search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திடீர் சாவு"

    • பாலத்தின் கீழ் ஒரு நபர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவினாசி :

    அவினாசி கால்நடை மருத்துவமனை அருகே பாலத்தின் கீழ் ஒரு நபர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் அவரது உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் அவினாசி செங்காடு பகுதியை சேர்ந்த தொழிலாளி அங்கப்பன் (வயது 50) என்பதும் குடிப்பழக்கம் உள்ள அவர் போதையில் பாலத்தின் கீழ் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேவாலயம் முன்பு பிணமாக கிடந்தார்
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    வாலாஜா அடுத்த தென்னிந்தியாலம் பகுதியைச் சேர்ந்தவர் மணி (வயது 69). கூலி தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு தென்னிந்தியாலம் பகுதியில் உள்ள சர்ச் முன் மணி தூங்கி யுள்ளார்.

    நேற்று காலை அங்கிருந்தவர்கள் மணியை எழுப்பியுள்ளனர். ஆனால் அவர் எழுந்திருக்கவில்லை. அப்போது அவர் இறந்திருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து ரத்தினகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காலை வெகு நேரமாகியும் பன்ச்சம் ஓரன் எழுந்திருக்கவில்லை.
    • மனைவி கங்கிடோபோ கணவரை எழுப்ப முயன்ற போது அவர் அசைவற்று கிடந்தார்.

    ஈரோடு:

    ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சி மாவட்டம், டெங்கரியா பகுதியை சேர்ந்தவர் பன்ச்சம் ஓரன் (28). இவரது மனைவி கங்கிடோபோ (29). இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

    பன்ச்சம் ஓரன் கடந்த 2 ஆண்டுகளாக ஈரோடு, நசியனூர் ரோடு, நல்லி தோட்டம் பகுதியில் குடும்பத்துடன் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று இரவு அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்கினர். பின்னர் காலை வெகு நேரமாகியும் பன்ச்சம் ஓரன் எழுந்திருக்கவில்லை.

    இதையடுத்து மனைவி கங்கிடோபோ கணவரை எழுப்ப முயன்ற போது அவர் அசைவற்று கிடந்தார்.

    உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பன்ச்சம் ஓரனை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் பன்ச்சம் ஓரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மாரியம்மன் ஆலயத்தில் கட்டிட வேலை செய்து கொண்டிருக்கும் போது திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார்.
    • அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளார்.

    பாப்பாரப்பட்டி,

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த திருவாதிகை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவப்பிரகாசம் (வயது 40). இவர் ஆலய திருப்பணிக்காக கடலூரில் இருந்து வந்து பழைய பாப்பாரப்பட்டி பகுதியிலேயே தங்கி வேலை செய்து வருகிறார்.

    வழக்கம் போல் இன்று காலை மாரியம்மன் ஆலயத்தில் கட்டிட வேலை செய்து கொண்டிருக்கும் போது திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். உடனே அவரை அங்கிருந்து தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளார். இது குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சுரேசுக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.
    • சுரேசை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    கோவை,

    கோவை பாப்ப நாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 39). கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

    சம்பவத்தன்று சுரேசுக்கு பிறந்த நாள். இதனையடுத்து அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் பெரிய புத்தூரில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்றார். பின்னர் குடும்பத்துடன் காரமடை ரங்க நாதர் கோவிலுக்கு சென்றார்.இதனை தொடர்ந்து அனைவரும் காரமடையில் மதிய சாப்பாடு சாப்பிட முடிவு செய்தனர். அதன்படி அனைவரும் அங்கு சென்று ஒரு ஓட்டல் அருகே நின்று கொண்டு இருந்தனர்.

    அப்போது திடீரென சுரேஷ் மயங்கி கீழே விழுந்தார். இதனை பார்த்து அவரது மனைவி அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர் தனது கணவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு சுரேசை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதனை கேட்டு அதிர்ச்சி யடைந்த அவரது மனைவி தனது கணவரின் உடலை கட்டிபிடித்து கதறி அழுதார். இது குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பிறந்த நாளன்று குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய தொழிலாளி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • நெஞ்சு வலிக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
    • பரிசோதித்த டாக்டர், கணேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார்

    குன்னத்தூர் :

    குன்னத்தூர் அருகே வெள்ளரவெளி கிழக்கு வீதி, ராசு காம்பவுண்டு பகுதியை சேர்ந்தவர் கணேசன் ( வயது 56),தொழிலாளி.

    இவர் பல நாட்களாக நெஞ்சுவலியால் அவதிப்பட்டு வந்தார். நெஞ்சு வலிக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    இந்தநிலையில் வீட்டு வாசலில் இறந்து கிடந்துள்ளார். இதைப் பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர், கணேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார். இது குறித்து குன்னத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் கிருஷ்ண–மூர்த்தி (வயது 57). உடல் நலக் குறைவால் சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
    • இந்த நிலையில் நேற்று இரவு அவர் திடீரென உயிரிழந்தார்.

    சேலம்:

    சேலம் அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் கிருஷ்ண–மூர்த்தி (வயது 57).

    இவர் உடல் நலக் குறைவால் சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு அவர் திடீரென உயிரிழந்தார்.

    இதேபோல், சேலம் மாநகர சிறுவர் காப்பக உதவி மையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றியவர் முரளிதுரை (வயது 55). இவர் உடல் நலக் குறைவால் சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவரும் நேற்றிரவு பரிதாபமாக இறந்தார். இவர்களது உடலுக்கு மாநகர போலீஸ் கமிஷனர் இன்று அஞ்சலி செலுத்துகிறார்.

    • திருச்செங்கோடு மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
    • கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

    கோவை,

    சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள வேப்பங்காட்டை சேர்ந்தவர் பழனிசாமி (வயது70). இவர் போக்சோ வழக்கில் திருச்செங்கோடு மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 9-ந் தேதி இவருக்கு திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டது. உடனடியாக சிறை அதிகாரிகள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கைதிகள் வார்டில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு பழனிசாமிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக இறந்தார். இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சத்தியமங்கலம் பவானி ஆற்றங்கறையில் இருந்தபோது பாண்டுரங்கன் திடீரென மயங்கி விழுந்தார்.
    • அவரை சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கோட்டுவீராம்பாளையம் முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டுரங்கன் (61). இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் உள்ளார்.

    பாண்டுரங்கன் சத்தியமங்கலம் அடுத்த ரங்கசமுத்திரம் பகுதியில் ஒரு டீக்கடையில் போண்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கடந்த 13 வருடமாக பாண்டுரங்கன் தனியாக வசித்து வருகிறார்.

    இந்நிலையில் கடந்த 4 மாதமாக அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். சம்பவத்தன்று இரவு சத்தியமங்கலம் பவானி ஆற்றங்கறையில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார்.

    உடனே அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அவரை சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பாண்டுரங்கன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.

    • கருச்சிதைவு ஏற்பட்டு மயங்கி விழுந்து பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே அனந்தபுரம் ஊராட்சி மேல்வசந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவரது மனைவி ஜான்சிராணி (வயது 30). இவர்களுக்கு யாஷிகா (4) என்ற மகள் உள்ளார்.

    ஜான்சிராணி சென்னை அம்பத்தூரில் உள்ள மகளிர் போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார்.

    சில தினங்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தபோது கருச்சிதைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

    பின்னர் அவர் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ் பெக்டர் மகாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் தரணி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சபஹரிசன் ராமநாதபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்
    • சக்தி சபஹரிசன் தலைவலிப்பதாக கூறி மாத்திரை சாப்பிட்டார்.

    பொள்ளாச்சி,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி நல்லூர் அருகே உள்ள புதுக்காலனியை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மகன் சக்தி சபஹரிசன் (வயது 15). இவர் ராமநாதபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த சக்தி சபஹரிசன் தலைவலிப்பதாக கூறி மாத்திரை சாப்பிட்டார். இரவு திடீரென வாந்தி எடுத்து மயங்கினார். இதனை பார்த்த அவரது பெற்றோர் உடனடியாக சபஹரிசனை அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது. எனவே பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு கூறினர். இதனையடுத்து அவரை அவரது பெற்றோர் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சபஹரிசனை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு 10-ம் வகுப்பு மாணவர் திடீர் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • திருமணமான 10 மாதத்தில் புதுப்பெண் திடீரென இறந்தார்.
    • இதுகுறித்து தேவகோட்கோடை ட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள ஊர்குளத்தான்பட்டியை சேர்ந்தவர் கந்தசாமி. இவருக்கும் சினேகா (வயது 21) என்பவருக்கும் கடந்த இவருக்கும் சினேகா என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இந்தநிலையில் சினேகாவுக்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், சிகிச்சைக் காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் பரிதாபமாக இறந்த தாகவும் கூறப்படுகிறது.

    இதுகுறித்து தகவலறிந்த கண்டவராயன்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த சினேகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் திருமணமாகி 10 மாதங்களே ஆன நிலையில் சினேகா இறப்பு குறித்து சந்தேகத்தின் அடிப்படையில் நெடுமரம் கிராம நிர்வாக அலுவலர் கோகிலா தேவி கொடுத்தபுகாரின் பெயரில் தேவகோட்டை கோட்டாட்சியர் பால்துரை திருப்புத்தூர் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு குறித்த தன்மையை மருத்துவர் சிவக்குமாரிடம் விசாரணை மேற்கொண்டார்.

    விசாரணையின் போது திருப்பத்தூர் வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, திருப்புத்தூர் நகர் காவல் ஆய்வாளர் சுந்தரமகாலிங்கம், சார்பு ஆய்வாளர் மலைச்சாமி, கண்டவராயன்பட்டி சார்பு ஆய்வாளர் சேதுராஜ் ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து கண்டவராயன்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×