search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Candlelight"

    • மெழுகுவர்த்தியில் ஒளி ஏற்றிக்கொண்டு கைகளில் ஏந்தியவாறு திருப்பலியில் கலந்து கொண்டனர்.
    • இயேசுநாதரின் உருவத்தை பேராலய அதிபர் சாம்சன் திறந்து வைத்து புனிதம் செய்தார்.

    பூதலூர்:

    தஞ்சை மாவட்டத்தில் பூண்டி மாதா பேராலயம் உள்ளது. பூலோகம் போற்றும் பூண்டி மாதா என்று புகழப்படும் பூண்டி மாதா பேராலயத்தில், இயேசுநாதர் உயிர்த்தெழுந்ததை கொண்டாடும் ஈஸ்டர் பெருவிழா நேற்று நள்ளிரவில் தொடங்கி இன்று அதிகாலையில் முடிவடைந்தது.ஈஸ்டர் திருவிழா திருப்பலி நேற்று நள்ளிரவில் தொடங்கியது.இதில் மிகத் திரளான மக்கள் பூண்டி மாதா பேராலய வளாகத்தில் திரண்டு இருந்தனர்.

    யேசுநாதர் உயிர்த்தெ ழுந்ததை குறிக்கும் வகை யில் புதிய நெருப்பு உண்டாக்கப்பட்டு அதனை மந்திரித்து அதிலிருந்து பாஸ்கா திரி எனப்படும் பெரிய மெழுகுவர்த்தியில் ஒளி ஏற்றப்பட்டது. இந்த மிகப்பெரிய மெழுகுவர்த்தி யில் சிலுவை அடையாளம் வரையப்பட்டிருந்தது. நமது மீட்பின் தொடக்கமும் முடிவும் கிறிஸ்துவே என்பதை காட்ட பேரலாய அதிபர் தந்தை தமிழ் மொழியின் முதல் எழுத்தான (அ) வையும் கடைசி எழுத்தான (ன) வையும் மெழுகுவர்த்தியில் எழுதினார். நடப்பு ஆண்டினை குறிக்கும் விதமாக 2023 என்று பொறிக்கப்பட்டு, இயேசுவின் 5 காயங்களை நினைவுபடுத்தும் விதமாக பெரிய மெழுகு திரியில் 5 மணிகளை பதிக்கப்பட்டது.

    பெரிய மெழுகு வர்த்தியில்ஒ ளியேற்றப்பட்டு அதனை பூண்டி பேராலய அதிபர் சாம்சன் கையில் ஏந்தியவாறு திருப்பலி மேடைக்கு கிறிஸ்துவின் ஒளி இதோ என உரக்க பாடியவண்ணம் ஏந்தி வந்தார். உயிர்ப்பு விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் தங்கள் கைகளில் வைத்திருந்த மெழுகுவர்த்தியில் ஒளி ஏற்றிக்கொண்டு கைகளில் ஏந்தியவாறு திருப்பலியில் கலந்து கொண்டனர். கிறிஸ்துவின் ஒளி இதோ என்று பாடியவாறு பேராலய அதிபர் சாம்சன்கைகளில் ஏந்தி வந்த மெழுகுவர்த்தியை திருப்பலி மேடையின் மீது அமைக்கப்பட்டிருந்த இடத்தில் பொருத்தி வைத்தார்.

    உயிர்ப்பு விழா சிறப்பு திருப்பலி யில் பேராலயஅதிபர் சாம்சன், துணை அதிபர் ரூபன் அந்தோணி ராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர், உதவி பங்கு தந்தையர் தாமஸ், அன்புராஜ், ஆன்மீக தந்தை அருளானந்தம், ஆகியோர் பங்கு கொண்டனர். உன்னதங்களிலே பாடல் பாடப்பட்ட போது ஆலயமணிகள் ஒலிக்க ஏசுநாதர் உயிர்த்தெழுந்ததை குறிக்கும் வகையில் பீடத்தின் அருகில் அமைக்கப்பட்டிருந்த இயேசுநாதரின் உருவத்தை பேராலய அதிபர் சாம்சன் திறந்து வைத்து புனிதம் செய்தார். அதனைத் தொடர்ந்து திருப்பலிநடைபெற்றது. வீபுதி புதன் அன்று தொடங்கிய கிறிஸ்தவர்களின் 40நாள் தவக்காலம் யேசுநாதர் உயிர்த்தெழுந்ததை கொண்டாடும் ஈஸ்டர் நாளுடன் முடிவடைகிறது. இன்று பூண்டி மாதா பேராலயத்தில் காலை, நண்பகல், மாலையில் ஈஸ்டர் நாள் திருப்பலிகள் நிறைவேற்றப்படுகின்றன.

    • பக்தர்கள் அலகு காவடி எடுத்தும், வாயில் அலகு குத்தியும் மேளதாளங்கள் முழங்க கோவிலை வந்தடைந்தனர்.
    • கோயில் வளாகத்தில் ஏராளமான பெண்கள் மாவிளக்கு ஏற்றி வழிபட்டனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் கீழ்மாத்தூர் ஊராட்சியில் தருமபுரம் ஆதீனம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ஒட்டங்காட்டில் உள்ள சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா நடைபெற்றது.

    காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் அலகு காவடி எடுத்தும், 16 அடிநீள அலகை வாயில் குத்தி மேளதாளங்கள் முழங்க வலம் வந்து கோயிலை வந்தடைந்தனர்.

    பின்னர் கோயிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    சிலர் குழந்தைகளை தூக்கிக்கொண்டு தீக்குண்டத்தில் இறங்கினர்.

    தொடர்ந்து கோயில் வளாகத்தில் ஏராளமான பெண்கள், மாவிளக்கு ஏற்றி வழிபட்டனர்.

    திருக்கடையூர் கோவில் நிர்வாகிகள் தீமிதி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    ஊராட்சி மன்ற தலைவர் விஜேந்திரன், மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்துக் கொன்டனர்.

    இதேபோல் இலுப்பூர் ஸ்ரீமகா மாரியம்மன் கோவிலில் 23- ஆம் ஆண்டு தீமிதி திருவிழா நடைபெற்றது.

    ×