search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விநாயகர் சதூர்த்தி"

    • சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம்.
    • விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும்.

    விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட வாரியம் வெளியிட்டுள்ளது.

    அதன்படி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறப்பட்டுள்ளதாவது:-

    களிமண்ணால் செய்யப்பட்ட, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் செய்யப்பட்ட சிலைகளை மட்டுமே கரைக்க வேண்டும்.

    சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம்.

    சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம்.

    ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் பொருட்களை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது.

    சிலைகளை அழகுபடுத்த இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    சிலைகள் தயாரிக்க அல்ல பந்தல்களை அலங்கரிக்க வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • கடந்த 2 வருடங்களாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சதுர்த்தி ஊர்வலமானது நடைபெற்று வருகிறது.
    • கொடி அணி வகுப்பில் 45 மத்திய தொழில் பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் 103 போலீசார் பங்கேற்றனர்.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விமரிசையாக கொண்டாடப்படும். இதையொட்டி அங்கு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில், கடந்த 2 வருடங்களாக அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமானது நடைபெற்று வருகிறது.

    இந்த ஆண்டு வருகிற 18-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள சூழலில், முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக செங்கோட்டை பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும், தமிழக போலீசாரும் இணைந்து கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர்.

    தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் தலைமையில் நேற்று நடைபெற்ற இந்த கொடி அணி வகுப்பில் 45 மத்திய தொழில் பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் 103 போலீசார் பங்கேற்றனர். செங்கோட்டை நகர பகுதியில் உள்ள முக்கிய வீதிகளில் வீரர்கள் ஆயுதங்களை ஏந்தியபடி கொடி அணி வகுப்பை நடத்தினர்.

    • பொதுமக்கள் வீடுகளில் வழிபட்ட 200-க்கும் மேற்பட்ட சிறிய களிமண் சிலைகளையும் நகர வீதியில் ஊர்வலமாக எடுத்து சென்றனர்.
    • காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 100க்கு மேற்பட்ட விநாயகர் சிலைகள் மாமல்லபுரம் கடலில் கரைக்கப்பட உள்ளது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் கடந்த 31-ந்தேதி விநாயகர் சதூர்த்தியன்று 4 இடங்க ளில் பெரிய விநாயகர் சிலைகள் பொது இடத்தில் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

    வழிபாடு முடிந்து 3-ம் நாளான நேற்று மாலை அந்த சிலைகளுடன், பொதுமக்கள் வீடுகளில் வழிபட்ட 200-க்கும் மேற்பட்ட சிறிய களிமண் சிலைகளையும் நகர வீதியில் ஊர்வலமாக எடுத்து சென்றனர்.

    பின்னர் மீனவர் பகுதி மற்றும் வடக்கு மாமல்லபுரம் கடற்கரையில் போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

    5-ம் நாளான நாளை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 100க்கு மேற்பட்ட விநாயகர் சிலைகள் மாமல்லபுரம் கடலில் கரைக்கப்பட உள்ளது.

    செங்கல்பட்டு போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் உத்தரவின் பெயரில் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ருக்மாந்தகன் தலைமையில் போலீசார் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில், அசம்பாவிதங்களை தடுக்கும் வண்ணம் அதற்கான பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×