என் மலர்
நீங்கள் தேடியது "died suddenly"
- நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டு மூச்சு விட முடியாத நிலை ஏற்பட்டது
- சிக்கன் மற்றும் மீன் உணவுகளை அதிக அளவு சாப்பிட்டதால் நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டு அவர் இறந்திருக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்தனர்
சின்னாளபட்டி:
திண்டுக்கல் அருகில் உள்ள கலிக்கம்பட்டியை சேர்ந்த சோலமலை மகன் வசந்தகுமார் (வயது22). கூலி வேலை பார்த்து வருகிறார். வசந்தகுமார் நேற்று விடுமுறை என்பதால் மதியம் வீட்டில் சமைத்த சிக்கன் உணவை அதிக அளவு சாப்பிட்டுள்ளார்.
பின்னர் மாலையில் பொறித்த மீன்களை சாப்பிட்டுள்ளார். அதன்பிறகு அவருக்கு நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டு மூச்சு விட முடியாத நிலை ஏற்பட்டது. இது குறித்து தனது தந்தையிடம் வசந்தகுமார் கூறி உள்ளார்.
ஜீரணத்துக்காக குளிர்பானம் குடித்த நிலையில் சிறிது தூரம் நடந்து செல்வதாக வீட்டில் கூறி சென்றார். அதன்பிறகு ஊருக்கு வெளியே மயங்கிய நிலையில் வசந்தகுமார் கிடந்துள்ளார். உடனே ஆம்புலன்சுக்கு அவரது பெற்றோர் போன் செய்து வரவழைத்தனர்.
அவரை பரிசோதித்த ஊழியர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதன் பிறகு சின்னாளபட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்துஅவரது உடலை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சிக்கன் மற்றும் மீன் உணவுகளை அதிக அளவு சாப்பிட்டதால் நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டு அவர் இறந்திருக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்தனர்
- நெஞ்சு வலிக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
- பரிசோதித்த டாக்டர், கணேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார்
குன்னத்தூர் :
குன்னத்தூர் அருகே வெள்ளரவெளி கிழக்கு வீதி, ராசு காம்பவுண்டு பகுதியை சேர்ந்தவர் கணேசன் ( வயது 56),தொழிலாளி.
இவர் பல நாட்களாக நெஞ்சுவலியால் அவதிப்பட்டு வந்தார். நெஞ்சு வலிக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்தநிலையில் வீட்டு வாசலில் இறந்து கிடந்துள்ளார். இதைப் பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர், கணேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார். இது குறித்து குன்னத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சபஹரிசன் ராமநாதபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்
- சக்தி சபஹரிசன் தலைவலிப்பதாக கூறி மாத்திரை சாப்பிட்டார்.
பொள்ளாச்சி,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி நல்லூர் அருகே உள்ள புதுக்காலனியை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மகன் சக்தி சபஹரிசன் (வயது 15). இவர் ராமநாதபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த சக்தி சபஹரிசன் தலைவலிப்பதாக கூறி மாத்திரை சாப்பிட்டார். இரவு திடீரென வாந்தி எடுத்து மயங்கினார். இதனை பார்த்த அவரது பெற்றோர் உடனடியாக சபஹரிசனை அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது. எனவே பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு கூறினர். இதனையடுத்து அவரை அவரது பெற்றோர் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சபஹரிசனை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு 10-ம் வகுப்பு மாணவர் திடீர் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தக்ஷனுக்கு கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவரின் ஆலோசனையின்பேரில் மருந்து கொடுத்து வந்தனர்.
- டாக்டர்கள் பரிசோ தித்து விட்டு ஏற்கனவே தக்ஷன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
ஈரோடு:
ஈரோடு சூளை பகுதியை சேர்ந்தவர் உமா–மகேஷ்வரன். கடந்த மாதம் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார். இவரது மனைவி ஹேமா (22). இவர்களது மகன் தக்ஷன் (5). வீட்டிற்கு அருகில் உள்ள அங்கன்வாடி பள்ளியில் படித்து வந்தான்.
தக்ஷனுக்கு கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவரின் ஆலோசனையின்பேரில் மருந்து கொடுத்து வந்தனர்.
இந்நிலையில் சம்பவ த்தன்று திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து தக்ஷனை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோ தித்து விட்டு ஏற்கனவே தக்ஷன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு போலீஸ் ஏட்டு மாதேஸ்வரனுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது.
- மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த போலீஸ் ஏட்டு மாதேஸ்வரன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
பவானி:
ஈரோடு மாவட்டம் பங்களாபுதூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தவர் மாதேஸ்வரன் (54). இவர் குடும்பத்துடன் பவானி அருகே உள்ள ஆர்.என்.புதூர் சூரியம்பாளையம் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார்.
கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு போலீஸ் ஏட்டு மாதேஸ்வரனுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. அல்சர் காரணமாக அவர் ரத்த வாந்தி எடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த போலீஸ் ஏட்டு மாதேஸ்வரன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது தொடர்பாக அவர் மனைவி சித்தோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.