search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரியல்மி ஜிடி 2 ப்ரோ"

    ரியல்மி நிறுவனம் உருவாக்கி வரும் புதிய ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.


    ரியல்மியின் புதிய ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் கெண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆர்.எம்.எக்ஸ்.3301 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இது அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

    முந்தைய தகவல்களில் இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 898 பிராசஸர் வழங்கப்படும் என கூறப்பட்டது. எனினும், தற்போதைய தகவல்களில் ரியல்மி ஜிடி 2 ப்ரோ மாடலில் எல்.பி.டி.டி.ஆர்.5 ரேம், யு.எப்.எஸ். 3.1 பிளாஷ் மெமரி, 6.51 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் அமோலெட் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படும் என தெரிகிறது.

     ரியல்மி ஜிடி ஸ்மார்ட்போன்

    புகைப்படங்களை எடுக்க 50 எம்பி, 8 எம்பி மற்றும் 5 எம்பி கேமரா சென்சார்கள், முன்புறம் 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் ஆட்டோபோக்கஸ், ஓ.ஐ.எஸ். மற்றும் இ.ஐ.எஸ். போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம். 

    புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
    விழுப்புரம் அருகே ஏரியில் மூழ்கி டிரைவர் உள்பட 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே மயிலம் போலீஸ் சரகம் பெரியதச்சூர் ஆலகிராமத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். டிராக்டர் டிரைவர்.

    இவர் இயற்கை உபாதை கழிக்க ஏரிக்கு சென்று விட்டு திரும்பி ஏரிகளிங்காலில் கால் கழுவும் போது தவறி ஏரியில் விழுந்து இறந்து விட்டார். வெளியே சென்ற வரை காணவில்லை என அவர் மனைவி மற்றும் உறவினர்கள் தேடி சென்று பார்த்தனர். அப்போது ஏறியில் தவறிவிழுந்ததில் முத்துகிரு‌ஷண்ன் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து பெரியதச்சூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது போலீசார் அவர் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    திருவெண்ணைநல்லூர் அருகே ஏமப்பூரை சேர்ந்தவர் பாஸ்கர் (34). கூலித் தொழிலாளி. அவர் நேற்று வீட்டிலிருந்து வெளியே சென்றார். அதன்பின்னர் அங்குள்ள ஏரியில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து திருவெண்ணைநல்லூர் போலீசார் உடலை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    தேவி படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘தேவி 2’ படத்தின் விமர்சனம்.
    தேவி படத்தின் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக படம் ஆரம்பிக்கிறது. ரூபி பேயிடம் போட்ட ஒப்பந்தம் காரணமாக இரண்டு வருடங்களுக்கு மேலாக வீட்டிற்குள்ளேயே தமன்னாவை வைத்திருக்கிறார் பிரபுதேவா. மீண்டும் பேய் தொல்லை இல்லாமல் இருப்பதற்காக ஜோசியர் ஒருவர் அறிவுரையின் படி தமன்னாவை மொரிசியஸ் அழைத்து சென்று வேலை பார்த்து வருகிறார் பிரபுதேவா.

    அங்கு ரூபி மீண்டும் தமன்னா உடம்பில் இருக்கிறதா என்று சில சோதனைகளை பிரபுதேவா செய்கிறார். ஆனால், ஏதும் இல்லாததால் மகிழ்ச்சியாக வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிரபுதேவாவை இரண்டு பேய் பிடிக்கிறது. இதையறிந்த தமன்னா, பிரபுதேவாவை எப்படி காப்பாற்றினார்? பேயின் நோக்கம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.



    படத்தின் நாயகனாக நடித்திருக்கும் பிரபுதேவா, தனக்கே உரிய பாணியில் நடிப்பு, காமெடி, நடனம் என அசத்தி இருக்கிறார். குறிப்பாக, பேய் தன்னுள் புகுந்தவுடன், அதற்கேற்ப அவர் காட்டும் உடல் மொழி அசத்தல்.

    நாயகியாக வரும் தமன்னா, மாறுபட்ட நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். குறிப்பாக பாடல் காட்சிகளில் ரசிகர்களை சீட்டிலேயே கட்டி வைத்திருக்கிறார். அவருடைய நடிப்புக்கு தீனி போடும் படமாக அமைந்திருக்கிறது. அதுபோல், மற்ற கதாநாயகிகளாக வரும் நந்திதா சுவேதா, டிம்பிள் ஹயாதி ஆகியோரும் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். கோவை சரளா மற்றும் ஆர்.ஜே.பாலாஜி இருவரும் ஆங்காங்கே ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார்கள். 



    தேவி படத்தின் வெற்றி கொடுத்த உற்சாகத்தில், 2வது பாகத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் விஜய். ஆனால், முதல் பாகம் அளவிற்கு இரண்டாம் பாகம் வெற்றி பெறுமா என்பது சந்தேகம் தான். படத்தை ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை காமெடி படமாகவே எடுத்திருக்கிறார். ஆனால், பார்க்கிற நமக்குத்தான் ஏனோ சிரிப்பு வரவில்லை. கதாபாத்திரங்களை சிறப்பாக கையாளத் தெரிந்த விஜய், திரைக்கதையில் கவனம் செலுத்த மறந்திருக்கிறார். 



    அயனன்கா போஸின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. சாம் சி.எஸ்.-யின் இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. பின்னணி இசையிலும் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார்.

    மொத்தத்தில் ‘தேவி 2’ மிரட்டல் குறைவு.
    பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு எடுப்பதில் மிகவும் ஆர்வம் காட்டியவர் நெல் ஜெயராமன். இவரது வாழ்க்கைக்குறிப்பு பிளஸ்-2 தாவரவியல் பாடப்பிரிவில் இடம் பெற்று இருக்கிறது.
    சென்னை:

    பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு எடுப்பதில் மிகவும் ஆர்வம் காட்டியவர் நெல் ஜெயராமன். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த டிசம்பர் 6-ந் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்த நிலையில் நெல் ஜெயராமனின் வாழ்க்கைக்குறிப்பு பிளஸ்-2 தாவரவியல் பாடப்பிரிவில் இடம் பெற்று இருக்கிறது. பயிர் பெருக்கம் என்ற பாட தொகுப்பில் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனை பற்றிய தொகுப்புக்கு கீழே நெல் ஜெயராமனை பற்றி குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    அதில், ‘திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அதிரங்கம் கிராமத்தை சேர்ந்தவர். நம்மாழ்வாரின் சீடராவார். இவர் நமது நெல்லை பாதுகாப்போம் இயக்கத்தின் தமிழ்நாடு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆவார். பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாப்பதில் அயராது பாடுபட்டவர். விவசாயிகளுக்கு பயிற்சி அளித்து அவர்களின் நிலங்களில் ஏற்படும் பாதிப்புகளை குறித்துக்கொண்டு அவற்றிற்கான ஆலோசனைகளையும் வழங்கினார்.

    சர்வதேச நெல் ஆராய்ச்சி நிலையத்தில் உரையாற்றுவதற்காக பிலிப்பைன்ஸ் அரசு இவரை அழைத்தது. 2011-ம் ஆண்டு இவர் சிறந்த இயற்கை விவசாயத்துக்கான மாநில விருதையும், 2015-ம் ஆண்டு சிறந்த மரபணு பாதுகாப்பாளர் என்ற தேசிய விருதையும் பெற்றார்’ என்பது உள்பட பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஜம்முவில் உள்ள ராணுவ முகாம்களை படம்பிடித்த 2 பேரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஜம்முவில் உள்ள ரத்னுசக் ராணுவ முகாமில் மர்ம நபர்கள் 2 பேர் வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தனர்.

    இதைக்கண்ட ராணுவ அதிகாரிகள் அவர்களை பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் இருந்த வீடியோ கேமராவை பரிசோதனை செய்தனர். அதில், ராணுவ முகாம் குறித்த விவரங்கள், வீடியோ காட்சிகளை பாகிஸ்தானிற்கு அனுப்பியது தெரிய வந்தது.



    இதைத்தொடர்ந்து அவர்களை உள்ளூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர் ராணுவ அதிகாரிகள், அவர்களை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    எல்.கே.சுரேஷ் இயக்கத்தில் ஜெய் - கேத்தரின் தெரசா, ராய் லட்சுமி, வரலட்சுமி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘நீயா 2’ படத்தின் விமர்சனம்.
    நடிகர் ஜெய், பால சரவணன் இருவரும் ஒன்றாக வேலை பார்க்கிறார்கள். ஜெய்யை பார்க்கும் கேத்தரின் தெரசாவுக்கு ஜெய் மீது காதல் வந்து, அவரை திருமணம் செய்துகொள்ள விருப்பப்படுகிறார். கேத்தரின் தனது காதலை ஜெய்யிடம் தெரிவிக்க, ஜெய் கேத்தரினை திருமணம் செய்ய மறுக்கிறார். கேத்தரின் விடாப்பிடியாக இருக்க, தனக்கு நாக தோஷம் இருப்பதால், நாக தோஷம் இருக்கும் பெண்ணை தான் தன்னால் திருமணம் செய்து கொள்ள முடியும் என்று ஜெய் கூறுகிறார்.

    பின்னர் தனக்கும் நாக தோஷம் இருப்பதாக கேத்தரின் கூற, இருவருக்கும் திருமணம் நடக்கிறது. திருமணத்திற்கு பிறகு கேத்தரினுக்கு நாக தோஷம் இல்லை என்பது தெரிய வர, பரிகாரம் செய்வதற்காக இருவரும் கொடைக்கானல் செல்கின்றனர்.



    அங்கு கடந்த ஜென்மத்தில் கிடைத்த சாபத்தால், பிரிந்த தனது காதலனான ஜெய்யுடன் சேருவதற்காக காத்திருக்கிறார் பாம்பு பெண்ணாகிய ராய் லட்சுமி.

    கடைசியில், ஜெய்யின் நாக தோஷம் நீங்கியதா? கேத்தரினுடன் இணைந்தாரா? ராய் லெட்சுமியுடன் இணைந்தாரா? ராய் லட்சுமியின் முன் வாழ்க்கைக் கதை என்ன? அவருக்கு சாபம் வழங்கியது யார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    நடிகர் ஜெய் இரண்டு விதமான கதாபாத்திரங்களில் வந்து கொடுத்த வேலையை சிறப்பாக செய்துவிட்டுச் சென்றிருக்கிறார். காதல், ஆக்‌ஷன் என தனது வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். 

    ஜெய்யை துரத்தி துரத்தி காதலிக்கும் கதாபாத்திரத்தில் கேத்தரின் தெரசா ரசிகர்களை கவர்கிறார். காதல், கவர்ச்சி என கிறங்கடிக்கிறார். பாம்பு பெண்ணாக ராய் லட்சுமி ராயலான பாம்பாக வலம் வருகிறார். குறைவான காட்சிகளில் வந்தாலும் வரலட்சுமி தனது கதாபாத்திரத்திற்கு மெருகேற்றிவிட்டு சென்றிருக்கிறார். பால சரவணன் காமெடியில் ஓரளவு சிரிக்க வைக்கிறார்.



    நாக தோஷத்தை மையமாக வைத்து படத்தின் கதையை நகர்த்தியிருக்கிறார் எல்.கே.சுரேஷ். முதல்பாதியில் இருந்த வேகம் இரண்டாவது பாதியிலும் தொடர்ந்திருந்தால் இன்னமும் நன்றாக இருந்திருக்கும். பாம்பு வரும் கிராபிக்ஸ் காட்சிகள் விறுவிறுப்பை தூண்டுகின்றன. படத்தில் எந்த அளவுக்கு விறுவிறுப்பு இருக்கிறதோ அந்த அளவுக்கு கவர்ச்சியும் இருக்கிறது.

    ஷபீரின் பின்னணி இசையும், ராஜவேல் மோகனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலமாக இருந்துள்ளன.

    மொத்தத்தில் ‘நீயா 2’ கவர்ச்சி.

    ஹெச்.பி. நிறுவனம் உலகின் முதல் டூயல் ஸ்கிரீன் கேமிங் லேப்டாப் மாடலை அறிமுகம் செய்துள்ளது.



    ஹெச்.பி. நிறுவனம் பெய்ஜிங் கேமிங் நிகழ்வில் ஒமன் மற்றும் ஹெச்.பி. பெவிலியன் கேமிங் லேப்டாப்களை அறிமுகம் செய்தது. இவற்றில் உலகின் முதல் டூயல் ஸ்கிரீன் கேமிங் லேப்டாப் மாடலும் அடங்கும். இது லிக்விட் மெட்டல் காம்பவுன்ட் கூல்டு சி.பி.யு. கொண்ட முதல் லேப்டாப் ஆகும். இதன் விற்பனை இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் துவங்குகிறது.

    ஹெச்.பி. ஒமன் எக்ஸ் 2எஸ் உலகின் முதல் டூயல் ஸ்கிரீன் கேமிங் லேப்டாப் ஆகும். இதில் 15-இன்ச் 1080 பிக்சல் அல்லது 4K டிஸ்ப்ளே ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் இரண்டாவது ஸ்கிரீன் 6-இன்ச் தொடுதிரை வசதி கொண்டிருக்கிறது. இந்த டிஸ்ப்ளே 144Hz ரிஃப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது. இத்துடன் 240Hz  ரிஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே இந்த ஆண்டு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த லேப்டாப் 9 ஆம் தலைமுறை இன்டெல் கோர் ஐ9 பிராசஸர், NVIDIA GeForce RTX 2080 கிராஃபிக்ஸ், பி.சி.ஐ. எஸ்.எஸ்.டி. மற்றும் இன்டெல் ஆப்டேன் மெமரி மற்றும் எஸ்.எஸ்.டி. ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் 3 யு.எஸ்.பி. 3.1 டைப் ஏ போர்ட்கள், ஒரு தண்டர்போல்ட் 3 யு.எஸ்.பி. டைப் சி போர்ட், ஒரு ஹெச்.டி.எம்.ஐ. 2.0 போர்ட், ஜிகாபிட் ஈத்தர்நெட் போர்ட் மற்றும் 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் வழங்கப்பட்டுள்ளது.



    புதிய ஒமன் எக்ஸ் 2எஸ் லேப்டாப்பில் ஒமன் டெம்பெஸ்ட் கூலிங் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. இதில் மூன்று பக்கங்களில் வென்டிங் மற்றும் 5 வழிகளில் காற்றோட்டம் புகும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் 12 வோல்ட் ஃபேன் மாட்யூல் ஒன்றும் 3-ஃபேஸ் மோட்டார் மற்றும் ஃபுளுயிட் டைனமிக் பேரிங்களை கொண்டிருக்கிறது.

    இத்துடன் பயனர்களுக்கு ரியல்-டைம் ஸ்கிரீன் மிரரிங், ஆர்.ஜி.பி. லைட்டிங்கை கஸ்டமைஸ் செய்யும் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. ஒமன் எக்ஸ் 2எஸ் லேப்டாப் மாடலுடன் ஹெச்.பி. நிறுவனம் ஒமன் 15 மற்றும் ஒமன் 17 லேப்டாப்களை அறிமுகம் செய்தது. இவை முந்தைய மாடல்களை விட 20 மற்றும் 18 சதவிகிதம் வரை மெல்லியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த லேப்டாப்களிலும் ஒமன் டெம்பெஸ்ட் கூலிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.
     
    ஹெச்.பி. நிறுவனம் பெவிலியன் கேமிங் 15 மற்றும் புதிய ஹெச்.பி. பெவிலியன் கேமிங் 17 லேப்டாப்களையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த லேப்டாப்களில் 9 ஆம் தலைமுறை இன்டெல் கோர் ஐ5 / ஐ7 பிராசஸர், NVIDIA GeForce GTX 1660 டி.ஐ. கிராஃபிக்ஸ் மற்றும் மேக்ஸ் கியூ டிசைன் கொண்டிருக்கிறது.
    பாவூர்சத்திரத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் பிளஸ்-2 மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆலங்குளம்:

     பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் சாமிதோப்பை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் வசீகரன் (வயது 17). இவர் பிளஸ்-2 படித்துவிட்டு கல்லூரியில் சேர்வதற்காக முயன்று கொண்டிருந்தார். 

    இந்நிலையில் நேற்று மாலை வசீகரன் தனது மோட்டார் சைக்கிளில் பாவூர்சத்திரத்தில் இருந்து கீழப்பாவூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர் அங்குள்ள மெயின்ரோட்டில் வந்த போது குறும்பலாபேரியை சேர்ந்த சரவணன் (55) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் வசீகரன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். உடனடியாக அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். 

    இது குறித்து பாவூர்சத்திரம் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரசு கல்லூரியில் படிக்க பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்துள்ள வேலாவள்ளி பகுதியை சேர்ந்தவர் சின்னமாதன். இவரது மனைவி பழனியம்மாள். இவர்களுக்கு மங்கம்மாள் (வயது 17) என்ற மகள் உள்ளார்.

    இவர் இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்ச்சி பெற்றதை தொடர்ந்து அவரது தந்தை சின்னமாதன் தருமபுரி தனியார் கல்லூரியில் படிப்பதற்காக விண்ணப்பம் பெற்று வந்தார்.

    ஆனால் மங்கம்மாள் அரசு கல்லூரியில் தான் படிப்பேன், அங்குதான் எனது நண்பர்கள் படிக்கப் போகிறார்கள் என்று சின்னமாதனிடம் கூறினார். எனவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மங்கம்மாள் நேற்று மதியம் அவரது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனை பார்த்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மங்கம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், அவரவர் பயின்ற பள்ளிகளில் வழங்கப்பட்டது.
    பெரம்பலூர்:

    தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு கடந்த 19-ந் தேதி வெளியிடப்பட்டது. மாணவ-மாணவிகள் தங்களுடைய தற்காலிக மதிப்பெண் சான்றிதழை 21-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை அவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்யப்பட்டு தலைமை ஆசிரியர்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு தரப்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

    அவ்வாறு பெறப்படும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை மாணவ-மாணவிகள் கல்லூரிகளில் சேருவதற்கு பயன்படுத்தி கொள்ளலாம்.

    பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவ- மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழுடன் பள்ளி மாற்றுச்சான்றிதழும் வழங்கப்பட இருந்ததால் பிளஸ்-2 மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் தங்கள் பெற்றோருடன் நேற்று வந்திருந்தனர்.

    பெரம்பலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக மதிப்பெண் மற்றும் மாற்றுச்சான்றிதழ்களை அங்கு பயின்ற மாணவ-மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரராஜூ வழங்கினார்.

    இதேபோல பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளுக்கு அவரவர் பயின்ற பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் மூலம் தற்காலிக மதிப்பெண் சான்று மற்றும் மாற்றுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. 
    பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் தங்களின் விடைத்தாள் நகல்களை பெறுவதற்கும், மறுகூட்டலுக்கும் 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். #Plus2Result #PlusTwoRetotalling
    சென்னை:

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று  காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டன. தேர்வர்கள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களுக்கு சென்று மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறியலாம்.

    மேலும், பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தியாக(எஸ்.எம்.எஸ்.) மதிப்பெண் அனுப்பப்படுகிறது.

    நாளை காலை 9 மணி முதல் 26-ந்தேதி வரை தேர்வர்கள் தாங்கள் பயின்ற பள்ளி, தேர்வு எழுதிய தேர்வு மையத்தின் தலைமை ஆசிரியர் வழியாக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட தங்களுடைய மதிப்பெண் பட்டியலை பெற்றுக்கொள்ளலாம்.

    மேலும், வருகிற 24-ந்தேதி காலை 9 மணி முதல் 26-ந்தேதி வரை பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் தற்காலிக மதிப்பெண் பட்டியலை www.dge.tn.nic.in என்ற இணையதளத்துக்கு சென்று பிறந்த தேதி, பதிவு எண் ஆகிய விவரங்களை அளித்து தாங்களாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    விடைத்தாள் நகல் பெற மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் வருகிற 22-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.



    பிளஸ்-2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஜூன்-2019 சிறப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேதிகள் குறித்து விரைவில் தனியே அறிவிப்பு வெளியிடப்படும். பிளஸ்-2 சிறப்பு துணைத்தேர்வு ஜூன் 6-ந்தேதி தொடங்கி 13-ந்தேதி வரையிலும், பிளஸ்-1 சிறப்பு துணைத்தேர்வு ஜூன் 14-ந்தேதி தொடங்கி 21-ந்தேதி வரையிலும் நடைபெற இருக்கிறது.  #Plus2Result #Plus2Exam #TNResults #PlusTwoRetotalling
    குனியமுத்தூரில் பால் வாங்க சென்ற பிளஸ்-2 மாணவர் சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை:

    கோவை குனியமுத்தூர் அருகே உள்ள மைல்கல்லை சேர்ந்தவர் குமார். இவரது மகன் சந்தோஷ் (வயது 17). பிளஸ்-2 தேர்வு எழுதியுளளார். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் வேலை பார்த்து வந்தார். இன்று வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பினார். வீட்டுக்கு வந்த அவரிடம் அவரது தாயார் பால் வாங்கி வரும்படி கூறியுள்ளார்.

    இதனையடுத்து சந்தோஷ் பால் வாங்குவதற்காக நடந்து சென்றார். திடீரென அவர் மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடடினடியாக சந்தோசை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சந்தோஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

    இது குறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×