ஜே.சி.பி. டிரைவர் திடீர் சாவு

கோபாலுக்கு வலிப்பு நோய் பாதிப்பு உள்ளது. அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே கோபால் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
ஜே.சி.பி. டிரைவர் திடீர் சாவு
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் மொ டக்குறிச்சியை அடுத்துள்ள எழுமாத்தூர் அய்யகவுண்ட ன்பாளையம் நெறிப்பாறை பகுதியை சேர்ந்தவர்

கோபால் (32). ஜே.சி.பி. டிரைவர். இவரது மனைவி மணிமேக லை (28). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

இந்நிலையில் கோபாலுக்கு வலிப்பு நோய் பாதிப்பு உள்ளது. காலை வழக்கம் போல வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு கோபால் சென்றார்.

சிறிது நேரத்தில் கோபாலின் உறவினர் ஒருவர் மணிமேகலைக்கு போன் செய்து கூட்டப்பள்ளி வாய்க்கால் அருகே கோபால் மூச்சு பேச்சின்றி, வாயில் நுரை தள்ளிய நிலையில் கீழே விழுந்து கிடப்பதாக கூறியுள்ளார்.

இதையடுத்து மணிமேகலை உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று உறவினர்கள் உதவியுடன் கோபாலை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே கோபால் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இது குறித்து மொடக்கு றிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com