வாலிபர் மர்மச்சாவு

மேலூர் அருகே வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? குடிபோதையில் பள்ளத்தில் தவறி விழுந்து இறந்தாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிணமாக கிடந்த வாலிபர் உடலை மீட்ட போது எடுத்த படம்.
பிணமாக கிடந்த வாலிபர் உடலை மீட்ட போது எடுத்த படம்.
Published on

மேலூர்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள மலம்பட்டி விலக்கில் பிள்ளையார்கோவில் உள்ளது.

இந்த கோவிலின் பின்புறம் உள்ள பள்ளத்தில் மழைநீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில் இன்று காலை இந்த பள்ளத்தில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் தேங்கிய தண்ணீரில் மிதந்தபடி பிணமாக கிடந்தார். இதைப்பார்த்த அந்தப்பகுதியினர் உடனே மேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். டி.எஸ்.பி. ஆர்லியஸ் ெரபோனி உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சார்லஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டனர். இறந்து கிடந்தவரின் தலையில் லேசான காயம் இருந்தது. தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? குடிபோதையில் பள்ளத்தில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com