

ஈரோடு:
ஈரோடு சூளை பகுதியை சேர்ந்தவர் உமா–மகேஷ்வரன். கடந்த மாதம் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார். இவரது மனைவி ஹேமா (22). இவர்களது மகன் தக்ஷன் (5). வீட்டிற்கு அருகில் உள்ள அங்கன்வாடி பள்ளியில் படித்து வந்தான்.
தக்ஷனுக்கு கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவரின் ஆலோசனையின்பேரில் மருந்து கொடுத்து வந்தனர்.
இந்நிலையில் சம்பவ த்தன்று திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து தக்ஷனை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோ தித்து விட்டு ஏற்கனவே தக்ஷன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.