search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "candle"

  • ஆலயத்தின் முன்புறம் இருபுறங்களும் ஏஞ்சல் சிலை உள்ளது.
  • சுற்று வட்டாரத்தை சேர்ந்த பலர், ஆலயத்திற்கு வந்து சிலையில் இருந்து தண்ணீர் வடியும் அதிசயத்தை பார்த்து சென்றனர்.

  ஓட்டப்பிடாரம்:

  தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட தருவை குளம் பகுதியில் தூய மிக்கல் அதிதூதர் ஆலயம் அமைந்துள்ளது.

  இந்த ஆலயத்தின் முன்புறம் இருபுறங்களும் ஏஞ்சல் சிலை உள்ளது. இதில் வலது புறம் உள்ள ஏஞ்சல் சிலையில் இடது விரல்களில் இருந்து தண்ணீர் போன்ற ஒரு திரவம் வழிந்து கொண்டிருக்கிறது. இதைப்பார்த்த அப்பகுதியினர் ஆச்சர்யம் அடைந்தனர்.

  இந்த செய்தி அப்பகுதி முழுவதும் காட்டுத்தீயாக பரவியது. இதையறிந்த சுற்று வட்டாரத்தை சேர்ந்த பலர், ஆலயத்திற்கு வந்து சிலையில் இருந்து தண்ணீர் வடியும் அதிசயத்தை பார்த்து சென்றனர். இதனால் ஆலயத்தில் மக்கள் கூட்டம் அலை மோதியது.

  இதனையொட்டி ஆலயத்தில் சிறப்பு திருப்பலி ஆராதனையை நடத்தினர். தொடர்ந்து ஏராளமானோர் மெழுகுவர்த்தி ஏற்றி ஜெபம் செய்தனர்.

  இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

  • குத்துவிளக்கில் விழுந்து பெண் பலியானார்.
  • செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  மதுரை

  மதுரை செல்லூர் சத்தியமூர்த்தி 6-வது தெருவை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி ஹேமலதா (வயது42). சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவருக்கு வலிப்பு நோய் வந்தது.

  அப்போது அங்கிருந்த குத்துவிளக்கின் மீது பிரேமலதா தவறி விழுந்தார். இதில் காயமடைந்த அவர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

  இதுகுறித்து செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • பேராலயத்தின் உள்ளே நுழைவாயில் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டு பக்தர்களால் வணங்கப்பட்டு வருகிறது.
  • கல்லறை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மெழுகுவர்த்தி ஏத்தி வைக்கப்பட்டிருந்தது.

  பூதலூர்:

  பூண்டி மாதா பேராலயத்தில் 1955 ஆம் ஆண்டு முதல் பங்கு தந்தையாக பணியாற்றியவர் லூர்து சேவியர் அடிகளார்.

  இவரது அருட்பணி காலத்தில் பூண்டி மாதாஆலயத்தின் புகழ் பரவ தொடங்கியது.

  தன்னை நாடி வந்தவர்களை எல்லாம் ஆதரித்து அன்னையிடம் ஜெபியுங்கள் எல்லாம் நலமாக முடியும் என்று ஆறுதல் அளித்தவர் லூர்து சேவியர் அடிகளார்.

  இவர் 1972 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி மறைந்தார்.

  அவரது உடல் பூண்டி மாதா பேராலயத்தின் உள்ளே நுழைவாயில் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டு பக்தர்களால் வணங்கப்பட்டு வருகிறது.

  மறைந்த லூர்து சேவியர் அடிகளாரின் 52- வதுநினைவு நாள் பூண்டி மாதா பேராலயத்தில் அனுசரிக்கப்பட்டது.

  பூண்டி பேராலயத்தின் உள்ளே அமைந்திருக்கும் லூர்து சேவியர் அடிகளாரின் கல்லறை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு , மெழுகுவர்த்தி ஏந்தி வைக்கப்பட்டிருந்தது .

  இதனை பேராலய அதிபர் சாம்சன் புனிதம் செய்தார் . துணை அதிபர் ரூபன் அந்தோணி ராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர் , உதவி பங்கு தந்தையர் தாமஸ், அன்புராஜ், ஆச்சனூர் பங்குத்தந்தை சந்தியாகு, ஆன்மீக தந்தை அருளானந்தம் ஆகியோர் உடனிருந்தனர்.

  திரளான பக்தர்கள் லூர்து சேவியர் அடிகளார் கல்லறைக்கு மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி வணங்கினார்கள்.

  • கருப்பு பேட்ஜ் அணிந்து மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
  • காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் குணமடைய வேண்டி பிரார்த்தனை.

  வேதாரண்யம்:

  வேதாரண்யம் அடுத்த அண்டர்காடு அரசு உதவி பெறும் சுந்தரேசவிலாஸ் தொடக்கப்பள்ளியில் சிரியா மற்றும் துருக்கி நாடுகளில் நிலநடுக்கத்தால் உயிரிழந்த பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

  நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

  மேலும், நிலநடுக்கத்தால் காயமடைந்து மருத்துவம னையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் குணமடைய வேண்டி பிரார்த்தனை நடைபெற்றது.

  இதில் பள்ளி ஆசிரியர் வசந்தா, ஓய்வு பெற்ற ஆசிரியர் சித்திரவேல் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

  • புனித அந்தோணியார் சொரூபங்களை தாங்கிய தேரும் இறுதியாக வியாகுல அன்னை தேரும் பவனியாக சென்றது.
  • மக்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஜெபித்து கொண்டும், பாடிக்கொண்டும் வந்தனர்.

  தஞ்சாவூர்:

  தஞ்சை பூக்காரத் தெருவில் அமைந்துள்ள புனித வியாகுல அன்னை ஆலயத்தில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் ஆண்டு திருவிழா நடைபெறுவது வழக்கம்.

  அதன்படி இந்த ஆண்டு கடந்த 15-ந் தேதி வியாகுல அன்னையின் திருக்கொடி ஏற்றி வைக்கப்பட்டு நவநாள் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது.

  விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வியாகுல அன்னையின் தேர்பவனி நேற்றிரவு நடைபெற்றது. முன்னதாக குடந்தை மறை மாவட்டத்தை சேர்ந்த அந்துவான் அடிகளார் தலைமையில் கூட்டுப் பாடல் திருப்பலி நடைபெற்றது. இதில் பேராலய பங்குத்தந்தை பிரபாகர் அடிகளார், உதவி பங்கு தந்தை பிரவீன் அடிகளார் உள்பட குருக்கள் பலர் கலந்து கொண்டனர்.

  இதையடுத்து தேர் பவனி நடைபெற்றது. முதலில் மிக்கேல் சம்மனசு தேரும், அதனைத் தொடர்ந்து புனித சவேரியார், புனித சூசையப்பர், புனித அந்தோணியார் சுரூபங்களை தாங்கிய தேரும் இறுதியாக வியாகுல அன்னை தேரும் பவனியாக சென்றது. இதில் ஏராளமான இறை மக்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஜெபித்துக் கொண்டும், பாடிக்கொண்டும் வந்தனர். முடிவில் பேராலய மக்கள் மன்றத்தில் அன்பு விருந்து வழங்கப்பட்டது.

  வியாகுல அன்னை திருவிழாவின் நிறைவு நாளான இன்று வியாகுல அன்னை ஆலயத்தில் குடந்தை ஆயர் அந்தோணிசாமி தலைமையில் கூட்டுப் பாடல் திருப்பலி நடைபெற்றது. இதில் மறை மாவட்ட வேந்தர் ஜான் சக்கரியாஸ் கலந்து கொண்டார். முடிவில் பேராலய பங்குத்தந்தை பிரபாகர் அன்னையின் திருக்கொடியை இறக்கி வைத்தார்.

  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பங்கு பேரவை துணைத் தலைவர் வின்சண்ட், செயலர் குழந்தைராஜ், அன்பிய பொறுப்பாளர்கள், இளைஞர் மன்றத்தினர், பக்த சபைகள் செய்திருந்தனர்.

  ×