போக்சோ வழக்கில் கைதான முதியவர் திடீர் சாவு

திருச்செங்கோடு மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
போக்சோ வழக்கில் கைதான முதியவர் திடீர் சாவு
Published on

கோவை,

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள வேப்பங்காட்டை சேர்ந்தவர் பழனிசாமி (வயது70). இவர் போக்சோ வழக்கில் திருச்செங்கோடு மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 9-ந் தேதி இவருக்கு திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டது. உடனடியாக சிறை அதிகாரிகள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கைதிகள் வார்டில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு பழனிசாமிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக இறந்தார். இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com