதூர், திட்டுக்காடு, புலவர் பாளையம், தண்ணீர் பந்தல் பாளையம், எம்.ஜி.பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

    ×