search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mass"

    • 124-வது ஆண்டு பெருவிழா நேற்று தொடங்கியது.
    • 11-ந்தேதி லூர்து மாதாவின் தேர்த்திருவிழா நடைபெறுகிறது.

    சென்னை:

    சென்னை பெரம்பூர் தூய லூர்து அன்னை ஆலய 124-வது ஆண்டு பெருவிழா நேற்று தொடங்கியது. இன்று முதல் தினமும் மாலையில் திருப்பலி நடக்கிறது. வருகிற 8, 9-ந்தேதிகளில் அருட்தந்தை ஸ்டீபன் தச்சீல் சிறப்பு நற்செய்தி கூட்டமும், குணமளிக்கும் வழிபாடும் நடக்கிறது. வருகிற 10-ந்தேதி நற்கருணை பவனி நடைபெறுகிறது. 11-ந்தேதி லூர்து மாதாவின் தேர்த்திருவிழா நடைபெறுகிறது.

    இந்த 2 நாட்களிலும் மாபெரும் தேர் பவனியானது ஆலயத்தை சுற்றியுள்ள வீதிகளின் வழியாக சென்று இறுதியில் ரெயில்வே மைதானத்தில் ஒன்று கூடி திருப்பலியோடு நிறைவுபெறும். 11-ந்தேதி பாளையங்கோட்டை முன்னாள் ஆயர் ஜுடு பால்ராஜ் தலைமையில் திருப்பலி நடக்கிறது. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் எரியும் மெழுகு வர்த்திகளை கையில் ஏந்தியவாறு பவனியாக வந்து பங்கேற்கிறார்கள்.

    • சிலுவைப்பாதை வழிபாடு, சிறப்பு பிரார்த்தனை, கூட்டு திருப்பலியும் நடைபெற்றது.
    • தவக்காலத்தில் விரதம் இருந்த கிறிஸ்தவர்கள் தங்கள் விரதத்தை முடித்து விருந்துண்டு மகிழ்வார்கள்.

    திருப்பூர் :

    ஏசு சிலுவையில் அறையப்பட்ட நாளான வெள்ளிக்கிழமையை புனித வெள்ளியாகவும், அவர் உயிர்தெழுந்த 3-ம் நாளான ஞாயிற்றுக்கிழமையை ஈஸ்டர் பெருவிழாவாகவும் கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஈஸ்டர் திருநாளின் முந்தைய ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறாகவும், அதைத்தொடர்ந்து அந்த வாரம் முழுவதும் புனித வாரமாகவும் அனுசரிக்கப்படுகிறது.

    புனித வெள்ளிக்கிழமைக்கு முன்பு வரும் வியாழக்கிழமை பெரிய வியாழனாக கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி நேற்று முன்தினம் தேவாலயங்களில் ஆண்டவரின் கடைசி இரவு உணவு திருப்பலியும், பாதம் கழுவும் சடங்கு போன்றவையும் நடந்தது. நேற்று புனித வெள்ளி தினம் கடைபிடிக்கப்பட்டது. ஏசு சிலுவையை சுமந்து செல்லும்போதும், அந்த சிலுவையில் அறையப்பட்டு மரிக்கும் (இறக்கும்) நேரத்திலும் 7 திருவசனங்களை அவர் கூறினார் என்று புனித நூலான பைபிளில் கூறப்பட்டுள்ளது. அந்த வசனங்களை அடிப்படையாக வைத்து தேவாலயங்களில் பிரசங்கங்கள், ஆராதனைகள் நடந்தன.

    திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள புனித கத்தரீனம்மாள் தேவாலயத்தில் பங்கு தந்தை ஹைசிந்த் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. சிலுவைப்பாதை வழிபாடு, சிறப்பு பிரார்த்தனை, கூட்டு திருப்பலியும் நடைபெற்றது. குமார் நகர் புனித சூசையப்பர் தேவாலயம், சி.எஸ்.ஐ. தூய பவுல் தேவாலயத்தில் ஆயர் ஆனந்த குமார் தலைமையில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

    இதுபோல் ஆசர்நகர் சி.எஸ்.ஐ. தூய லூக்கா தேவாலயம், சபாபதிபுரம் டி.இ.எல்.சி. அருள்நாதர் தேவாலயத்திலும் புனித வெள்ளியையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள், பெந்தேகோஸ்தே திருச்சபைகளிலும், மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    ஏசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்தெழுந்த 3-ம் நாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் பெருவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று நள்ளிரவு 12 மணிக்கு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடத்தப்படுகிறது. நாளை அதிகாலையும் தேவாலயங்களில் கூட்டு திருப்பலிகள், சிறப்பு ஆராதனைகள் நடைபெறும். தவக்காலத்தில் விரதம் இருந்த கிறிஸ்தவர்கள் தங்கள் விரதத்தை முடித்து விருந்துண்டு மகிழ்வார்கள். மேலும் நண்பர்களுக்கும் விருந்தளித்து ஈஸ்டர் பெருவிழாவை கொண்டாடுவார்கள்.

    • ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி நடைபெற்றது
    • திருப்பலியில் கலந்து கொண்ட அனைவரின் நெற்றியிலும் சாம்பல் பூசினார்.

    திருமானூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் திருகாவலூர் எனும் ஏலாக்குறிச்சியில் உள்ள புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பங்கு தந்தை அதிபர் தங்கசாமி இந்த சிறப்பு திருப்பலியை நிறைவேற்றினார். திருப்பலியில் அவர் பிரசங்கம் செய்த போது, இந்த தவக்காலம் என்பது மன மாற்றத்திற்கான மனம் திருந்துவதற்கான காலமாகும். நாம் செய்த பாவங்களை நினைத்து மனம் திரும்பி வாழும் காலமாகும். மனிதன் கடவுளைத் தேடும் காலமாகும் என்று பேசினார். அதன் பின்னர் உதவி பங்குத்தந்தை ஞான அருள்தாஸ் உடன் இணைந்து திருப்பலியில் கலந்து கொண்ட அனைவரின் நெற்றியிலும் சாம்பல் பூசினார்.

    • ஆலங்குடியில் சாம்பல் புதனை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது
    • பங்குத்தந்தை ஆர்கே, அருட்தந்தை கித்தரிமுத்து ஆகியோர் கூட்டுப்பாடல் திருப்பலி நிறைவேற்றினர்.

    ஆலங்குடி:

    ஆலங்குடி அதிசய அன்னை ஆலயத்தில் தவக்காலத்தின் தொடக்க நாளான சாம்பல்புதனை முன்னிட்டு இன்று சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பங்குத்தந்தை ஆர்கே, அருட்தந்தை கித்தரிமுத்து ஆகியோர் கூட்டுப்பாடல் திருப்பலி நிறைவேற்றினர். இந்த திருப்பலியில் கும்மங்குளம், பாத்திமா நகர் வாழைக்கொல்லை, வண்ணாச்சிகொல்லை, ஆலங்குடி, செம்பட்டிவிடுதி நால்ரோடு, அயங்காடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். சிலுவைபாதை வழிபாடும் நடைபெறும்.

    • புனித குழந்தை தெரசாள் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் திருப்பலி நடந்தது.
    • ஆலய பங்கு தந்தை எஸ்.எஸ்.பாஸ்டின் கிறிஸ்துமஸ் திருப்பலியை நடத்தினார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர்பகுதியில் உள்ள புகழ் மிக்க புனித குழந்தை தெரசாள் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பிறப்பை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நடந்தது.

    முன்னதாக நள்ளிரவு12 மணிஅளவில் குழந்தை ஏசு பிறக்கும் காட்சி தத்ரூபமாக குடில் அமைத்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதைதொடர்ந்து ஆலய பங்கு தந்தை எஸ்.எஸ்.பாஸ்டின் கிறிஸ்துமஸ் திருப்பலியை நடத்தினார். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

    வருங்காலங்களில் பெரும் நோய் தொற்றுகள் ஏற்படக்கூடாது, இயற்கை சீற்றங்களின்றி மக்கள் அமைதியுடன்-மகிழ்ச்சி யுடன் வாழ ஜெபம் செய்யப்பட்டது. நள்ளிரவு திருப்பலிபூஜை நிறைவு பெற்றவுடன் புனித குழந்தை தெரசாள் ஆலயபங்கு தந்தை எஸ்.எஸ்.பாஸ்டின் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    • ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடந்தது.
    • பங்குத்தந்தை வளன், திருத்தல நிர்வாகி அந்தோனி ஜோசப், அருட் தந்தையர்கள் வில்சன், ஆரோக்கியசாமி, சூசை, அமைதியக நிர்வாகி ஆரோக்கிய சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் தென்ன கத்து வேளாங்கண்ணி என்று போற்றப்படும் ஆரோக்கிய அன்னை திருத்தலம் உள்ளது. இங்கு கிறிஸ்துமஸ் பண்டிகையை யொட்டி சிறப்பு திருப்பலி நடந்தது.

    இறை வார்த்தை சபை மாநில தலைவர் சாந்து ராஜா தலைமை தாங்கினார். திருத்தல பங்குத்தந்தை வளன், திருத்தல நிர்வாகி அந்தோனி ஜோசப், அருட் தந்தையர்கள் வில்சன், ஆரோக்கியசாமி, சூசை, அமைதியக நிர்வாகி ஆரோக்கிய சாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

    நள்ளிரவு 12 மணிக்கு ஏசு பிறப்பை விளக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த குடிலில் குழந்தை ஏசுவை எழுந்தருள செய்து தூபம் காண்பிக்கப்பட்டது. முன்னதாக கிறிஸ்மஸ் பாடல்கள், பங்கு இளை யோர் கலைநிகழ்ச்சி நடந்தது. இதில் மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவ கங்கை, கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்திய பிரியா தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.

    • கிராம மயானத்துக்கு செல்ல பாதை வசதி ஏற்படுத்த வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தினர்.
    • பெரியபட்டினம் கடற்கரையில் நூற்றுக்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள்.

    கீழக்கரை

    பெரியபட்டினம் ஊராட்சியில் உள்ள அரசு புறம்போக்கு நிலம் 77 ஏக்கரில் அமைந்துள்ள கப்பல்லாற்று நீர்பிடிப்பு பகுதி, 2,200 மீட்டர் நீளம் உள்ள மொரவாய்கால் ஓடை பகுதியை அப்பகுதி தென்னை விவசாய மக்களுக்காகவும், நிலத்தடி நீரை உயர்த்தவும், அப்பகுதியை பராமரிப்பு செய்வதற்கும் ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    பெரியபட்டினம் கடற்கரையில் நூற்றுக்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள் ஆதலால் பெரியபட்டினம் கடற்கரையில் மீன்பிடி தளம் கட்டுவதற்கு ராமநாதபுரம் உதவி இயக்குநர் (மீன்வளத்துறை தெற்கு) பரிந்துரை செய்ய வேண்டும்.

    தெற்கு புதுகுடியிருப்பு மற்றும் குருத்தமண்குண்டு ஆகிய கிராமங்களில் உள்ள பொது மயானத்திற்கு பாதை வசதி செய்ய இடம் தேர்வு செய்து தர கீழக்கரை வட்டாட்சியருக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

    தங்கையா நகர் கிராமத்தில் அங்கன்வாடி மையம் அமைத்து தர வேண்டும். காயிதேமில்லத் நகர் கிழக்கு பகுதியில் உயர்மின் அழுத்த கம்பியை அகற்றி புதிய மின் கம்பி இணைப்பு அமைக்க வேண்டும். தெற்கு புதுகுடியிருப்பு கிராமம் செல்லும் வழியிலும், குறுத்த மண்குண்டு பகுதிக்கு தெற்கு புதுகுடியிருப்பு சாலையிலிருந்து தெரு விளக்கு வசதி செய்து தர வேண்டும்.

    பெரியபட்டினம் ஊராட்சி காயிதேமில்லத் நகர் மற்றும் மிலால் நகர் பகுதிகளில் புதிய மின்மாற்றி அமைக்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கவுன்சிலர் பைரோஸ்கான் கேட்டுக்கொண்டார்.

    கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

    ×