search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மயிலாடுதுறை புனித அந்தோணியார் ஆலயத்தில் தேர்பவனி
    X

    புனித அந்தோணியார் ஆலயத்தில் தேர்பவனி நடைபெற்றது.

    மயிலாடுதுறை புனித அந்தோணியார் ஆலயத்தில் தேர்பவனி

    • சமத்துவம், சகோதரத்துவம், மனிதநேயம் நிலைத்திட சிறப்பு பிரார்த்தனை.
    • மத நல்லிணக்கத்தோடு புனித அந்தோணியார் திருத்தல ஆண்டு திருவிழா கொண்டாடப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற புனித பதுவை மற்றும் வனத்து அந்தோணியார் திருத்தல ஆண்டு திருவிழா கடந்த 7-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து பத்து நாட்கள் மன்றாட்டு மாலை, நவநாள் ஜெபம், திருப்பலி உள்ளிட்ட பல்வேறு வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.

    விழாவின் முக்கிய நிகழ்வான திருவிழா திருப்பலி மற்றும் திருத்தேர் பவனி நடைபெற்றது.

    புனித அந்தோணியார் திருத்தல பங்குத்தந்தை ஜான்பிரிட்டோ அடிகளார் தலைமையில், மயிலாடுதுறை மறைவட்டஅதிபர் பங்குத்தந்தை தார்சிஸ் ராஜ் அடிகளார், குத்தாலம் பங்குத்தந்தை ஜெர்லின் கார்ட்டர் அடிகளார், மணவா ளநல்லூர் பங்குத்தந்தை ஜான் அமலதாஸ் அடிகளார், பில்லாவடந்தை பங்குத்தந்தை சாலமோன் அடிகளார், மணல்மேடு பங்குத்தந்தை ஆனந்தராஜ் அடிகளார், மயிலாடுதுறை உதவி பங்குத்தந்தை மைக்கில் டைசன் அடிகளார் ஆகியோர் இணைந்து திருப்பலியை நிறைவேற்றினர்.

    எங்கேயும் பார்க்க முடியாத தன் மதிப்பை சிலுவை எனும் முகக்கண்ணாடிக்கு முன்பு தான் ஒரு மனிதனால் பார்க்க முடியும் என்ற இறைவார்த்தையை மையப்படுத்தி நாகை மறைவட்ட அதிபர் பன்னீர்செல்வம் அடிகளார் திருவிழா மறையுரை யாற்றினார்.

    இந்த சிறப்பு திருப்பலியில் உலக அமைதிக்காகவும், மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா நோய் தொற்று முற்றிலும் ஒழிய வேண்டியும், சமத்துவம், சகோதரத்துவம், மனிதநேயம் நிலைத்திடவும் சிறப்பு பிரார்த்தனை வழிபாடுகள் நடைபெற்றது.

    கிறிஸ்தவர்கள் மட்டு மின்றி பிற சமயத்தவரும் இணைந்து நல்லிணக்கத்தோடு கொண்டாடும் புனித அந்தோணியார் திருத்தல ஆண்டு திருவிழா திருத்தேர்ப வனி நடைபெற்றது.

    வான வேடிக்கை, இன்னிசை முழங்க புனித மைக்கேல் சம்மனசு, புனித ஆரோக்கியநாதர், புனித செபஸ்தியார், புனித ஆரோக்கியமாதா, புனித பதுவை மற்றும் வனத்து அந்தோணியார்களின் திருஉருவம் தாங்கிய ஐந்து தேர்கள் பவனியாக ஆலய வளாகத்தில் தொடங்கி, கொண்டாரெட்டித்தெரு, அழகப்ப செட்டித்தெரு உள்ளிட்ட வீதிகள் வழியாக மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.

    திருப்பலி மற்றும் தேர்பவனி நிகழ்வுகளில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அன்பிய குழுவினர், பங்கு மக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் திருப்பலி, தேர்பவனி உள்ளிட்ட நிகழ்வுகளையடுத்து, திருவிழா நிறைவுத் திருப்பலி நடைபெற்றது.

    புனித அந்தோணியார் திருத்தல பங்குத்தந்தை ஜான்பிரிட்டோ அடிகளார் சிறப்பு மறையுரையாற்றினார். திருப்பலியைத் தொடர்ந்து கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெற்றது.

    விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பங்குத்தந்தை தலைமையில் விழாக்குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

    Next Story
    ×