search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கோட்டையில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு
    X

    மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும்,போலீசாரும் இணைந்து கொடி அணிவகுப்பு நடத்தியபோது எடுத்தபடம்.

    செங்கோட்டையில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு

    • கடந்த 2 வருடங்களாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சதுர்த்தி ஊர்வலமானது நடைபெற்று வருகிறது.
    • கொடி அணி வகுப்பில் 45 மத்திய தொழில் பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் 103 போலீசார் பங்கேற்றனர்.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விமரிசையாக கொண்டாடப்படும். இதையொட்டி அங்கு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில், கடந்த 2 வருடங்களாக அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமானது நடைபெற்று வருகிறது.

    இந்த ஆண்டு வருகிற 18-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள சூழலில், முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக செங்கோட்டை பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும், தமிழக போலீசாரும் இணைந்து கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர்.

    தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் தலைமையில் நேற்று நடைபெற்ற இந்த கொடி அணி வகுப்பில் 45 மத்திய தொழில் பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் 103 போலீசார் பங்கேற்றனர். செங்கோட்டை நகர பகுதியில் உள்ள முக்கிய வீதிகளில் வீரர்கள் ஆயுதங்களை ஏந்தியபடி கொடி அணி வகுப்பை நடத்தினர்.

    Next Story
    ×