search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செங்கோட்டை"

    • விழாவில் குழந்தைகள் கிருஷ்ணர் வேடம் அணிந்து கலந்து கொண்டனர்.
    • சிறப்பு நிகழ்ச்சியாக வழுக்கு மரம் ஏறுதல் போட்டி நடைபெற்றது.

    செங்கோட்டை:

    செங்கோட்டை முப்புடாதி அம்மன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை யொட்டி பல்வேறு விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் குழந்தைகள் கிருஷ்ணர் வேடம் அணிந்து கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து இளைஞர்க ளுக்கான உறியடி, பானை உடைத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. சிறப்பு நிகழ்ச்சியாக வழுக்கு மரம் ஏறுதல் போட்டி நடைபெற்றது. இதில் ஏராள மான இளைஞர்கள் கலந்து கொண்டு வழுக்கு மரம் ஏறினர். தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு விழா குழுவினர் சார்பில் பரிசு வழங்கப்பட்டது. 

    • விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விஷேச தீபாராதனை நடைபெற்றது.
    • விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தனர்.

    செங்கோட்டை:

    சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு செங்கோட்டை செக்கடி விநாயகர் கோவிலில் மாலையில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. மாலை விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விஷேச தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து தேங்காய் மாலையால் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்து அருள்பிரசாதம் பெற்று சென்றனர். விழா ஏற்பாடுகளை கணேச பட்டர் செய்திருந்தார். இதேபோல் செங்கோட்டை சுற்றுப்பகுதிகளான வல்லம், இலஞ்சி, பிரானூர், புளியரை, புதூர், கேசவபுரம், கட்டளை குடியிருப்பு உள்ளிட்ட கிராமங்களில் உள்ள சிவபிள்ளையார், செல்வவிநாயகர் கோவில், சந்திவிநாயகர், முக்தி விநாயகர், வீரகேரள விநாயகர் உள்ளிட்ட விநாயகர் கோவில்களிலும் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

    • ஆதித்யா எல்-1 விண்கல திட்ட இயக்குனராக நிகர் ஷாஜி இருக்கிறார்.
    • விஞ்ஞானி நிகார்ஷாஜியின் சகோதரர் சேக் சலீமுக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டது.

    செங்கோட்டை:

    ஆதித்யா எல்-1 விண்கலம் நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதன் திட்ட இயக்குனராக தென்காசி மாவட்டம் செங்கோட்டை சுலைமான் நபி பள்ளிவாசல் ஜமாத்தை சேர்ந்த நிகர் ஷாஜி இருக்கிறார். அவரை பாராட்டி, இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் சுலைமான் நபி பள்ளிவாசல் வாசலில் ஜமாத் சார்பில் பள்ளி பேஷிமாம் செய்யது சுல்தான் பைஜி சிறப்பு பிரார்த்தனை செய்தார்.

    பின்னர் விஞ்ஞானி நிகார்ஷாஜியின் சகோதரர் சேக் சலீமுக்கு ஜமாத்தின் சார்பில் ஜமாத்தலைவர் செய்யது பட்டாணி, துணைத்தலைவர் முகம்மது இஸ்மாயில் ஆகியோர் பொன்னாடை அணிவித்தனர். தொடர்ந்து குழந்தைகள், பெரியவர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் விஞ்ஞானி நிகார்ஷாஜி சகோதரர் சேக்சலீம், ஜமாத் தலைவர் செய்யதுபட்டாணி, துணைத்தலைவர் முகம்மது இஸ்மாயில் மற்றும் நிர்வாகிகள், ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர்.

    • கடந்த 2 வருடங்களாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சதுர்த்தி ஊர்வலமானது நடைபெற்று வருகிறது.
    • கொடி அணி வகுப்பில் 45 மத்திய தொழில் பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் 103 போலீசார் பங்கேற்றனர்.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விமரிசையாக கொண்டாடப்படும். இதையொட்டி அங்கு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில், கடந்த 2 வருடங்களாக அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமானது நடைபெற்று வருகிறது.

    இந்த ஆண்டு வருகிற 18-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள சூழலில், முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக செங்கோட்டை பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும், தமிழக போலீசாரும் இணைந்து கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர்.

    தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் தலைமையில் நேற்று நடைபெற்ற இந்த கொடி அணி வகுப்பில் 45 மத்திய தொழில் பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் 103 போலீசார் பங்கேற்றனர். செங்கோட்டை நகர பகுதியில் உள்ள முக்கிய வீதிகளில் வீரர்கள் ஆயுதங்களை ஏந்தியபடி கொடி அணி வகுப்பை நடத்தினர்.

    • கொடைக்கானலில் நடைபெற்ற யோகா போட்டியில் மகேந்திரன் ஸ்மித் வெற்றி பெற்றார்.
    • கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ., தன்னுடைய பங்களிப்பாக ரூ. 25 ஆயிரம் ரொக்கமாக மாணவனிடம் வழங்கி வாழ்த்தினார்.

    செங்கோட்டை:

    கடையநல்லூர் அருகே உள்ள கண்டுகொண்டான் மாணிக்கம் கிராமத்தை சேர்ந்த சந்திரசேகர் என்பவரின் மகன் 12 வயதான மகேந்திரன் ஸ்மித். இவர் கொடைக்கானலில் நடைபெற்ற யோகா போட்டியில் வெற்றி பெற்றார். இதனையடுத்து தாய்லாந்தில் நடைபெறும் சர்வதேச போட்டியில் பங்கு பெற மகேந்திரன் ஸ்மித் தகுதி பெற்றார்.

    இந்நிலையில் குடும்ப வறுமை காரணமாக அதில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் சிறுவனின் தந்தை சந்திரசேகர் தமிழக அரசுக்கு நிதி உதவி அளிக்க கோரிக்கை வைத்திருந்தார். இது குறித்து தகவல் அறிந்த தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா, மாணவனை ஊக்கப்படுத்தும் வகையில் சர்வதேச போட்டிக்கு செல்ல தேவையான செலவிற்கு தன்னுடைய பங்களிப்பாக ரூ. 25 ஆயிரம் ரொக்கமாக மாணவனிடம் வழங்கி வாழ்த்தினார். நிகழ்ச்சியின் போது மாணவனின் தந்தை சந்திரசேகர், யோகா பயிற்சி ஆசிரியா் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • செங்கோட்டை பகுதியில் விளையும் காய்கறிகளை உள்ளூர் மட்டுமின்றி கேரளாவிற்கும் ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம்.
    • தென்மேற்கு பருவமழையானது ஆரம்பத்தில் பெய்த நிலையில் பின்னர் கண்ணாமூச்சி ஆட்டம் காட்டியது.

    செங்கோட்டை:

    மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான செங்கோட்டை சுற்றுவட்டப் பகுதி பூ மகசூலுக்கு சிறப்பு பெற்றதாகும்.

    உளுந்து, சோளம், கம்பு

    இப்பகுதி விவசாயிகள் கார் மற்றும் பிசான சாகுபடி காலங்களில் நெல் மற்றும் தென்னை, வாழை உள்ளிட்ட தோட்டப்பயிர்களும், ஏனைய காலங்களில் உளுந்து, சோளம், கம்பு மற்றும் தோட்ட பயிரான கத்தரி, வெண்டை, புடலங்காய், மிளகாய், தக்காளி உள்ளிட்ட கோடை கால பயிர்கள், நெல்லி, புளி உள்ளிட்ட வறட்சியை தாங்கும் பயிர்கள் என பயிரிடுவார்கள்.

    இப்பகுதியில் விளையும் காய்கறிகளை உள்ளூர் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவிற்கும் ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம். மேலும் கேரளாவில் கொண்டாப்படும் ஓணம் பண்டிகை காலத்தில் அங்கு காய்கறிகள் விலை அதிகரிப்பதால் அதனை கணக்கில் கொண்டு செங்கோட்டை பகுதி விவசாயிகள் தங்களின் விளைச்சலை பெருக்குவர். இதனால் வர்த்தக அதிகளவில் இப்பகுதி விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பெருமளவில் பயன்பெற்றனர்.

    தென்மேற்கு பருவமழை

    இந்நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையானது ஆரம்பத்தில் பெய்த நிலையில் பின்னர் கண்ணாமூச்சி ஆட்டம் காட்டியது.

    மழை பொய்த்ததால் மோட்டை, அடவிநயினார் அணை உள்ளிட்ட அனைத்து நீர்த்தேக்கங்களிலும் தற்போது தண்ணீரின் அளவு குறைந்து காணப்படுகிறது.

    இதனால் செங் கோட்டை பகுதியில் குறைந்த அளவிலான விவசாயிகளே பயிரிட்டுள்ளனர். காய்கறிகள் விளைச்சல் குறைந்ததால் அவற்றின் விலையும் தற்போது உச்சத்தை அடைந்துள்ளது.

    விவசாயிகள் வேதனை

    இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் பாதிப்படைந்துள்ளனர்.

    மேலும் தற்போது வரை பருவமழை பெய்யாததால் செங்கோட்டை சுற்றுப்பகுதியில் உள்ள பல்வேறு குளங்கள், வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் அனைத்தும் வெறும் புல் தரையாக காட்சி அளிக்கிறது. இதனால் அவை ஆடு, மாடுகளை மேய்ச்சல் நிலமாக மாறியுள்ளது.

    இதே நிலை நீடித்தால் தங்களின் வாழ்வாதாரம் பெரும் பின்னடைவை சந்திக்கும் என செங்கோட்டை பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    • கடையநல்லூர் நகராட்சி பகுதியில் சுற்றித்திரியும் வெறி நாய் கடித்து சிறுவன் உள்பட பலர் படுகாயம் அடைந்தனர்.
    • பொது மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றி தர தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரனை, கிருஷ்ண முரளி எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    கடையநல்லூர் நகராட்சி பகுதியில் சுற்றித்திரியும் வெறி நாய் கடித்து சிறுவன் உள்பட பலர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனைகளில் முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் என்னிடம் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.

    ஏற்கெனவே சங்கரன்கோவில், மேல நீலிதநல்லூர், புளியங்குடி பகுதிகளில் இதேபோன்று 30-க்கும் மேற்பட்ட நபர்கள் தெரு நாய்களால் கடிபட்டு பாதிப்படைந்ததால் பொதுமக்களுடையே மிகுந்த பீதியை ஏற்படுத்தி உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடி கவனம் செலுத்தி மாவட்டம் முழுவதும் சுற்றித்திரியும் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தென்மேற்கு பருவமழை பொய்த்துப் போனதால் ஏற்பட்ட வறட்சி காரணமாக கடையநல்லூர் தொகுதி முழுவதுமே பொதுமக்களுக்கு சரியான முறையில் குடிநீர் வழங்க இயலாத சூழ்நிலை இருக்கிறது.

    எனவே மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் பொது மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றி தர தேவையான நடவடிக்கை களை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அப்போது அ.தி.மு.க. வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் பொய்கை மாரியப்பன் உடன் இருந்தார்.

    • கடந்த 2002-ல் ஏற்பட்ட வெள்ளபெருக்கால் பாலம் பாதிப்படைந்தது.
    • புதியபாலம் கடந்த 2021-ல் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டத்தில் உள்ள தமிழக-கேரள எல்லையை இணைக்க செங்கோட்டை குண்டாற்று பாலம் பெரும்பங்கு வகித்து வருகிறது. இந்த பாலம் கொல்லம்-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் செங்கோட்டை நகருக்கு செல்லும் மிக முக்கிய பாலமாக உள்ளது. இந்த பாலத்தின் வழியாக நாள்தோறும் ஆயிரக் கணக்கான வாகனங்கள் வந்து செல்லுகிறது.

    புதிய பாலம்

    இந்நிலையில் இந்த பாலமானது மிகவும் பழமையானதால் அதன் சுற்று சுவர்களின் உறுதித் தன்மை குறைந்து விட்டது. கடந்த 2002-ல் ஏற்பட்ட வெள்ளபெருக்கால் இந்த பாலம் பாதிப்படைந்தது. இதனால் அந்த பாலத்தின் அருகில் புதிய பாலம் அமைக்க வேண்டும் என பல்வேறு கட்சியினரும், பொதுமக்களும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்ததுடன் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தனர். இதையடுத்து ரூ.2.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, கடந்த 2019-ம் ஆண்டு பணிகளை தொடங்க உத்தர விடப்பட்டது. தொடர்ந்து பணிகள் முடிவடைந்த நிலையில் புதியபாலம் கடந்த 2021-ல் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை இந்த பாலத்தில் வழியாக கனரக வாகனங்கள் உள்பட ஏராளமான வாகனங்கள் வந்து செல்லுகிறது.

    பயன்பாட்டிற்கு வந்து 2 ஆண்டுகளில் இந்த பாலத்தின் மேல்பகுதியில் இணைப்பு பட்டையை யொட்டிய பகுதி யில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் செல்லும்போது மேல் பட்டை அதிர்வு ஏற்பட்டு வருகிறது. இதனால் பட்டையை யொட்டிய பகுதிகளில் கூடுதலாக அரிப்பு ஏற்பட்டு கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரியும்படியாக இருக்கிறது. இந்த விரிசல் நாளடைவில் பெரிதாக வாய்ப்பு உள்ளது.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தி பேராபத்து ஏற்படும் முன்பாக அதனை சரிசெய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    • கொடிகுறிச்சி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் 1000 ஏக்கருக்கும் மேலாக நாட்டு சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
    • தென்காசி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடக்கத்தில் சில நாட்கள் பெய்ததால் குண்டாறு அணை நிரம்பியது

    செங்கோட்டை:

    செங்கோட்டையை அடுத்துள்ள சுப்பிரமணியபுரம், கணக்கப்பிள்ளை வலசை, இலத்தூர், அச்சன்புதூர், சீவநல்லூர், கொடிகுறிச்சி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் சுமார் 1000 ஏக்கருக்கும் மேலான மானாவாரி பயிரான மருத்துவ குணம் வாய்ந்த நாட்டு சோளம் சாகுபடி செய்து வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர்.

    கடந்த சில ஆண்டுகளாக போதிய வருமானம் கிடைக்காததால் தற்போது பெரும்பாலான பகுதிகளில் பூ மகசூல் என சொல்லபடும் கேப்பை சோளம், மொச்சை, தக்காளி வெண்டை, கத்தரி உள்ளிட்ட பயிர்களை பயிரிடாமல் தரிசாகவே போட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை தென்காசி மாவட்டத்தில் தொடக்கத்தில் சில நாட்கள் பெய்ததால் குண்டாறு அணை நிரம்பியது. இதனால் செங்கோட்டை தாலுகா இலத்தூர் விவசாயிகள் தக்காளி, வெங்காயம், வாழை, நெல் மற்றும் சோளம் போன்ற வற்றை சாகுபடி செய்தனர். ஆனால் பின்னர் பருவமழை கண்ணாமூச்சி காட்டி சென்றது. இதனால் போதிய விளைச்சல் இல்லை. கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதலாக விலை இருந்தும் விளைச்சல் இல்லாததால் தாங்கள் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக விவசாயி கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    இதுபற்றி விவசாயி சோழராஜன் கூறும்போது, சோளம் விதைத்து சுமார் 80, 90 நாட்கள் வரை ஏக்கருக்கு சுமார் ரூ.18 முதல் ரூ. 20 ஆயிரம் வரை செலவு செய்தோம். ஆனால் போதிய மழை இல்லாததால் விளைச்சல் இல்லாமல் நஷ்டம் அடைந்துள்ளோம். இதற்கு காரணம் முழுக்க முழுக்க நிலத்தடிநீரை மட்டுமே நம்பி உள்ளதால் கூடுதலாக செலவு செய்தும் எதிர்பார்த்த அளவு விளைச்சல் இல்லாமலும் அதற்கேற்ப விலை இருந்தும் சோளம் பயிரிட்ட விவசாயிகள் ஓவ்வொரு ஆண்டும் நஷ்டத்தை சந்தித்து வருகிறோம் என்றார்.

    • ஒவ்வொரு வாகனத்திற்கும் ஒவ்வொரு பொறுப்பாளர் நியமனம் செய்து அவர்களுடன் வாகனத்தில் பயணிப்பவர்கள் தொடர்பில் இருக்க வேண்டும்.
    • மாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்கு உணவு, குடிநீர் வசதிகள் கிடைத்திட பொறுப்பாளர்கள் ஏற்பாடு செய்திட வேண்டும்.

    செங்கோட்டை:

    மதுரையில் நாளை நடைபெறும் அ.தி.மு.க. மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் செங்கோட்டையில் உள்ள தென்காசி வடக்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

    தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநில மகளிரணி துணைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜலட்சுமி முன்னிலை வகித்தார்.

    மாவட்ட பொருளாளர் சண்முகையா வரவேற்று பேசினார். தொடா்ந்து மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    700 வாகனங்கள்

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அழைப்பை ஏற்று நாம் அனைவரும் குடும்பத்துடன் மதுரையில் நடைபெறும் பொன்விழா எழுச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும். அன்றைய தினம் விடுதலை போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினம் உள்ளது. எனவே அன்று அதிகாலையில் அவருடைய நினைவிடம் சென்று அ.தி.மு.க. சார்பில் மரியாதை செலுத்திய பின்னர் மாநாட்டிற்கு வாகனங்களில் அணிவகுத்து செல்ல வேண்டும்.

    ஒவ்வொரு ஒன்றிய, நகர, பேரூருக்கும் ஒதுக்கப் பட்டுள்ள வாகனங்களில் அனைவரும் பாதுகாப்புடன் பயணம் செய்து மாநாடு சென்று வர வேண்டும். வாடகை கார், வேன், லாரி மற்றும் சொந்த உபயோக வாகனங்கள் என சுமார் 700 வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது.

    குடிநீர் வசதி

    ஒவ்வொரு வாகனத் திற்கும் ஒவ்வொரு பொறுப்பாளர் நியமனம் செய்து அவர்களுடன் வாகனத்தில் பயணிப் பவர்கள் தொடர்பில் இருக்க வேண்டும். ஒருசேர சென்று மாநாட்டினை சிறப்பு செய்து மீண்டும் ஊருக்கு பாதுகாப்புடன் பயணிக்க வேண்டும்.

    மாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வசதிகள் அனைவருக்கும் கிடைத்திட பொறுப்பாளர்கள் ஏற்பாடு செய்திட வேண்டும். மாநாட்டை வெற்றி அடைய செய்து அ.தி.மு.க. ஆட்சிக்கட்டிலில் அமர முதல்படி எடுத்து வைத்திடுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கலந்து கொண்டவர்கள்

    கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் பொய்கை மாரியப்பன், மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் சிவஆனந்த், அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் ராமையா, மாவட்ட விவசாய அணி செயலாளர் பரமகுருநாதன், ஒன்றிய செயலாளர்கள் எஸ்.ஆர். ராமசந்திரன், செல்லப்பன், வசந்தம் முத்துபாண்டியன், ஜெயகுமார், ரமேஷ், மகாராஜன், நகர செயலாளர்கள் கணேசன், ஆறுமுகம், எம்.கே. முருகன், பரமேஸ்வர பாண்டியன் மற்றும் நிர்வாகிகள், தொழிற்சங்க நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலா் கலந்து கொண்டனர்.

    • செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடி ஏற்றுவது இதுதான் கடைசி.
    • அடுத்த முறை நாமே கொடி ஏற்றுவோம் என லாலு பிரசாத் தெரிவித்தார்.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ், சுதந்திர தினத்தையொட்டி பாட்னாவில் உள்ள தனது வீட்டில் நேற்று தேசியக் கொடி ஏற்றினார். அவரது மனைவி ராப்ரி தேவி உடன் இருந்தார்.

    அப்போது செய்தியாளர்களிடம் பேசிய லாலு பிரசாத், இந்த சுதந்திர தினத்தில் நான் நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், மவுலானா அபுல் கலாம் ஆசாத், அம்பேத்கர் போன்ற மாமனிதர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன். தேசத்துக்கு அவர்கள் ஆற்றிய பங்கை மறக்க முடியாது என்றார்.

    அவரிடம், அடுத்த சுதந்திர தினம், பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு வரும் என்பதால் அடுத்த ஆண்டு பிரதமர் மோடி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றுவாரா என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு லாலு பிரசாத், இல்லை... பிரதமர் மோடி இந்த தடவை கடைசி முறையாக செங்கோட்டையில் கொடி ஏற்றியுள்ளார். அடுத்த முறை நாங்கள்தான் (எதிர்க்கட்சிகள்) அங்கு கொடி ஏற்றுவோம் என தெரிவித்தார்.

    • அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி மாநாட்டுக்கான பிரசார பணிகள் செங்கோட்டை பகுதியில் தொடங்கப்பட்டது.
    • கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ., ஆட்டோக்களில் மாநாடு குறித்த ஸ்டிக்கர்கள், பதாகைகளை ஒட்டி பிரசார பணிகளை தொடங்கி வைத்தார்.

    செங்கோட்டை:

    மதுரையில் வருகிற 20-ந்தேதி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ள அக்கட்சியின் பொன்விழா எழுச்சி மாநாட்டுக்கான பிரசார பணிகள் செங்கோட்டை பகுதியில் தொடங்கப்பட்டது.

    இதில் கலந்து கொண்ட தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ., ஆட்டோக்களில் மாநாடு குறித்த ஸ்டிக்கர்கள், பதாகைகளை ஒட்டி பிரசார பணிகளை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் செங்கோட்டை நகர செயலாளர் கணேசன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அ.தி.மு.க. உறுப்பினர் மதன் செய்திருந்தார்.

    ×