புதுமாப்பிள்ளை திடீர் சாவு

சரவணக்குமார் கம்பெனியில் வேலை பார்த்து கொண்டு இருந்தார். வயிற்று போக்கு ஏற்பட்டு உடல்நிலை சரியில்லாமல் அவதிபட்டார்.
புதுமாப்பிள்ளை திடீர் சாவு
Published on

கோபி:

கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள பாரியூர் நஞ்ச கவுண்டன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் சரவணக்குமார் (வயது 28).

இவருக்கு கடந்த 6 மாதத்து க்கு முன்பு தான் திருமண மானது. இவருக்கு வடிவுக்கரசி (23) என்ற மனைவி உள்ளார். சரவ ணக்கு மார் கோபிசெட்டிபாளையம் அடுத்த வடுகபாளையம் பகுதியில் உள்ள ஒரு கம்பெனியில் டிரைவ ராக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் சரவணக்குமார் அந்த கம்பெனியில் வழக்கம் போல் வேலை பார்த்து கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு திடீரென வயிற்று போக்கு ஏற்பட்டு உடல்நிலை சரியில்லாமல் அவதிபட்டு கொண்டு இருந்தார்.

இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோபிசெட்டி பாளையம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்.

இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com