search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ."

    • மாணவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று நிழற்கூரை அமைக்கப்பட உள்ளது.
    • கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ., மாணவர்களை அழைத்து அவர்கள் கைகளால் அடிக்கல்லை நாட்டினார்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் நகராட்சி பண்பொழி சாலையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பஸ் நிறுத்தம் அருகே மாணவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் செலவில் நிழற்கூரை அமைக்கப்பட உள்ளது. அதன் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவில் கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ., கல்லூரி மாணவர்களை அழைத்து மாணவர்களின் கைகளால் அடிக்கல்லை நாட்டினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட மாவட்ட துணை செயலாளர் பொய்கை மாரியப்பன், கடையநல்லூர் நகர செயலாளர் முருகன், முன்னாள் நகர செயலாளர் கிட்டு ராஜா, நகராட்சி உதவி பொறியாளர் கண்ணன், தொழில்நுட்ப பிரிவு உதவியாளர் சுரேஷ், அரசு ஒப்பந்ததாரர் வேல் துரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • கொடைக்கானலில் நடைபெற்ற யோகா போட்டியில் மகேந்திரன் ஸ்மித் வெற்றி பெற்றார்.
    • கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ., தன்னுடைய பங்களிப்பாக ரூ. 25 ஆயிரம் ரொக்கமாக மாணவனிடம் வழங்கி வாழ்த்தினார்.

    செங்கோட்டை:

    கடையநல்லூர் அருகே உள்ள கண்டுகொண்டான் மாணிக்கம் கிராமத்தை சேர்ந்த சந்திரசேகர் என்பவரின் மகன் 12 வயதான மகேந்திரன் ஸ்மித். இவர் கொடைக்கானலில் நடைபெற்ற யோகா போட்டியில் வெற்றி பெற்றார். இதனையடுத்து தாய்லாந்தில் நடைபெறும் சர்வதேச போட்டியில் பங்கு பெற மகேந்திரன் ஸ்மித் தகுதி பெற்றார்.

    இந்நிலையில் குடும்ப வறுமை காரணமாக அதில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் சிறுவனின் தந்தை சந்திரசேகர் தமிழக அரசுக்கு நிதி உதவி அளிக்க கோரிக்கை வைத்திருந்தார். இது குறித்து தகவல் அறிந்த தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா, மாணவனை ஊக்கப்படுத்தும் வகையில் சர்வதேச போட்டிக்கு செல்ல தேவையான செலவிற்கு தன்னுடைய பங்களிப்பாக ரூ. 25 ஆயிரம் ரொக்கமாக மாணவனிடம் வழங்கி வாழ்த்தினார். நிகழ்ச்சியின் போது மாணவனின் தந்தை சந்திரசேகர், யோகா பயிற்சி ஆசிரியா் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி மாநாட்டுக்கான பிரசார பணிகள் செங்கோட்டை பகுதியில் தொடங்கப்பட்டது.
    • கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ., ஆட்டோக்களில் மாநாடு குறித்த ஸ்டிக்கர்கள், பதாகைகளை ஒட்டி பிரசார பணிகளை தொடங்கி வைத்தார்.

    செங்கோட்டை:

    மதுரையில் வருகிற 20-ந்தேதி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ள அக்கட்சியின் பொன்விழா எழுச்சி மாநாட்டுக்கான பிரசார பணிகள் செங்கோட்டை பகுதியில் தொடங்கப்பட்டது.

    இதில் கலந்து கொண்ட தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ., ஆட்டோக்களில் மாநாடு குறித்த ஸ்டிக்கர்கள், பதாகைகளை ஒட்டி பிரசார பணிகளை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் செங்கோட்டை நகர செயலாளர் கணேசன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அ.தி.மு.க. உறுப்பினர் மதன் செய்திருந்தார்.

    • புதிய வகுப்பறை கட்டிட பணிக்கான பூமி பூஜை விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.
    • பணிகளை தொடங்கி வைத்த கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. கல்வி அவசியம் குறித்து மாணவர்களிடையே பேசினார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை எஸ்.எம்.எஸ்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடையநல்லுார் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.40 லட்சம் மதிப்பீ ட்டில் கூடுதல் புதிய வகுப்பறை கட்டிட பணிக்கான பூமி பூஜை விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியா் சுந்தரக்கு மார் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியா் ஜோதிலெட்சுமி, தேசிய மாணவர் படை அலுவலா் அருள்தாஸ், நாட்டுநலப்பணி திட்ட அலுவலா் முருகன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளா் செல்வி ஆகியோர் முன்னி லை வகித்தனா். தமிழா சிரியா் சிவசுப்பிரமணியன் வரவேற்று பேசினார்.

    அதனைத்தொடர்ந்து கடையநல்லுார் சட்டமன்ற உறுப்பினா் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா கூடுதல் புதிய வகுப்பறை கட்டிட பணிகளை தொடங்கி வைத்து கல்வி அவசியம் குறித்து மாணவர்களிடையே பேசினார். பின்னா் பள்ளி மாணவர்களை கொண்டே புதிய வகுப்பறை கட்டிட த்திற்கான செங்கல்களை எடுத்து வைக்கும்படி கூறினார். இதனை எதிர் பார்க்காத மாணவர்கள் எம்.எல்.ஏ. கிருஷ்ண முரளிக்கு நன்றி தெரிவித்தனர்.

    நிகழ்ச்சியில் ஆசிரியா்கள் முத்துக் குமார், குமார், மாவட்ட துணைச் செய லாளா் பொய்கை மாரியப்பன், நகரச்செயலாளா் கணேசன் முன்னாள், இன்னாள் நகர்மன்ற உறுப்பினா்கள், வார்டு பிரதிநிதிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் பள்ளி ஆசிரியா் தண்டமிழ்தாசன் சுதாகர் நன்றி கூறினார்.

    • சித்தன் ரமேஷ் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
    • கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டையில் ரோட்டரி கிளப் ஆப் கேலக்ஸி சார்பில் புதிய நிர்வாகிகள் தேர்வு மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. செங்கோட்டை ரோட்டரி கிளப் ஆப் கேலக்ஸி தலைவா் சுந்தரம் தலைமை தாங்கினார். துணைத்தலைவா் பொன்னுத்துரை, இணைச்செயலாளா் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனா். பொருளாளா் ஹரிஹரநாராயணன் வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் உதவி ஆளுநர் சித்தன் ரமேஷ் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதில் சிறப்பு விருந்தினராக கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு செங்கோட்டை மற்றும் புளியரை, அரசு பள்ளிகளில் பயின்ற 10, 11 மற்றும் பிளஸ்-2 தேர்வுகளில் முதல் 2 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், பரிசுகள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டி பேசினார். தொடர்ந்து செங்கோட்டை ரோட்டரி கிளப் ஆப் கேலக்ஸியில் தன்னை கவுரவ உறுப்பினாக இணைத்துக் கொண்டார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் ஆளுநர்கள் டாக்டர் ஷேக்சலீம், மாவட்ட கம்யூனிட்டி சேர்மன் நந்து என்ற அருணாசலம், கிளப் நிர்வாகிகள், உறுப்பினா்கள், சமூக ஆர்வலா்கள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனா். முடிவில் செயலாளா் கோபிநாத் நன்றி கூறினார்.

    ×