search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வட மாநில"

    • ஜீப் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டு அந்த வாலிபர் சர்வீஸ் ரோட்டிற்கு வந்து இறந்தது தெரிய வந்தது.
    • விபத்தை ஏற்படுத்திய ஜீப் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பவானி:

    பவானி அருகே உள்ள சித்தோடு சேலம்-கோவை பைபாஸ் ரோடு, நொச்சிப்பாளையம் பிரிவு சர்வீஸ் ரோட்டில் உடலில் பல்வேறு இடங்களில் ரத்த காயங்களுடன் ஒருவர் இறந்து கிடப்பதாக சித்தோடு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

    இதனையடுத்து போலீசார் சம்பவயி டத்திற்கு வந்து பார்த்த போது இறந்து கிடந்தது சுமார் 30 முதல் 35 வயது மதிக்கத்தக்க வட மாநில நபர் என்பதும், அவர் யார்? எந்த ஊரை சேர்ந்த வர் என தெரியவில்லை.

    அதேபோல் அருகிலுள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்ததில் அதிகா லை 5 மணியளவில் பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்த ஜீப் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டு அந்த வாலிபர் சர்வீஸ் ரோட்டிற்கு வந்து இறந்தது தெரிய வந்தது.

    இதனைத்தொடர்ந்து போலீசார் இறந்த வட மாநில வாலிபர் உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்தை ஏற்படுத்திய ஜீப் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • குமாரபாளையம் போலீசார், இங்குள்ள சில தனியார் தொழிற்சாலை களில் பணியாற்றி வரும் வட மாநில தொழிலாளர்களுடன் ஹோலி திருவிழா கொண்டாடி, அனைவருக்கும் இனிப்பு கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
    • மேலும் அச்சத்தை போக்கும் வகையில் அறிவுரையும் கூறினார்கள்.

    குமாரபாளையம்:

    தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக ஏற்பட்ட வதந்தியால் பலர் அவர்களது மாநிலத்துக்கு திரும்பி செல்கின்றனர். இதையடுத்து வடமாநில தொழிலாளர்களை பாதுகாக்க அரசு நடவ டிக்கை எடுத்து வருகிறது.

    இதன் ஒரு கட்டமாக குமாரபாளையம் போலீசார், இங்குள்ள சில தனியார் தொழிற்சாலை களில் பணியாற்றி வரும் வட மாநில தொழி லாளர்களுடன் ஹோலி திருவிழா கொண்டாடி, அனைவருக்கும் இனிப்பு கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

    மேலும் அச்சத்தை போக்கும் வகையில் அறிவுரையும் கூறினார்கள். போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, சப் இன்ஸ்பெக்டர் சந்தியா உள்பட போலீசார் பலர் பங்கேற்றனர்.

    • சவர தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இதைதொடர்ந்து இன்று சலூன் கடை தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பல சலூன் கடைகள் இயங்கி வருகிறது. இந்த பகுதிகளில் இயங்கி வரும் ஒரு சில சலூன் கடைகளில் வட மாநில தொழிலாளர்களை வைத்து அவர்கள் மூலம் முடி திருத்தும் பணி செய்யப்பட்டு வருகிறது.

    மேலும் அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் புதிதாக உருவாகும் சலூன் கடைகள் மற்றும் அழகு நிலையங்களிலும் வட மாநில தொழிலாளர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவ தாகவும் அந்த பகுதி சவர தொழிலாளர்கள் புகார் கூறி வருகிறார்கள்.

    இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தும் வருகிறார்கள்

    இந்நிலையில் வட மாநில தொழிலாளர்களை அந்தியூர் பகுதியில் சவர தொழில் செய்ய அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்றக் கழகம் (சவர த்தொழிளார்களின் சங்கம்) சார்பில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறது.

    இதையொட்டி அந்தியூ ர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சலூன் கடைகள் வைத்திருப்பவர்கள் மற்றும் அங்கு வேலை செய்பவர்கள் கடந்த 4 நாட்களாக கடை யடைப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இதனால் அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 36-க்கும் மேற்பட்ட சலூன் கடைகள் மூடப்பட்டு அவர்கள் எதிர்ப்பை தெரி வித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று மதியம் வட மாநில தொழி லாளர்கள் அந்தியூர் பகுதி யில் கடைகளை திறந்து வேலை செய்ததாக கூறப்படுகிறது. இது பற்றி தகவல் அறிந்ததும் அந்த பகுதி சலூன் கடைகாரர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரி வித்தனர்.

    இதையடுத்து சவர தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் அந்தியூர் பஸ் நிலையம் ரவுண்டானா பகுதியில் திரண்டனர். தொடர்ந்து அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்தியூர்- அத்தாணி, பர்கூர், பவானி ரோட்டில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து மாலை பவானி ரோட்டில் இயங்கி வரும் அழகு நிலையம் கடையை திறந்து வைத்திருந்ததை கண்டித்தும் அங்கேயும் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். பின்னர் போலீசாரின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு கடைகள் அடைக்கப்பட்டது.

    இதைதொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) 5-வது நாளாக சலூன் கடை தொழி லாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடு பட்டனர். இதனால் அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அனைத்து சலூன் கடை களும் அடைக்கப்பட்டு இரு ந்தன. 

    • காலை வெகு நேரமாகியும் பன்ச்சம் ஓரன் எழுந்திருக்கவில்லை.
    • மனைவி கங்கிடோபோ கணவரை எழுப்ப முயன்ற போது அவர் அசைவற்று கிடந்தார்.

    ஈரோடு:

    ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சி மாவட்டம், டெங்கரியா பகுதியை சேர்ந்தவர் பன்ச்சம் ஓரன் (28). இவரது மனைவி கங்கிடோபோ (29). இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

    பன்ச்சம் ஓரன் கடந்த 2 ஆண்டுகளாக ஈரோடு, நசியனூர் ரோடு, நல்லி தோட்டம் பகுதியில் குடும்பத்துடன் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று இரவு அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்கினர். பின்னர் காலை வெகு நேரமாகியும் பன்ச்சம் ஓரன் எழுந்திருக்கவில்லை.

    இதையடுத்து மனைவி கங்கிடோபோ கணவரை எழுப்ப முயன்ற போது அவர் அசைவற்று கிடந்தார்.

    உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பன்ச்சம் ஓரனை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் பன்ச்சம் ஓரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வீட்டில் அவரது மூத்த மகள் ரஷ்னாராகாதுன் மட்டும் இருந்துள்ளார்.
    • வீட்டிற்குள் சென்று பார்த்தபோது துப்பட்டாவால் தனது மகள் தூக்குபோட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பெருந்துறை:

    மேற்கு வங்க மாநிலம் 24 பர்கானா மாவட்டம், ராமேஸ்வர்பூர் பகுதியை சேர்ந்தவர் ரபியுல்ஷாஜி. இவர் தனது மனைவி தஸ்நாமா, மகள்கள் ரஷ்னாராகாதுன் (வயது 20), ரிஹானாகாதூன், ரூமானாகாதூன் ஆகியோருடன் பெருந்து றையை அடுத்துள்ள பணிக்கம்பாளையம் பகுதியில் குடியிருந்து வருகிறார்.

    ரபியுல்ஷாஜி பெருந்துறை பகுதியில் கட்டிட வேலை செய்து வருகிறார். மனைவி தஸ்நாமா, மூத்த மகள் ரஷ்னாராகாதுன் 2 பேரும் பெருந்துறை பகுதியில் உள்ள ஒரு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வந்தனர்.

    இந்நிலையில் ரஷ்னாராகாதுன் 2 வருடங்களுக்கு முன்பு கொல்கத்தாவை சேர்ந்த ராகேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து அவருடன் தங்கி இருந்தார். இதனையடுத்து கொஞ்சம் நாளிலேயே அவரிடமிருந்து விவாகரத்து பெற்று தனது தந்தையுடன் குடியிருந்து வந்தார்.

    இதனையடுத்து ரபியுல்ஷாஜியின் 2 மகள்கள் மற்றும் மனைவி மேற்கு வங்க மாநிலத்திற்கு சென்று இருந்தனர். வீட்டில் அவரது மூத்த மகள் ரஷ்னாராகாதுன் மட்டும் இருந்துள்ளார். ரபியுல்ஷாஜி கட்டிட வேலைக்கு சென்ற விட்டு மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உள்பக்கமாக தாழ்போட்டு இருந்தது.

    தட்டி பார்த்து கதவு திறக்காததால் கம்பியை வைத்து ெநம்பி வீட்டிற்குள் சென்று பார்த்தபோது துப்பட்டாவால் தனது மகள் தூக்குபோட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவரை கீழே இறக்கி பார்த்தபோது மூச்சு பேச்சு இல்லாமல் இருந்தார்.

    உடனே அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே ரஷ்னாராகாதுன் இறந்து விட்டதாக கூறினார்.

    இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • மாலிக் சலீம் கட்டிடத்தின் 2-வது மாடியில் கட்டுமான பணி செய்து கொண்டிரு ந்தபோது எதிர்பாராத விதமாக கால் தவறி கீழே விழுந்தார்.
    • இதில் பலத்த காயம் அடைந்த மாலிக் சலீமை சக தொழிலாளர்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    ஈரோடு:

    பீகார் மாநிலத்தை சேர்ந்த அப்துல்லா மகன் மாலிக் சலீம் (24). கட்டிட தொழிலாளி. இவர் ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் வணிக வளாக கட்டிடப் பணியில் ஒப்பந்த முறையில் தொழிலாளராக பணியாற்றி வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்த ன்று வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்த மாலிக் சலீம் கட்டிடத்தின் 2-வது மாடியில் கட்டுமான பணி செய்து கொண்டிரு ந்தபோது எதிர்பாராத விதமாக கால் தவறி கீழே விழுந்தார்.

    இதில் பலத்த காயம் அடைந்த மாலிக் சலீமை சக தொழிலாளர்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாலிக் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் பிரேத பரிசோதனை முடிந்து மாலிக்கின் உடல் பெங்களூருக்கு கொண்டு செல்லப்பட்டது.

    அங்கிருந்து விமானம் மூலம் அவர்கள் சொந்த மாநிலமான பீகாருக்கு எடுத்து செல்லப்பட்டது. இறந்து போன மாலிக் சலீமிற்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

    • கத்தியை காட்டி மிரட்டிய வாலிபரை பிடித்து விசாரித்த போது அவர் சென்னிமலை நாமக்கல்பாளையம் பகுதியை சேர்ந்த சுரேஷ் (38) என தெரியவந்தது.
    • இதனையடுத்து போலீசார் சுரேசை கைது செய்து நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    பெருந்துறை:

    ஒரிசா மாநிலம் கௌவூர் பத்ரக் பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் தாஸ் (வயது 30). இவர் தற்போது பெருந்துறையை அடுத்துள்ள பணிக்கம்பாளையம் பகுதியில் குடியிருந்து அந்த பகுதியில் உள்ள ஒரு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று காலை அஜித்குமார் தாஸ் பெருந்துறை செல்வதற்காக பணிக்கம்பாளையம் ரவுண்டனா பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் கத்தியை காட்டி, நான் யார் தெரியுமா எனது பெயர் சுரேஷ், இந்த ஊரிலேயே பெரிய ரவுடி நான்தான், ஒழுங்கா உன்கிட்ட இருக்கிற பணத்தை எடு என மிரட்டி உள்ளார்.

    பின்னர் அவரிடம் இருந்த 500 ரூபாயை பறித்து கொண்டு உடனடியாக அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடி விட்டார். உடனே அஜித்குமார்தாஸ் இது தொடர்பாக பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் மசூதாபேகம் கத்தியை காட்டி மிரட்டிய வாலிபரை பிடித்து விசாரித்த போது அவர் சென்னிமலை நாமக்கல்பாளையம் பகுதியை சேர்ந்த சுரேஷ் (38) என தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் சுரேசை கைது செய்து நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×