பொள்ளாச்சி அருகே 10-ம் வகுப்பு மாணவர் திடீர் சாவு

சபஹரிசன் ராமநாதபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்சக்தி சபஹரிசன் தலைவலிப்பதாக கூறி மாத்திரை சாப்பிட்டார்.
பொள்ளாச்சி அருகே 10-ம் வகுப்பு மாணவர் திடீர் சாவு
Published on

பொள்ளாச்சி,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நல்லூர் அருகே உள்ள புதுக்காலனியை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மகன் சக்தி சபஹரிசன் (வயது 15). இவர் ராமநாதபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

சம்பவத்தன்று வீட்டில் இருந்த சக்தி சபஹரிசன் தலைவலிப்பதாக கூறி மாத்திரை சாப்பிட்டார். இரவு திடீரென வாந்தி எடுத்து மயங்கினார். இதனை பார்த்த அவரது பெற்றோர் உடனடியாக சபஹரிசனை அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது. எனவே பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு கூறினர். இதனையடுத்து அவரை அவரது பெற்றோர் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சபஹரிசனை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு 10-ம் வகுப்பு மாணவர் திடீர் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

X

Maalai Malar
www.maalaimalar.com