search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பலி"

    • மெழுகுவர்த்தியில் ஒளி ஏற்றிக்கொண்டு கைகளில் ஏந்தியவாறு திருப்பலியில் கலந்து கொண்டனர்.
    • இயேசுநாதரின் உருவத்தை பேராலய அதிபர் சாம்சன் திறந்து வைத்து புனிதம் செய்தார்.

    பூதலூர்:

    தஞ்சை மாவட்டத்தில் பூண்டி மாதா பேராலயம் உள்ளது. பூலோகம் போற்றும் பூண்டி மாதா என்று புகழப்படும் பூண்டி மாதா பேராலயத்தில், இயேசுநாதர் உயிர்த்தெழுந்ததை கொண்டாடும் ஈஸ்டர் பெருவிழா நேற்று நள்ளிரவில் தொடங்கி இன்று அதிகாலையில் முடிவடைந்தது.ஈஸ்டர் திருவிழா திருப்பலி நேற்று நள்ளிரவில் தொடங்கியது.இதில் மிகத் திரளான மக்கள் பூண்டி மாதா பேராலய வளாகத்தில் திரண்டு இருந்தனர்.

    யேசுநாதர் உயிர்த்தெ ழுந்ததை குறிக்கும் வகை யில் புதிய நெருப்பு உண்டாக்கப்பட்டு அதனை மந்திரித்து அதிலிருந்து பாஸ்கா திரி எனப்படும் பெரிய மெழுகுவர்த்தியில் ஒளி ஏற்றப்பட்டது. இந்த மிகப்பெரிய மெழுகுவர்த்தி யில் சிலுவை அடையாளம் வரையப்பட்டிருந்தது. நமது மீட்பின் தொடக்கமும் முடிவும் கிறிஸ்துவே என்பதை காட்ட பேரலாய அதிபர் தந்தை தமிழ் மொழியின் முதல் எழுத்தான (அ) வையும் கடைசி எழுத்தான (ன) வையும் மெழுகுவர்த்தியில் எழுதினார். நடப்பு ஆண்டினை குறிக்கும் விதமாக 2023 என்று பொறிக்கப்பட்டு, இயேசுவின் 5 காயங்களை நினைவுபடுத்தும் விதமாக பெரிய மெழுகு திரியில் 5 மணிகளை பதிக்கப்பட்டது.

    பெரிய மெழுகு வர்த்தியில்ஒ ளியேற்றப்பட்டு அதனை பூண்டி பேராலய அதிபர் சாம்சன் கையில் ஏந்தியவாறு திருப்பலி மேடைக்கு கிறிஸ்துவின் ஒளி இதோ என உரக்க பாடியவண்ணம் ஏந்தி வந்தார். உயிர்ப்பு விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் தங்கள் கைகளில் வைத்திருந்த மெழுகுவர்த்தியில் ஒளி ஏற்றிக்கொண்டு கைகளில் ஏந்தியவாறு திருப்பலியில் கலந்து கொண்டனர். கிறிஸ்துவின் ஒளி இதோ என்று பாடியவாறு பேராலய அதிபர் சாம்சன்கைகளில் ஏந்தி வந்த மெழுகுவர்த்தியை திருப்பலி மேடையின் மீது அமைக்கப்பட்டிருந்த இடத்தில் பொருத்தி வைத்தார்.

    உயிர்ப்பு விழா சிறப்பு திருப்பலி யில் பேராலயஅதிபர் சாம்சன், துணை அதிபர் ரூபன் அந்தோணி ராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர், உதவி பங்கு தந்தையர் தாமஸ், அன்புராஜ், ஆன்மீக தந்தை அருளானந்தம், ஆகியோர் பங்கு கொண்டனர். உன்னதங்களிலே பாடல் பாடப்பட்ட போது ஆலயமணிகள் ஒலிக்க ஏசுநாதர் உயிர்த்தெழுந்ததை குறிக்கும் வகையில் பீடத்தின் அருகில் அமைக்கப்பட்டிருந்த இயேசுநாதரின் உருவத்தை பேராலய அதிபர் சாம்சன் திறந்து வைத்து புனிதம் செய்தார். அதனைத் தொடர்ந்து திருப்பலிநடைபெற்றது. வீபுதி புதன் அன்று தொடங்கிய கிறிஸ்தவர்களின் 40நாள் தவக்காலம் யேசுநாதர் உயிர்த்தெழுந்ததை கொண்டாடும் ஈஸ்டர் நாளுடன் முடிவடைகிறது. இன்று பூண்டி மாதா பேராலயத்தில் காலை, நண்பகல், மாலையில் ஈஸ்டர் நாள் திருப்பலிகள் நிறைவேற்றப்படுகின்றன.

    • புனித வெள்ளியை முன்னிட்டு சிறப்பு திவ்ய நற்கருணை ஆராதனை நடைபெற்றது.
    • இயேசுவின் சொரூபத்தை பக்தர்கள் மத்தியில் கொண்டு சென்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட உயிர் நீத்த தினமான புனித வெள்ளியை முன்னிட்டு சிறப்பு திவ்ய நற்கருணை ஆராதனை நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து கலை அரங்கத்தில்பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் இறை வார்த்தை வழிபாடு,சிறப்பு கூட்டு திருப்பலி நிறை வேற்றப்பட்டது.

    சிலுவையில் அறை யப்பட்ட இயேசுவின் சொரூ பத்தை பேராலய அதிபர் இருதயராஜ் மற்றும் பங்கு தந்தைகள் முத்தமிட்டனர்.

    அதைத்தொடர்ந்து இயேசுவின் சொரூபத்தை பக்தர்கள் மத்தியில் கொண்டு செல்லும் போது பக்தர்கள் முத்தமிட்டு வழிபட்டனர்.

    • சிலுவைப்பாதை வழிபாடு, சிறப்பு பிரார்த்தனை, கூட்டு திருப்பலியும் நடைபெற்றது.
    • தவக்காலத்தில் விரதம் இருந்த கிறிஸ்தவர்கள் தங்கள் விரதத்தை முடித்து விருந்துண்டு மகிழ்வார்கள்.

    திருப்பூர் :

    ஏசு சிலுவையில் அறையப்பட்ட நாளான வெள்ளிக்கிழமையை புனித வெள்ளியாகவும், அவர் உயிர்தெழுந்த 3-ம் நாளான ஞாயிற்றுக்கிழமையை ஈஸ்டர் பெருவிழாவாகவும் கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஈஸ்டர் திருநாளின் முந்தைய ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறாகவும், அதைத்தொடர்ந்து அந்த வாரம் முழுவதும் புனித வாரமாகவும் அனுசரிக்கப்படுகிறது.

    புனித வெள்ளிக்கிழமைக்கு முன்பு வரும் வியாழக்கிழமை பெரிய வியாழனாக கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி நேற்று முன்தினம் தேவாலயங்களில் ஆண்டவரின் கடைசி இரவு உணவு திருப்பலியும், பாதம் கழுவும் சடங்கு போன்றவையும் நடந்தது. நேற்று புனித வெள்ளி தினம் கடைபிடிக்கப்பட்டது. ஏசு சிலுவையை சுமந்து செல்லும்போதும், அந்த சிலுவையில் அறையப்பட்டு மரிக்கும் (இறக்கும்) நேரத்திலும் 7 திருவசனங்களை அவர் கூறினார் என்று புனித நூலான பைபிளில் கூறப்பட்டுள்ளது. அந்த வசனங்களை அடிப்படையாக வைத்து தேவாலயங்களில் பிரசங்கங்கள், ஆராதனைகள் நடந்தன.

    திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள புனித கத்தரீனம்மாள் தேவாலயத்தில் பங்கு தந்தை ஹைசிந்த் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. சிலுவைப்பாதை வழிபாடு, சிறப்பு பிரார்த்தனை, கூட்டு திருப்பலியும் நடைபெற்றது. குமார் நகர் புனித சூசையப்பர் தேவாலயம், சி.எஸ்.ஐ. தூய பவுல் தேவாலயத்தில் ஆயர் ஆனந்த குமார் தலைமையில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

    இதுபோல் ஆசர்நகர் சி.எஸ்.ஐ. தூய லூக்கா தேவாலயம், சபாபதிபுரம் டி.இ.எல்.சி. அருள்நாதர் தேவாலயத்திலும் புனித வெள்ளியையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள், பெந்தேகோஸ்தே திருச்சபைகளிலும், மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    ஏசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்தெழுந்த 3-ம் நாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் பெருவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று நள்ளிரவு 12 மணிக்கு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடத்தப்படுகிறது. நாளை அதிகாலையும் தேவாலயங்களில் கூட்டு திருப்பலிகள், சிறப்பு ஆராதனைகள் நடைபெறும். தவக்காலத்தில் விரதம் இருந்த கிறிஸ்தவர்கள் தங்கள் விரதத்தை முடித்து விருந்துண்டு மகிழ்வார்கள். மேலும் நண்பர்களுக்கும் விருந்தளித்து ஈஸ்டர் பெருவிழாவை கொண்டாடுவார்கள்.

    • குருத்தோலை புனிதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • தொடர்ந்து குருத்தோலை பவனி நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை திரு இருதய பேரா லயத்தில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு திருப்பலி இன்று தஞ்சை மறைமாவட்ட பரிபாலகரும் ஆயர் (பொ) சகாயராஜ் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.

    இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    பின்னர் குருத்தோலைகளை ஏந்தியப்படி பவனியாக சென்றனர்.இதேபோல் புனித வியாகுல அன்னை ஆலயத்தில் புனித சேவியர் தொழிற்பயிற்சி பள்ளியின் தாளாளர் சூசைமாணிக்கம் அடிகளார் தலைமையில் கூட்டு பாடல் திருப்பலி நடைபெற்றது.

    தொடர்ந்து மறைமாவட்ட பரிபாலகர்சகாயராஜ் அடிகளார் தலைமையில் குருத்தோலை புனிதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் பேராலய பங்குத்தந்தை பிரபகர், உதவி பங்குத்தந்தை பிரவீன், ஆயரின் செயலர் ஆன்ட்ரு செல்வகுமார், திருத்தொண்டர் அரவிந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து குருத்தோலை பவனி நடைபெற்றது.

    இதில் ஆயிரக்கணக்கான இறைமக்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை பங்கு பேரவை துணைத்தலைவர் வின்சண்ட் தலைமையில் செயலர் குழந்தைராஜ், அன்பிய பொறுப்பாளர்கள், இளைஞர் மன்றத்தினர், பக்த சபையினர் செய்து இருந்தனர்.

    • மக்கள் கைகளில் தென்னங்குருத்தோலைகளை ஏந்தியவாறு பேராலயத்தை நோக்கி வந்தனர்.
    • பக்தர்கள் வைத்திருந்த குருத்தோலைகளை சிலுவை வடிவில் செய்து வீடுகளுக்கு எடுத்து சென்றனர்.

    பூதலூர்:

    பூலோகம் போற்றும் பூண்டி மாதா பேராலயத்தில் புக குருத்தோலை ஞாயிறு பவனி இன்று காலை நடைபெற்றது.

    இன்று காலை பூண்டி மாதா மக்கள் மன்றத்திலிருந்து ஏராளமான மக்கள் கைகளில் தென்னங் குருத்தோலைகளை ஏந்தியவாறு ஓசன்னா பாடல்களை பாடிய வண்ணம் பூண்டி மாதா பேராலயத்தை நோக்கி வந்தனர்.

    குருத்தோலை பவனியை பேராலய அதிபர் சாம்சன் புனிதம் செய்து தொடங்கி வைத்து பக்தர்களுடன் குருத்தோலைகளுடன் நடந்து வந்தார்.

    குருத்தோலை பவனி பேராலயத்திற்குள் வந்ததும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. திருப்பலியில் பேராலய அதிபர் சாம்சன், துணை அதிபர் ரூபன் அந்தோனிராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர், உதவி பங்குத்தந்தையர்கள் தாமஸ், அன்புராஜ், ஆன்மீக தந்தை அருளானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு திருப்பலி நிறைவேற்றினர்.

    திருப்பலியில் கலந்து கொண்ட பக்தர்கள் தங்கள் வைத்திருந்த குருத்தோலைகளை சிலுவை வடிவில் செய்து தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.

    • ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி நடைபெற்றது
    • திருப்பலியில் கலந்து கொண்ட அனைவரின் நெற்றியிலும் சாம்பல் பூசினார்.

    திருமானூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் திருகாவலூர் எனும் ஏலாக்குறிச்சியில் உள்ள புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பங்கு தந்தை அதிபர் தங்கசாமி இந்த சிறப்பு திருப்பலியை நிறைவேற்றினார். திருப்பலியில் அவர் பிரசங்கம் செய்த போது, இந்த தவக்காலம் என்பது மன மாற்றத்திற்கான மனம் திருந்துவதற்கான காலமாகும். நாம் செய்த பாவங்களை நினைத்து மனம் திரும்பி வாழும் காலமாகும். மனிதன் கடவுளைத் தேடும் காலமாகும் என்று பேசினார். அதன் பின்னர் உதவி பங்குத்தந்தை ஞான அருள்தாஸ் உடன் இணைந்து திருப்பலியில் கலந்து கொண்ட அனைவரின் நெற்றியிலும் சாம்பல் பூசினார்.

    • சாம்பல் புதனை முன்னிட்டு திருச்சி தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது
    • சி.எஸ்.ஐ. திருச்சபைகளிலும் சிறப்பு ஆராதனை

    திருச்சி:

    உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் கடைபிடிக்கும் தவக்காலம் இன்று தொடங்கியது. தவக் காலத்தின் முதல் நாளான இன்று சாம்பல் புத–னாக அனுசரிக்கப்பட்டது.இதனை முன்னிட்டு திருச்சி மேலப்புதூர் தூய மரி–யன்னை பேரா–லயம், பாலக்கரை சகாய–மாதா தேவாலயம், மெயின் கார்டு கேட் லூர்து அன்னை ஆல–யம், புத்தூர் பாத்திமா கோவில், சிம்கோ மீட்டர் ஜெகன்மாதா கோவில், ஸ்ரீரங்கம் அமல ஆசிரம அந்தோணியார் கோவில், பொன்மலை சூசையப்பர் ஆலயம், எடத்தெரு பழைய கோவில்,கரு–மண்டபம் குணமளிக் கும் மாதா ஆலயம், காட்டூர் அந்தோணியார் ஆலயம், நெம்பர் 1 டோல்கேட் குழந்தை யேசு கோவில், கரு–மண்டபம் தூய யோவான் உள்ளிட்ட கத்தோலிக்க ஆலயங்களில் சிறப்பு திருப் பலி நடைபெற்றது.மேலும் திருச்சியில் உள்ள சி.எஸ்.ஐ. மற்றும் டி.இ.எல்.சி. ஆலயங்களிலும், பெந்த–கோஸ்தே ஜெப கூடங்க–ளில் சிறப்பு பிரார்த்தனை, பிரசங்கம் நடைபெற்றது. கத்தோலிக்க கோவில்களில் நடைபெற்ற சிறப்பு திருப்ப–லியில் கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.சாம்பல் புதனை முன் னிட்டு திருச்சி புத்தூர் சி.எஸ்.ஐ. ஆல்செயிண்ட் சர்ச், திருச்சி ஜங்ஷன் புனித யோவான் தேவாலயம் ஆகியவற்றில் நடந்த சாம் பல் புதன் சிறப்பு பிரார்த் தனையில் திருச்சி-தஞ்சை திருமண்டல பேராயர் சந்திரசேகரன், குருத்துவ செயலர் சுதர்சன் மற்றும் ஆயர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.திருப்பலியின்போது கிறிஸ்தவர்கள் நெற்றியில் சாம்பல் பூசப்பட்டது. குருத் தோலைகளை எரித்து அதில் இருந்து கிடைத்த சாம்பலை அருட் தந்தையர்கள், கிறிஸ் தவர்கள் நெற்றியில் பூசி–னர். இதனைத் தொடர்ந்து 40 நாட்கள் கிறிஸ்தவ ஆலயங்களில் திருப்பலி மற்றும் சிலுவை வழிபாடு நடைபெறும். இந்த நாட்களில் கிறிஸ்தவர்கள் ஒருசந்தி எனும் விரதமிருந்து கடவுளை நினைத்து திருப்பலி மற்றும் பிரார்த்தனைகளில் ஈடுபடுவர்.ஏப்ரல் மாதம் 6-ந்தேதி பெரிய வியாழன் ஆகும். அன்று பாதம் கழுவுதல் நடைபெறும். அன்றைய இரவு முழுவதும் கிறிஸ்த–வர்கள் விழித்திருந்து நற் கருணை ஆராதனையில் கலந்து கொள்வார்கள். ஏசு உயிர்நீத்த நாளாக கடைபிடிக்கப்படும் பெரிய வெள்ளியான ஏப்ரல் 7-ந்தேதியை கிறிஸ்த–வர்கள் துக்க தினமாக அனுச–ரிப் பார்கள். அன்று மாலை நடைபெறும் சிறப்பு திருப்ப–லியில் பாடுபட்ட ஏசுவின் சொரூபத்திற்கு முத்தமிடும் பாத முத்தி நிகழ்வு நடை–பெறும்.8-ந்தேதி, சனிக்கிழமை இரவு 12 மணிக்கு ஈஸ்டர் திருப்பலி நடைபெறும். 9-ந்தேதியான ஞாயிற்றுக் கிழமை ஏசு உயிர்ப்பித்த நாளாக ஈஸ்டர் பண்டிகையை கிறிஸ்தவர்கள் கொண்டா–டுவர்.

    • நம்பிக்கைக்கு அழைத்து செல்லும் தொடக்க நாளாக சாம்பல் புதன் கருதப்படுகிறது.
    • குருத்தோலைகளை எரித்து அதிலிருந்து பெறப்பட்ட சாம்பலை புனிதம் செய்து பூசினர்.

    பூதலூர்:

    தஞ்சை அடுத்த பூண்டி மாதா பேராலயத்தில் இன்று கிறிஸ்தவர்களின் தவக்கால தொடக்கமாக சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தீமையில் இருந்து நன்மைக்கும், அநீதியிலிருந்து நீதிக்கும், அவநம்பிக்கையில் இருந்து நம்பிக்கைக்கு அழைத்து செல்லும் தொடக்க நாளாக சாம்பல் புதன் கருதப்படுகிறது. இறை உதவியை இறைவனின் அன்பை ஜெபத்தின் மூலம் பெற வேண்டும் என்று எடுத்துரைக்கும் நாளாக சாம்பல் புதன் கடைபிடிக்கப்படுகிறது.

    பூண்டி மாதா பேராலயத்தில் இன்று நடைபெற்ற சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி பேரலாய அதிபர் சாம்சன் தலைமையில் நடைபெற்றது. இதில் துணை அதிபர் ரூபன் அந்தோணிராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர், உதவி பங்கு தந்தையர் தாமஸ், அன்புராஜ், ஆன்மீக தந்தை அருளானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர். திருப்பலி நிறைவடைந்தவுடன் கடந்த ஆண்டு குருத்தோலை ஞாயிறு அன்று பக்தர்கள் வீட்டிற்கு எடுத்து சென்று பாதுகாத்து வந்த குருத்தோலைகளை எரித்து அதிலிருந்து பெறப்பட்ட சாம்பலை புனிதம் செய்து பக்தர்களின் நெற்றியில் பேராலய அதிபர் பூசி தவக்காலத்தை தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு தவக்கால விரதத்தை தொடங்கினர். திருப்பலியின் போது பக்தர்களின் நெற்றியில் சாம்பல் பூசப்பட்டது.

    • ஆலங்குடியில் சாம்பல் புதனை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது
    • பங்குத்தந்தை ஆர்கே, அருட்தந்தை கித்தரிமுத்து ஆகியோர் கூட்டுப்பாடல் திருப்பலி நிறைவேற்றினர்.

    ஆலங்குடி:

    ஆலங்குடி அதிசய அன்னை ஆலயத்தில் தவக்காலத்தின் தொடக்க நாளான சாம்பல்புதனை முன்னிட்டு இன்று சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பங்குத்தந்தை ஆர்கே, அருட்தந்தை கித்தரிமுத்து ஆகியோர் கூட்டுப்பாடல் திருப்பலி நிறைவேற்றினர். இந்த திருப்பலியில் கும்மங்குளம், பாத்திமா நகர் வாழைக்கொல்லை, வண்ணாச்சிகொல்லை, ஆலங்குடி, செம்பட்டிவிடுதி நால்ரோடு, அயங்காடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். சிலுவைபாதை வழிபாடும் நடைபெறும்.

    • சமத்துவம், சகோதரத்துவம், மனிதநேயம் நிலைத்திட சிறப்பு பிரார்த்தனை.
    • மத நல்லிணக்கத்தோடு புனித அந்தோணியார் திருத்தல ஆண்டு திருவிழா கொண்டாடப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற புனித பதுவை மற்றும் வனத்து அந்தோணியார் திருத்தல ஆண்டு திருவிழா கடந்த 7-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து பத்து நாட்கள் மன்றாட்டு மாலை, நவநாள் ஜெபம், திருப்பலி உள்ளிட்ட பல்வேறு வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.

    விழாவின் முக்கிய நிகழ்வான திருவிழா திருப்பலி மற்றும் திருத்தேர் பவனி நடைபெற்றது.

    புனித அந்தோணியார் திருத்தல பங்குத்தந்தை ஜான்பிரிட்டோ அடிகளார் தலைமையில், மயிலாடுதுறை மறைவட்டஅதிபர் பங்குத்தந்தை தார்சிஸ் ராஜ் அடிகளார், குத்தாலம் பங்குத்தந்தை ஜெர்லின் கார்ட்டர் அடிகளார், மணவா ளநல்லூர் பங்குத்தந்தை ஜான் அமலதாஸ் அடிகளார், பில்லாவடந்தை பங்குத்தந்தை சாலமோன் அடிகளார், மணல்மேடு பங்குத்தந்தை ஆனந்தராஜ் அடிகளார், மயிலாடுதுறை உதவி பங்குத்தந்தை மைக்கில் டைசன் அடிகளார் ஆகியோர் இணைந்து திருப்பலியை நிறைவேற்றினர்.

    எங்கேயும் பார்க்க முடியாத தன் மதிப்பை சிலுவை எனும் முகக்கண்ணாடிக்கு முன்பு தான் ஒரு மனிதனால் பார்க்க முடியும் என்ற இறைவார்த்தையை மையப்படுத்தி நாகை மறைவட்ட அதிபர் பன்னீர்செல்வம் அடிகளார் திருவிழா மறையுரை யாற்றினார்.

    இந்த சிறப்பு திருப்பலியில் உலக அமைதிக்காகவும், மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா நோய் தொற்று முற்றிலும் ஒழிய வேண்டியும், சமத்துவம், சகோதரத்துவம், மனிதநேயம் நிலைத்திடவும் சிறப்பு பிரார்த்தனை வழிபாடுகள் நடைபெற்றது.

    கிறிஸ்தவர்கள் மட்டு மின்றி பிற சமயத்தவரும் இணைந்து நல்லிணக்கத்தோடு கொண்டாடும் புனித அந்தோணியார் திருத்தல ஆண்டு திருவிழா திருத்தேர்ப வனி நடைபெற்றது.

    வான வேடிக்கை, இன்னிசை முழங்க புனித மைக்கேல் சம்மனசு, புனித ஆரோக்கியநாதர், புனித செபஸ்தியார், புனித ஆரோக்கியமாதா, புனித பதுவை மற்றும் வனத்து அந்தோணியார்களின் திருஉருவம் தாங்கிய ஐந்து தேர்கள் பவனியாக ஆலய வளாகத்தில் தொடங்கி, கொண்டாரெட்டித்தெரு, அழகப்ப செட்டித்தெரு உள்ளிட்ட வீதிகள் வழியாக மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.

    திருப்பலி மற்றும் தேர்பவனி நிகழ்வுகளில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அன்பிய குழுவினர், பங்கு மக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் திருப்பலி, தேர்பவனி உள்ளிட்ட நிகழ்வுகளையடுத்து, திருவிழா நிறைவுத் திருப்பலி நடைபெற்றது.

    புனித அந்தோணியார் திருத்தல பங்குத்தந்தை ஜான்பிரிட்டோ அடிகளார் சிறப்பு மறையுரையாற்றினார். திருப்பலியைத் தொடர்ந்து கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெற்றது.

    விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பங்குத்தந்தை தலைமையில் விழாக்குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

    • கொரோனா தொற்றில் இருந்து மக்களை காப்பாற்றவும் வழிபாடு நடத்தப்பட்டது.
    • கடந்த ஆண்டில் நடந்த நன்மைகளுக்காக நன்றி செலுத்தப்பட்டது.

    தஞ்சாவூர்:

    நள்ளிரவு 12 மணிக்கு 2023-ம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு பிறந்தது. ஆங்கில புத்தாண்டு உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதனை முன்னிட்டு தஞ்சை மேரீஸ்கார்னர் அருகே உள்ள திரு இருதய பேராலயத்தில் புத்தாண்டை முன்னிட்டு நேற்று இரவு நன்றி வழிபாடு திருத்தொண்டர் அரவிந்த் தலைமையில் நடந்தது. இதில் கடந்த ஆண்டில் நடந்த நன்மைகளுக்காக நன்றி செலுத்தப்பட்டது.

    மேலும் உலக அமைதிக்காகவும், கொரோனா தொற்றில் இருந்து மக்களை காப்பாற்றவும் வழிபாடு நடத்தப்பட்டது. அதன்பின்னர் பேராலய பங்கு தந்தை பிரபாகர் தலைமையில் புத்தாண்டு கூட்டு பாடல் திருப்பலி நடந்தது. இதில் உதவி பங்குத்தந்தை பிரவீன் மற்றும் பங்கு பேரவையினர், இளைஞர் மன்றத்தினர் உள்ளிட்ட கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

    இதேப்போல் தஞ்சை சிவகங்கை பூங்கா அருகே உள்ள கோட்டை சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயம், தஞ்சை மானம்புச்சாவடியில் உள்ள சி.எஸ்.ஐ. தூய பேதுரு ஆலயம், தஞ்சை புதுக்கோட்டை சாலையில் உள்ள புனித அடைக்கல மாதா ஆலயம், தஞ்சை குழந்தை ஏசு திருத்தலம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் புத்தாண்டு கூட்டுத்திருப்பலி நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். 

    • கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து சிறப்பு கூட்டு திருப்பலியில் கலந்து கொண்டனர்.
    • கேக் வெட்டி முகத்தில் பூசியப்படி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் நகரத்திற்குட்பட்ட வடக்கு வீதியில் அமைந்துள்ள புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்ட சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெற்றது.ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு புனித பாத்திமா அன்னை ஆலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு காட்சியளித்தது.

    ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இந்த புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து சிறப்பு கூட்டுத் திருப்பலியில் கலந்து கொண்டனர். முன்னதாக சிலுவை ஆலயத்திற்குள் எடுத்துவரப்பட்டு தூபம் காண்பிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து ஆலயத்தில் கூடியிருந்த கிறிஸ்தவர்களுக்கு அருட்தந்தை ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் ஆலயத்திற்கு வெளியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூரையில் அமர்ந்து பலர் சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டனர்.

    மேலும் சரியாக 12 மணிக்கு ஆங்கில புத்தாண்டு பிறந்ததை அறிவிக்கும் வகையில் ஆலயமணி ஒலித்தது.அதனைத் தொடர்ந்து திருப்பலி பிரார்த்தனை நடைபெற்றது.

    இந்த ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு காவல்துறையினர் திருவாரூர் நகரத்தின் முக்கிய வீதிகளான தெற்கு வீதி வடக்கு வீதி கீழ வீதி உள்ளிட்ட இடங்களில் தடுப்புகளை வைத்து இருசக்கர வாகனங்களை அனுமதிக்காமல் தடை செய்தனர்.

    சிலர் வீட்டு வாசலில் வைத்து கேக் வெட்டி முகத்தில் பூசியப்படி ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தங்களுக்குள் தெரிவித்துக் கொண்டனர். திருவாரூர் பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ங்களை சோதனைக்கு பிறகே நகரத்திற்குள் அனுமதித்தனர்.

    ×