குத்துவிளக்கில் விழுந்து பெண் பலி

குத்துவிளக்கில் விழுந்து பெண் பலியானார். செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குத்துவிளக்கில் விழுந்து பெண் பலி
Published on

மதுரை

மதுரை செல்லூர் சத்தியமூர்த்தி 6-வது தெருவை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி ஹேமலதா (வயது42). சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவருக்கு வலிப்பு நோய் வந்தது.

அப்போது அங்கிருந்த குத்துவிளக்கின் மீது பிரேமலதா தவறி விழுந்தார். இதில் காயமடைந்த அவர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com