search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெழுகுவர்த்தி"

    • ஆலயத்தின் முன்புறம் இருபுறங்களும் ஏஞ்சல் சிலை உள்ளது.
    • சுற்று வட்டாரத்தை சேர்ந்த பலர், ஆலயத்திற்கு வந்து சிலையில் இருந்து தண்ணீர் வடியும் அதிசயத்தை பார்த்து சென்றனர்.

    ஓட்டப்பிடாரம்:

    தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட தருவை குளம் பகுதியில் தூய மிக்கல் அதிதூதர் ஆலயம் அமைந்துள்ளது.

    இந்த ஆலயத்தின் முன்புறம் இருபுறங்களும் ஏஞ்சல் சிலை உள்ளது. இதில் வலது புறம் உள்ள ஏஞ்சல் சிலையில் இடது விரல்களில் இருந்து தண்ணீர் போன்ற ஒரு திரவம் வழிந்து கொண்டிருக்கிறது. இதைப்பார்த்த அப்பகுதியினர் ஆச்சர்யம் அடைந்தனர்.

    இந்த செய்தி அப்பகுதி முழுவதும் காட்டுத்தீயாக பரவியது. இதையறிந்த சுற்று வட்டாரத்தை சேர்ந்த பலர், ஆலயத்திற்கு வந்து சிலையில் இருந்து தண்ணீர் வடியும் அதிசயத்தை பார்த்து சென்றனர். இதனால் ஆலயத்தில் மக்கள் கூட்டம் அலை மோதியது.

    இதனையொட்டி ஆலயத்தில் சிறப்பு திருப்பலி ஆராதனையை நடத்தினர். தொடர்ந்து ஏராளமானோர் மெழுகுவர்த்தி ஏற்றி ஜெபம் செய்தனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

    • கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி பக்தர்கள் வழிபட்டனர்.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அனைவரும் நலம் பெற வேண்டி வழிபாடு நடத்தினர்.

    பூதலூர்:

    தமிழ்நாட்டில் புகழ் பெற்ற கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒன்று பூண்டி மாதா பேராலயம்.

    பேராலயத்தில் பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறவும் நாட்டு மக்கள் நலம் பெறவும் நாடு வளம் பெறவும் வேண்டி புதுமை இரவு குணமளிக்கும் நற்செய்தி நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியை அரசடி பட்டி பங்குத்தந்தை அமல வில்லியம் ஒருங்கிணைத்து நிறைவேற்றினார்.

    பேராலயத்தில் நடைபெற்ற திருப்பலிக்கு பின்னர் பூண்டி மாதா சுருபவம் வைக்கப்பட்ட சிறிய தேர் பவனி நடைபெற்றது. அப்போது கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி பக்தர்கள் வழிபட்டனர்.

    அதன் பின்னர் குணமளிக்கும் இரவு ஜெப வழிபாடு நடைபெற்றது.

    ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அனைவரும் நலம் பெற வேண்டி வழிபாடு நடத்தினர்.

    • ஆண்டு திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • ஏராளமான கிறிஸ்தவர்கள் கையில் எரியும் மெழுகுவர்த்தியுடன் கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பூக்காரத்தெருவில் உள்ள புனித வியாகுல அன்னை ஆலயம் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்தவை. மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழும் இந்த ஆலயத்திற்கு ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை திருமணம் ஆகாத பெண்கள், கர்ப்பிணி பெண்கள் வந்து குத்துவிளக்கிற்கு எண்ணெய் ஊற்றி சென்றால் கேட்டவரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வழிபட்டு செல்கின்றனர்.

    இந்த ஆலயத்தின் ஆண்டு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் இறுதிவாரத்தில் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான ஆண்டு திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் நவநாள் வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான வியாகுல அன்னை தேர்பவனி நேற்றுஇரவு நடைபெற்றது. முன்னதாக திருவிழா கூட்டுப்பாடல் திருப்பலி மறைமாவட்ட பரிபாலகர் சகாயராஜ் அடிகளார் தலைமையில் நடந்தது. இதில் பேராலய பங்குதந்தை பிரபாகர், உதவி பங்குதந்தை பிரவீன் மற்றும் குருக்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து தேர்கள் புனிதம் செய்யப்பட்டு தேர்பவனி நடைபெற்றது. முதலாவதாக மைக்கேல் சம்மனசு தேரும், தொடர்ந்து புனிதசவேரியார், புனிதசூசையப்பர், புனிதஅந்தோணியார் சொரூபங்களை தாங்கிய தேரும், இறுதியாக வியாகுல அன்னை தேரும் பவனியாக வந்தன. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கையில் எரியும் மெழுகுவர்த்தியுடன் கலந்து கொண்டனர்.விழாவிற்கான ஏற்பா டுகளை உதவி பங்குதந்தை பிரவீன் அடிகளார் தலைமையில் பங்கு பேரவை துணைத் தலைவர் வின்சென்ட், செயலாளர் குழந்தைராஜ், பக்த சபைகள், அன்பிய பொறுப்பாளர்கள் செய்து இருந்தனர்.

    • விஜய் வசந்த் எம்.பி., ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.பங்கேற்பு
    • உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி :

    மணிப்பூர் மாநிலத்தில் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததை கண்டித்தும் வன்முறைகளை தடுக்க தவறிய மத்திய, மாநில பாரதிய ஜனதா அரசுகளை ராஜினாமா செய்ய கோரியும் கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் கருங்கல் ஆட்டோ நிறுத்தத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். பேரூராட்சி, ஊராட்சி காங்கிரஸ் தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.

    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரும், கிள்ளியூர் எம்.எல்.ஏ.வுமான ராஜேஷ் குமார் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

    விஜய் வசந்த் எம்.பி., குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால்சிங் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில சிறப்பு பேச்சாளர் பால்துரை சிறப்பு விருந்தி னராக கலந்துகொண்டு மணிப்பூர் கலவரத்தை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கும் மத்திய மற்றும் மாநில பாரதிய ஜனதா அரசுகளை கண்டித்து கண்டன உரையாற்றினார்.

    இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் டைட்டஸ், மாநில பொதுச் செயலாளர் ஆஸ்கார் பிரடி, கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் கிறிஸ்டல் ரமணி பாய் மற்றும் மாநில, மாவட்ட, வட்டார நிர்வாகிகள், துணை அமைப்புகளின் மாவட்ட, வட்டார தலைவர்கள், நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசும் கண்டு கொள்ளாமல் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன
    • காங்கிரஸ் கமிட்டி சார்பில் குழித்துறை சந்திப்பில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

    கன்னியாகுமரி :

    மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு எதிராக பல்வேறு வன்கொடுமைகள் நடைபெற்று வந்து கொண்டிருக்கிறது. இதனை மாநிலத்தில் ஆளும் பா.ஜனதா அரசும், மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசும் கண்டு கொள்ளாமல் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் குழித்துறை சந்திப்பில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டாக்டர் பினுலால் சிங் தலைமை தாங்கினார். துணைத் தலைவரும் பேரூராட்சி தலைவருமான சுரேஷ் முன்னிலை வகித்தார். கிள்ளியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுக்குழு உறுப்பினர் ரத்தினகுமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் பால்ராஜ், ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் தம்பி விஜயகுமார், மாவட்ட பொருளாளர் ஐ.ஜி.பி. லாரன்ஸ், வட்டார தலைவர்கள் ரவிசங்கர், ஜெபா, ராஜசேகரன், குமார், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் செல்வகுமார், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் செலின் மேரி, கொல்லஞ்சி ஊராட்சித் தலைவி சலோமி, மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் வக்கீல் ஜான் இக்னேசியஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தேர்பவனி விழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • அலங்கரிக்கப்பட்ட தேரின் மீது மலர்தூவி மெழுகுவர்த்தி ஏற்றி வேண்டுதலை நிறைவேற்றினர்.

    சுவாமிமலை:

    கும்பகோணத்தில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் தேர்பவனி விழா கடந்த 4-ந் தேதி மறைமாவட்ட முதன்மை குரு இருதய ஆண்டவர் மருத்துவமனை இயக்குனர் தேவதாஸ் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அதனை தொடர்ந்து, தினமும் அருட்தந்தையர்களால் செபமாலை, நவநாள் செபம், கூட்டு திருப்பலி ஆகியவை நடைபெற்றன.

    முன்னதாக ஆயர் அந்தோ ணிசாமி தலைமையில் காலை திருப்பலி மற்றும் மறையுரை அருள் செபஸ்தியார் மற்றும் மாலை ஜெபமாலை நவநாள் திருப்பலி மற்றும் மறையுரை பங்கு தந்தைகள் நடத்தினர்.

    அதனைத்தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித அந்தோணியார், எழுந்தருள ஆயர் அந்தோணிசாமி வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து, வாணவேடிக்கையுடன் தேர்பவனி சிறப்பாக நடைபெற்றது.

    தேர் பவனியின் போது, ஒவ்வொரு கிறிஸ்துவ குடும்பத்தினர் உப்பு, மிளகு ஆகியவற்றை அலங்கரிக்கப்பட்ட தேரின் மீது தூவி மெழுகுவர்த்தி ஏற்றி வேண்டுதலை நிறை வேற்றினர்.

    நிகழ்வில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.

    • பேராலயத்தின் உள்ளே நுழைவாயில் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டு பக்தர்களால் வணங்கப்பட்டு வருகிறது.
    • கல்லறை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மெழுகுவர்த்தி ஏத்தி வைக்கப்பட்டிருந்தது.

    பூதலூர்:

    பூண்டி மாதா பேராலயத்தில் 1955 ஆம் ஆண்டு முதல் பங்கு தந்தையாக பணியாற்றியவர் லூர்து சேவியர் அடிகளார்.

    இவரது அருட்பணி காலத்தில் பூண்டி மாதாஆலயத்தின் புகழ் பரவ தொடங்கியது.

    தன்னை நாடி வந்தவர்களை எல்லாம் ஆதரித்து அன்னையிடம் ஜெபியுங்கள் எல்லாம் நலமாக முடியும் என்று ஆறுதல் அளித்தவர் லூர்து சேவியர் அடிகளார்.

    இவர் 1972 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி மறைந்தார்.

    அவரது உடல் பூண்டி மாதா பேராலயத்தின் உள்ளே நுழைவாயில் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டு பக்தர்களால் வணங்கப்பட்டு வருகிறது.

    மறைந்த லூர்து சேவியர் அடிகளாரின் 52- வதுநினைவு நாள் பூண்டி மாதா பேராலயத்தில் அனுசரிக்கப்பட்டது.

    பூண்டி பேராலயத்தின் உள்ளே அமைந்திருக்கும் லூர்து சேவியர் அடிகளாரின் கல்லறை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு , மெழுகுவர்த்தி ஏந்தி வைக்கப்பட்டிருந்தது .

    இதனை பேராலய அதிபர் சாம்சன் புனிதம் செய்தார் . துணை அதிபர் ரூபன் அந்தோணி ராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர் , உதவி பங்கு தந்தையர் தாமஸ், அன்புராஜ், ஆச்சனூர் பங்குத்தந்தை சந்தியாகு, ஆன்மீக தந்தை அருளானந்தம் ஆகியோர் உடனிருந்தனர்.

    திரளான பக்தர்கள் லூர்து சேவியர் அடிகளார் கல்லறைக்கு மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி வணங்கினார்கள்.

    • மெழுகுவர்த்தியில் ஒளி ஏற்றிக்கொண்டு கைகளில் ஏந்தியவாறு திருப்பலியில் கலந்து கொண்டனர்.
    • இயேசுநாதரின் உருவத்தை பேராலய அதிபர் சாம்சன் திறந்து வைத்து புனிதம் செய்தார்.

    பூதலூர்:

    தஞ்சை மாவட்டத்தில் பூண்டி மாதா பேராலயம் உள்ளது. பூலோகம் போற்றும் பூண்டி மாதா என்று புகழப்படும் பூண்டி மாதா பேராலயத்தில், இயேசுநாதர் உயிர்த்தெழுந்ததை கொண்டாடும் ஈஸ்டர் பெருவிழா நேற்று நள்ளிரவில் தொடங்கி இன்று அதிகாலையில் முடிவடைந்தது.ஈஸ்டர் திருவிழா திருப்பலி நேற்று நள்ளிரவில் தொடங்கியது.இதில் மிகத் திரளான மக்கள் பூண்டி மாதா பேராலய வளாகத்தில் திரண்டு இருந்தனர்.

    யேசுநாதர் உயிர்த்தெ ழுந்ததை குறிக்கும் வகை யில் புதிய நெருப்பு உண்டாக்கப்பட்டு அதனை மந்திரித்து அதிலிருந்து பாஸ்கா திரி எனப்படும் பெரிய மெழுகுவர்த்தியில் ஒளி ஏற்றப்பட்டது. இந்த மிகப்பெரிய மெழுகுவர்த்தி யில் சிலுவை அடையாளம் வரையப்பட்டிருந்தது. நமது மீட்பின் தொடக்கமும் முடிவும் கிறிஸ்துவே என்பதை காட்ட பேரலாய அதிபர் தந்தை தமிழ் மொழியின் முதல் எழுத்தான (அ) வையும் கடைசி எழுத்தான (ன) வையும் மெழுகுவர்த்தியில் எழுதினார். நடப்பு ஆண்டினை குறிக்கும் விதமாக 2023 என்று பொறிக்கப்பட்டு, இயேசுவின் 5 காயங்களை நினைவுபடுத்தும் விதமாக பெரிய மெழுகு திரியில் 5 மணிகளை பதிக்கப்பட்டது.

    பெரிய மெழுகு வர்த்தியில்ஒ ளியேற்றப்பட்டு அதனை பூண்டி பேராலய அதிபர் சாம்சன் கையில் ஏந்தியவாறு திருப்பலி மேடைக்கு கிறிஸ்துவின் ஒளி இதோ என உரக்க பாடியவண்ணம் ஏந்தி வந்தார். உயிர்ப்பு விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் தங்கள் கைகளில் வைத்திருந்த மெழுகுவர்த்தியில் ஒளி ஏற்றிக்கொண்டு கைகளில் ஏந்தியவாறு திருப்பலியில் கலந்து கொண்டனர். கிறிஸ்துவின் ஒளி இதோ என்று பாடியவாறு பேராலய அதிபர் சாம்சன்கைகளில் ஏந்தி வந்த மெழுகுவர்த்தியை திருப்பலி மேடையின் மீது அமைக்கப்பட்டிருந்த இடத்தில் பொருத்தி வைத்தார்.

    உயிர்ப்பு விழா சிறப்பு திருப்பலி யில் பேராலயஅதிபர் சாம்சன், துணை அதிபர் ரூபன் அந்தோணி ராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர், உதவி பங்கு தந்தையர் தாமஸ், அன்புராஜ், ஆன்மீக தந்தை அருளானந்தம், ஆகியோர் பங்கு கொண்டனர். உன்னதங்களிலே பாடல் பாடப்பட்ட போது ஆலயமணிகள் ஒலிக்க ஏசுநாதர் உயிர்த்தெழுந்ததை குறிக்கும் வகையில் பீடத்தின் அருகில் அமைக்கப்பட்டிருந்த இயேசுநாதரின் உருவத்தை பேராலய அதிபர் சாம்சன் திறந்து வைத்து புனிதம் செய்தார். அதனைத் தொடர்ந்து திருப்பலிநடைபெற்றது. வீபுதி புதன் அன்று தொடங்கிய கிறிஸ்தவர்களின் 40நாள் தவக்காலம் யேசுநாதர் உயிர்த்தெழுந்ததை கொண்டாடும் ஈஸ்டர் நாளுடன் முடிவடைகிறது. இன்று பூண்டி மாதா பேராலயத்தில் காலை, நண்பகல், மாலையில் ஈஸ்டர் நாள் திருப்பலிகள் நிறைவேற்றப்படுகின்றன.

    • கருப்பு பேட்ஜ் அணிந்து மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
    • காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் குணமடைய வேண்டி பிரார்த்தனை.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த அண்டர்காடு அரசு உதவி பெறும் சுந்தரேசவிலாஸ் தொடக்கப்பள்ளியில் சிரியா மற்றும் துருக்கி நாடுகளில் நிலநடுக்கத்தால் உயிரிழந்த பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

    மேலும், நிலநடுக்கத்தால் காயமடைந்து மருத்துவம னையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் குணமடைய வேண்டி பிரார்த்தனை நடைபெற்றது.

    இதில் பள்ளி ஆசிரியர் வசந்தா, ஓய்வு பெற்ற ஆசிரியர் சித்திரவேல் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

    • புனித அந்தோணியார் சொரூபங்களை தாங்கிய தேரும் இறுதியாக வியாகுல அன்னை தேரும் பவனியாக சென்றது.
    • மக்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஜெபித்து கொண்டும், பாடிக்கொண்டும் வந்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பூக்காரத் தெருவில் அமைந்துள்ள புனித வியாகுல அன்னை ஆலயத்தில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் ஆண்டு திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு கடந்த 15-ந் தேதி வியாகுல அன்னையின் திருக்கொடி ஏற்றி வைக்கப்பட்டு நவநாள் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வியாகுல அன்னையின் தேர்பவனி நேற்றிரவு நடைபெற்றது. முன்னதாக குடந்தை மறை மாவட்டத்தை சேர்ந்த அந்துவான் அடிகளார் தலைமையில் கூட்டுப் பாடல் திருப்பலி நடைபெற்றது. இதில் பேராலய பங்குத்தந்தை பிரபாகர் அடிகளார், உதவி பங்கு தந்தை பிரவீன் அடிகளார் உள்பட குருக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இதையடுத்து தேர் பவனி நடைபெற்றது. முதலில் மிக்கேல் சம்மனசு தேரும், அதனைத் தொடர்ந்து புனித சவேரியார், புனித சூசையப்பர், புனித அந்தோணியார் சுரூபங்களை தாங்கிய தேரும் இறுதியாக வியாகுல அன்னை தேரும் பவனியாக சென்றது. இதில் ஏராளமான இறை மக்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஜெபித்துக் கொண்டும், பாடிக்கொண்டும் வந்தனர். முடிவில் பேராலய மக்கள் மன்றத்தில் அன்பு விருந்து வழங்கப்பட்டது.

    வியாகுல அன்னை திருவிழாவின் நிறைவு நாளான இன்று வியாகுல அன்னை ஆலயத்தில் குடந்தை ஆயர் அந்தோணிசாமி தலைமையில் கூட்டுப் பாடல் திருப்பலி நடைபெற்றது. இதில் மறை மாவட்ட வேந்தர் ஜான் சக்கரியாஸ் கலந்து கொண்டார். முடிவில் பேராலய பங்குத்தந்தை பிரபாகர் அன்னையின் திருக்கொடியை இறக்கி வைத்தார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பங்கு பேரவை துணைத் தலைவர் வின்சண்ட், செயலர் குழந்தைராஜ், அன்பிய பொறுப்பாளர்கள், இளைஞர் மன்றத்தினர், பக்த சபைகள் செய்திருந்தனர்.

    ×