search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "from a laborer in the northern state"

    • கத்தியை காட்டி மிரட்டிய வாலிபரை பிடித்து விசாரித்த போது அவர் சென்னிமலை நாமக்கல்பாளையம் பகுதியை சேர்ந்த சுரேஷ் (38) என தெரியவந்தது.
    • இதனையடுத்து போலீசார் சுரேசை கைது செய்து நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    பெருந்துறை:

    ஒரிசா மாநிலம் கௌவூர் பத்ரக் பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் தாஸ் (வயது 30). இவர் தற்போது பெருந்துறையை அடுத்துள்ள பணிக்கம்பாளையம் பகுதியில் குடியிருந்து அந்த பகுதியில் உள்ள ஒரு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று காலை அஜித்குமார் தாஸ் பெருந்துறை செல்வதற்காக பணிக்கம்பாளையம் ரவுண்டனா பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் கத்தியை காட்டி, நான் யார் தெரியுமா எனது பெயர் சுரேஷ், இந்த ஊரிலேயே பெரிய ரவுடி நான்தான், ஒழுங்கா உன்கிட்ட இருக்கிற பணத்தை எடு என மிரட்டி உள்ளார்.

    பின்னர் அவரிடம் இருந்த 500 ரூபாயை பறித்து கொண்டு உடனடியாக அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடி விட்டார். உடனே அஜித்குமார்தாஸ் இது தொடர்பாக பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் மசூதாபேகம் கத்தியை காட்டி மிரட்டிய வாலிபரை பிடித்து விசாரித்த போது அவர் சென்னிமலை நாமக்கல்பாளையம் பகுதியை சேர்ந்த சுரேஷ் (38) என தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் சுரேசை கைது செய்து நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×