போண்டா மாஸ்டர் திடீர் சாவு

சத்தியமங்கலம் பவானி ஆற்றங்கறையில் இருந்தபோது பாண்டுரங்கன் திடீரென மயங்கி விழுந்தார்.அவரை சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
போண்டா மாஸ்டர் திடீர் சாவு
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கோட்டுவீராம்பாளையம் முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டுரங்கன் (61). இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் உள்ளார்.

பாண்டுரங்கன் சத்தியமங்கலம் அடுத்த ரங்கசமுத்திரம் பகுதியில் ஒரு டீக்கடையில் போண்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கடந்த 13 வருடமாக பாண்டுரங்கன் தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 4 மாதமாக அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். சம்பவத்தன்று இரவு சத்தியமங்கலம் பவானி ஆற்றங்கறையில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார்.

உடனே அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அவரை சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பாண்டுரங்கன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com