search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோர்ட்டில் சரணடைந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை
    X

    கோர்ட்டில் சரணடைந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை

    • ரூ.23 லட்சத்தை கொ ள்ளையடித்து சென்றனர்.
    • 2 பேரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

    சென்னிமலை,

    சென்னிமலை அருகே ஈங்கூரில் தனியாருக்கு சொந்தமான இரும்பு தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் பெருந்துறையை சேர்ந்த சத்தியமூர்த்தி (வயது 47) என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த மாதம் 23-ந் தேதி இந்த தொழிற்சாலையின் கிளை நிறுவனத்தில் பண பரிவர்த்தனையை முடித்து கொண்டு ரூ.23 லட்சம் பணத்துடன் ஈங்கூரில் உள்ள தொழிற்சாலைக்கு சத்தியமூர்த்தி காரில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சத்தியமூர்த்தி சென்ற காரை வழிமறித்து சத்தியமூர்த்தியை காருடன் கடத்தி சென்று அவரிடம் இருந்த ரூ.23 லட்சத்தை கொ ள்ளையடித்து சென்றனர்.

    பின்னர் இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா, கண்ணங்குடி பகுதியை சேர்ந்த மனோகர் (29) மற்றும் நவநீதன் (27) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    இவர்கள் 2 பேரும் கொடுத்த தகவலின் பேரில் அதே ஊரை சேர்ந்த இளையராஜா (31) மற்றும் கோவை செட்டி பாளையத்தை சேர்ந்த அலெக்சா ண்டர் (32) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் கண்ணங்குடியை சேர்ந்த கார் டிரைவரான சேகர் என்கிற ராஜசேகர் (30) மற்றும் ராமதுரை (32) ஆகிய 2 பேரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ராஜசேகர் சரணடைந்தார். அவரை சென்னிமலை போலீசார் பெருந்துறை மாஜிஸ்திரேட் நீதிம ன்றனத்தில் ஆஜர்படுத்தினர்.

    பின்னர் ராஜசேகரை சென்னிமலை போலீசார் 5 நாட்கள் காவலில் எடுத்து நேற்று முதல் விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையில் கொள்ளை யடிக்கப்பட்ட பணம் குறித்து போலீசாரிடம் ராஜசேகர் உண்மையான தகவல்கள் எதுவும் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

    மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான ராமதுரை மற்றும் செல்வம், விக்கி என்கிற விக்னேஷ் ஆகிய 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். இதில் ராமதுரை என்பவர் ஏற்கனவே கைது செய்யப்ப ட்ட மனோகரனின் அண்ணன் ஆவார். இதுவரை கைது செய்ய ப்பட்ட நபர்களி டமிருந்து ரூ.4 லட்சத்து 55 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    Next Story
    ×