search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Candles"

    • கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி பக்தர்கள் வழிபட்டனர்.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அனைவரும் நலம் பெற வேண்டி வழிபாடு நடத்தினர்.

    பூதலூர்:

    தமிழ்நாட்டில் புகழ் பெற்ற கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒன்று பூண்டி மாதா பேராலயம்.

    பேராலயத்தில் பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறவும் நாட்டு மக்கள் நலம் பெறவும் நாடு வளம் பெறவும் வேண்டி புதுமை இரவு குணமளிக்கும் நற்செய்தி நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியை அரசடி பட்டி பங்குத்தந்தை அமல வில்லியம் ஒருங்கிணைத்து நிறைவேற்றினார்.

    பேராலயத்தில் நடைபெற்ற திருப்பலிக்கு பின்னர் பூண்டி மாதா சுருபவம் வைக்கப்பட்ட சிறிய தேர் பவனி நடைபெற்றது. அப்போது கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி பக்தர்கள் வழிபட்டனர்.

    அதன் பின்னர் குணமளிக்கும் இரவு ஜெப வழிபாடு நடைபெற்றது.

    ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அனைவரும் நலம் பெற வேண்டி வழிபாடு நடத்தினர்.

    • ஆண்டு திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • ஏராளமான கிறிஸ்தவர்கள் கையில் எரியும் மெழுகுவர்த்தியுடன் கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பூக்காரத்தெருவில் உள்ள புனித வியாகுல அன்னை ஆலயம் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்தவை. மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழும் இந்த ஆலயத்திற்கு ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை திருமணம் ஆகாத பெண்கள், கர்ப்பிணி பெண்கள் வந்து குத்துவிளக்கிற்கு எண்ணெய் ஊற்றி சென்றால் கேட்டவரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வழிபட்டு செல்கின்றனர்.

    இந்த ஆலயத்தின் ஆண்டு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் இறுதிவாரத்தில் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான ஆண்டு திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் நவநாள் வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான வியாகுல அன்னை தேர்பவனி நேற்றுஇரவு நடைபெற்றது. முன்னதாக திருவிழா கூட்டுப்பாடல் திருப்பலி மறைமாவட்ட பரிபாலகர் சகாயராஜ் அடிகளார் தலைமையில் நடந்தது. இதில் பேராலய பங்குதந்தை பிரபாகர், உதவி பங்குதந்தை பிரவீன் மற்றும் குருக்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து தேர்கள் புனிதம் செய்யப்பட்டு தேர்பவனி நடைபெற்றது. முதலாவதாக மைக்கேல் சம்மனசு தேரும், தொடர்ந்து புனிதசவேரியார், புனிதசூசையப்பர், புனிதஅந்தோணியார் சொரூபங்களை தாங்கிய தேரும், இறுதியாக வியாகுல அன்னை தேரும் பவனியாக வந்தன. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கையில் எரியும் மெழுகுவர்த்தியுடன் கலந்து கொண்டனர்.விழாவிற்கான ஏற்பா டுகளை உதவி பங்குதந்தை பிரவீன் அடிகளார் தலைமையில் பங்கு பேரவை துணைத் தலைவர் வின்சென்ட், செயலாளர் குழந்தைராஜ், பக்த சபைகள், அன்பிய பொறுப்பாளர்கள் செய்து இருந்தனர்.

    • தேர்பவனி விழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • அலங்கரிக்கப்பட்ட தேரின் மீது மலர்தூவி மெழுகுவர்த்தி ஏற்றி வேண்டுதலை நிறைவேற்றினர்.

    சுவாமிமலை:

    கும்பகோணத்தில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் தேர்பவனி விழா கடந்த 4-ந் தேதி மறைமாவட்ட முதன்மை குரு இருதய ஆண்டவர் மருத்துவமனை இயக்குனர் தேவதாஸ் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அதனை தொடர்ந்து, தினமும் அருட்தந்தையர்களால் செபமாலை, நவநாள் செபம், கூட்டு திருப்பலி ஆகியவை நடைபெற்றன.

    முன்னதாக ஆயர் அந்தோ ணிசாமி தலைமையில் காலை திருப்பலி மற்றும் மறையுரை அருள் செபஸ்தியார் மற்றும் மாலை ஜெபமாலை நவநாள் திருப்பலி மற்றும் மறையுரை பங்கு தந்தைகள் நடத்தினர்.

    அதனைத்தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித அந்தோணியார், எழுந்தருள ஆயர் அந்தோணிசாமி வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து, வாணவேடிக்கையுடன் தேர்பவனி சிறப்பாக நடைபெற்றது.

    தேர் பவனியின் போது, ஒவ்வொரு கிறிஸ்துவ குடும்பத்தினர் உப்பு, மிளகு ஆகியவற்றை அலங்கரிக்கப்பட்ட தேரின் மீது தூவி மெழுகுவர்த்தி ஏற்றி வேண்டுதலை நிறை வேற்றினர்.

    நிகழ்வில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.

    ×