search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹெச்.பி."

    • புதுப்பிக்கப்பட்ட லேப்டாப்கள் இந்தியாவில் தான் விற்பனைக்கு வருகிறது.
    • அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களை பயன்படுத்த ஹெச்.பி. முடிவு.

    ஹெச்.பி. நிறுவனம் மாணவர்கள், சிறு, குறு வியாபாரங்களை செய்வோர், ஸ்டார்ட்-அப் மற்றும் பகுதிநேர பணி செய்வோரை குறிவைத்து புதுப்பிக்கப்பட்ட லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்து உள்ளது. முதற்கட்டமாக புதுப்பிக்கப்பட்ட லேப்டாப்கள் இந்தியாவில் தான் விற்பனைக்கு வருவதாக அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

    புதுப்பிக்கப்பட்ட கணினிகளை வினியோகம் செய்வதற்காக அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களை பயன்படுத்த ஹெச்.பி. நிறுவனம் முடிவு செய்து இருக்கிறது. முதலில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் இந்த மாடல்கள் அடுத்த ஆண்டு மேலும் சில பகுதிகளில் விற்பனைக்கு வரும் என்று ஹெச்.பி. நிறுவனம் தெரிவித்துள்ளது.

    முழுமையாக விற்பனை செய்வது மட்டுமின்றி கணினிகளை சந்தா முறையில் வழங்கவும் ஹெச்.பி. நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி தனியார் நிறுவனங்கள் புதுப்பிக்கப்பட்ட கணினிகளை 6, 12 அல்லது 24 மாதங்கள் வரை சந்தா முறையில் பயன்படுத்த முடியும். இந்த திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக புதுப்பிக்கப்பட்ட நோட்புக் மாடல்களும், அதன் பிறகு மேலும் பல்வேறு மாடல்களை வழங்க ஹெச்.பி. முடிவு செய்துள்ளது.

    இவ்வாறு புதுப்பிக்கப்பட்ட சாதனங்களுக்கு ஹெச்.பி. சார்பில் அதிகபட்சம் ஆறு மாதங்களுக்கு வாரண்டியும் வழங்கப்படுகிறது. முன்னதாக இதற்கான திட்டம் சோதனை அடிப்படையில் ஹெச்.பி. நிறுவன ஊழியர்களுக்கு புதுப்பிக்கப்பட்ட சாதனங்கள் வழங்கப்பட்டு வந்தது. தற்போது இந்த திட்டத்தை தனது ஊழியர்களிடமும் விரிவுப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

    ×