முகத்தில் காயத்துடன் இறந்து கிடந்த வாலிபர்

40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இன்று காலை இறந்து கிடந்தார்.போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
முகத்தில் காயத்துடன் இறந்து கிடந்த வாலிபர்
Published on

கவுந்தப்பாடி:

ஈரோடு மாவட்டம் கவுந்த ப்பாடி- பவானி ரோடு சுண்ணாம்பு சூலை பைபாஸ் ரோடு பகுதியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இன்று காலை இறந்து கிடந்தார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் கவுந்தப்பாடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதை யடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அப்போது அவரது இடது கையில் தனா என்ற பெயரும், வலது ைகயில் பாயும் புலி என்ற முத்தி ரையும் பச்சை குத்தப்பட்டு இருந்தது. பச்சை கட்டம் போட்ட சர்ட்டும், கைலியும் கட்டி இருந்தார். மேலும் அவரது கணத்தில் காயம் இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் இறந்து கிடந்த இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலை வில் டாஸ்மாக் மதுக்கடை இருந்தது.

இதனால் அதிக அளவில் மது குடித்து இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? இல்லை அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்பது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com