search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The teenager"

    • 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இன்று காலை இறந்து கிடந்தார்.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    கவுந்தப்பாடி:

    ஈரோடு மாவட்டம் கவுந்த ப்பாடி- பவானி ரோடு சுண்ணாம்பு சூலை பைபாஸ் ரோடு பகுதியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இன்று காலை இறந்து கிடந்தார்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் கவுந்தப்பாடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதை யடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    அப்போது அவரது இடது கையில் தனா என்ற பெயரும், வலது ைகயில் பாயும் புலி என்ற முத்தி ரையும் பச்சை குத்தப்பட்டு இருந்தது. பச்சை கட்டம் போட்ட சர்ட்டும், கைலியும் கட்டி இருந்தார். மேலும் அவரது கணத்தில் காயம் இருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் இறந்து கிடந்த இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலை வில் டாஸ்மாக் மதுக்கடை இருந்தது.

    இதனால் அதிக அளவில் மது குடித்து இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? இல்லை அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்பது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

    • ரூ.23 லட்சத்தை கொ ள்ளையடித்து சென்றனர்.
    • 2 பேரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

    சென்னிமலை, 

    சென்னிமலை அருகே ஈங்கூரில் தனியாருக்கு சொந்தமான இரும்பு தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் பெருந்துறையை சேர்ந்த சத்தியமூர்த்தி (வயது 47) என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த மாதம் 23-ந் தேதி இந்த தொழிற்சாலையின் கிளை நிறுவனத்தில் பண பரிவர்த்தனையை முடித்து கொண்டு ரூ.23 லட்சம் பணத்துடன் ஈங்கூரில் உள்ள தொழிற்சாலைக்கு சத்தியமூர்த்தி காரில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சத்தியமூர்த்தி சென்ற காரை வழிமறித்து சத்தியமூர்த்தியை காருடன் கடத்தி சென்று அவரிடம் இருந்த ரூ.23 லட்சத்தை கொ ள்ளையடித்து சென்றனர்.

    பின்னர் இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா, கண்ணங்குடி பகுதியை சேர்ந்த மனோகர் (29) மற்றும் நவநீதன் (27) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    இவர்கள் 2 பேரும் கொடுத்த தகவலின் பேரில் அதே ஊரை சேர்ந்த இளையராஜா (31) மற்றும் கோவை செட்டி பாளையத்தை சேர்ந்த அலெக்சா ண்டர் (32) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் கண்ணங்குடியை சேர்ந்த கார் டிரைவரான சேகர் என்கிற ராஜசேகர் (30) மற்றும் ராமதுரை (32) ஆகிய 2 பேரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ராஜசேகர் சரணடைந்தார். அவரை சென்னிமலை போலீசார் பெருந்துறை மாஜிஸ்திரேட் நீதிம ன்றனத்தில் ஆஜர்படுத்தினர்.

    பின்னர் ராஜசேகரை சென்னிமலை போலீசார் 5 நாட்கள் காவலில் எடுத்து நேற்று முதல் விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையில் கொள்ளை யடிக்கப்பட்ட பணம் குறித்து போலீசாரிடம் ராஜசேகர் உண்மையான தகவல்கள் எதுவும் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

    மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான ராமதுரை மற்றும் செல்வம், விக்கி என்கிற விக்னேஷ் ஆகிய 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். இதில் ராமதுரை என்பவர் ஏற்கனவே கைது செய்யப்ப ட்ட மனோகரனின் அண்ணன் ஆவார். இதுவரை கைது செய்ய ப்பட்ட நபர்களி டமிருந்து ரூ.4 லட்சத்து 55 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    • சாப்பிட்டு கொண்டிருந்தபோது இளங்கோவுக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது.
    • அவரை பரிசோதித்த டாக்டர் இளங்கோ ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மணல்மேடு பகுதியை சேர்ந்தவர் வேலுசாமி (60). இவரது மகன் இளங்கோ (24). இளம் வயதிலேயே மது குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையான இளங்கோவுக்கு நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு வலிப்பு நோய் பாதிப்புக் குள்ளாகி இருந்தார்.

    இதற்காக அரசு மருத்துவமனையில் இளங்கோ சிகிச்சை பெற்றும் வந்துள்ளார். ஆனாலும் முறையாக மாத்திரைகள் சாப்பிடாமல் மது குடிப்பதையும் தொடர்ந்துள்ளார்.

    இதனால் இளங்கோவுக்கு அடிக்கடி வலிப்பு நோய் ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு 9 மணியளவில் சாப்பிட்டு கொண்டிருந்தபோது இளங்கோவுக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது.

    பின்னர் சிறிது நேரத்தில் சரியாகி விட்டதாக தெரிகிறது. நேற்று அதிகாலை 2 மணியளவில் இளங்கோவுக்கு மீண்டும் வலிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து உடனடியாக அவரை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் இளங்கோ ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மேலூர் அருகே வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
    • இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? குடிபோதையில் பள்ளத்தில் தவறி விழுந்து இறந்தாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள மலம்பட்டி விலக்கில் பிள்ளையார்கோவில் உள்ளது.

    இந்த கோவிலின் பின்புறம் உள்ள பள்ளத்தில் மழைநீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில் இன்று காலை இந்த பள்ளத்தில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் தேங்கிய தண்ணீரில் மிதந்தபடி பிணமாக கிடந்தார். இதைப்பார்த்த அந்தப்பகுதியினர் உடனே மேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். டி.எஸ்.பி. ஆர்லியஸ் ெரபோனி உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சார்லஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டனர். இறந்து கிடந்தவரின் தலையில் லேசான காயம் இருந்தது. தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? குடிபோதையில் பள்ளத்தில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோபியில் இருந்து ஒரு கார் வந்து கொண்டு இருந்தது. அந்த கார்போலீசார் சோதனை செய்து கொண்டு இருந்த இடத்தில் வந்து நின்றது.
    • இதையடுத்து போலீசார் மது போதையில் காரை ஓட்டியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் தவிட்டுப்பாளை யம் மார்க்கெட் அருகே போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது கோபியில் இருந்து ஒரு கார் வந்து கொண்டு இருந்தது. அந்த கார்போலீசார் சோதனை செய்து கொண்டு இருந்த இடத்தில் வந்து நின்றது.

    காருக்குள் 2 பேர் இருந்தனர். அதில் ஒரு வாலிபர் கார் கண்ணாடியை இறக்கி போலீசாரை முறைத்து பார்த்தார். அதன்பின் அந்த காரை அவர் ஓட்டி சென்றார். இதனால் சந்தேகம் அடைந்த போக்குவரத்துக் போலீசார் இருசக்கர வாகனத்தில் காரை விரட்டினர்.

    அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் எதிரே சென்ற காரை போக்குவரத்து போலீசார் மடக்கி படித்தனர். காரை ஓட்டி வந்த வாலிபர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் தடுமாறியபடி காரை விட்டு கீழே இறங்கினார்.

    அப்போது போக்கு வரத்து சப்-இனஸ்பெக்டர் விஜயகுமார் அவரிடம் விசாரித்தார். அப்போது அவர் விசாரணைக்கு ஒத்து ழைக்க மறுத்து ரகளையில் ஈடுபட்டார்.

    தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் காரை ஓடடி வந்தது கோபியை சேர்ந்த அருண் (21) என்பதும், மது போதையில் காரை ஓட்டி வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் மது போதையில் காரை ஓட்டியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

    மேலும் அந்த வாலிபரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டு கார் பறிமுதல் செய்யப்பட்டு அந்தியூர் போலீஸ் நிலையத்தில் கொண்டு வரப்பட்டது.

    இதனால் அந்த பகுதியில் பரபரப்பான நிலை ஏற்பட்டது.

    ×