என் மலர்

  நீங்கள் தேடியது "high"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கணக்கு பதிவியலுக்கு ஆசிரியர் நியமிக்கப்படவில்லை.
  • கடந்த ஆண்டு பிளஸ்-1 வகுப்பிற்கு கணக்கு பதிவியல், கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்பட 4 பாட பிரிவுகளில் மாணவிகள் சேர்க்கை நடந்தது.

  நெல்லை:

  நெல்லை மாவட்டம் மானூர் சுற்றுவட்டார பகுதியில் சுமார் 70-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் பிளஸ்-1, பிளஸ்-2 படிப்பதற்கு மானூர் மற்றும் நல்லம்மாள்புரத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகள், உக்கிரன்கோட்டை பகுதியில் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப் பள்ளி என 3 மேல்நிலைப் பள்ளிகள் மட்டுமே உள்ளது.

  குறிப்பாக மானூரில் உள்ள அரசு பள்ளிக்கு போதிய பஸ் வசதி இருப்பதால் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவிகள் இங்கு சென்று பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு மானூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 மாணவ சேர்க்கை எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த ஆண்டு பிளஸ்-1 வகுப்புக்கு 190 மாணவிகள் சேர்க்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 120 மாணவிகள் சேர்ந்தவுடன் மாணவர் சேர்க்கை முடிந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது.

  இதனால் இன்று பிளஸ்-1 வகுப்பில் சேருவதற்காக சென்ற மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர் ஏமாற்றம் அடைந்தனர். அவர்கள் தலைமை ஆசிரியை குமாரி பிரபாவுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

  காரணம் என்ன?

  அப்போது தலைமை ஆசிரியை கூறியதாவது:-

  கடந்த ஆண்டு பிளஸ்-1 வகுப்பிற்கு கணக்கு பதிவியல், கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்பட 4 பாட பிரிவுகளில் மாணவிகள் சேர்க்கை நடந்தது.

  இதில் கணக்கு பதிவியல் பிரிவிற்கு பாடம் நடத்தும் ஆசிரியருக்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் சார்பில் ஊதியம் கொடுக்கப்பட்டு வந்தது. அந்த ஆசிரியர் சமீபத்தில் இறந்துவிட்டார்.

  அதன் பிறகு கணக்கு பதிவியலுக்கு ஆசிரியர் நியமிக்கப்படவில்லை. இதனால் இந்த ஆண்டு அந்த பிரிவில் மாணவிகள் சேர்க்கப்படவில்லை. மற்ற பாடப்பிரிவுகளுக்கு போதிய மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • டி.என்.பாளையம் அடுத்த வினோபா நகர் ஆவின் பால் கொள்முதல் நிலையம் அருகே ஒரு நாட்டு துப்பாக்கி கிடப்பதாக அப்பகுதியினர் இன்று காலை பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
  • இதனையடுத்து போலீசார் நாட்டு துப்பாக்கியை மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்.

  டி.என்.பாளையம்:

  டி.என்.பாளையம் அடுத்த கொங்கர்பாளையம் ஊராட்சி வனப்பகுதியையொட்டிய வினோபா நகர் ஆவின் பால் கொள்முதல் நிலையம் அருகே ஒரு நாட்டு துப்பாக்கி கிடப்பதாக அப்பகுதியினர் இன்று காலை பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

  உடனே பங்களாப்புதூர் தனிப்பிரிவு போலீஸ்காரர் மஞ்சுநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு கிடந்த ஒற்றை குழல் நாட்டுத் துப்பாக்கியை கைப்பற்றி போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர்.

  துப்பாக்கி கிடந்தது வனப்பகுதியையொட்டிய பகுதி என்பதால் யாரோ வனவிலங்குகளை வேட்டையாட பயன்படுத்தி விட்டு விட்டு சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் விசாரணை நடத்தி வருகின்றார்.

  வழக்கமாக அப்பகுதியில் ரோந்து செல்லும் வனத்துறையினர் இது போன்று துப்பாக்கி கிடப்பதை எப்படி கவனிக்க தவறினர் என்றும் அப்பகுதியினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

  ×