search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அணிவகுப்பு"

    • கோத்தகிரி ஆர்.எஸ்.எஸ் பொறுப்பாளர் ராஜேஷ்சந்தர் கொடியசைத்து துவக்கி வைத்தார்
    • டானிங்டனில் இருந்து புறப்பட்ட ஊர்வலம்காமராஜர் சதுக்கத்தை அடைந்தது

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி, எருமாடு ஆகிய பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.

    இதன்ஒருபகுதியாக கோத்தகிரி டானிங்டன் பகுதியில் இருந்து புறப்பட்ட அணிவகுப்பு ஊர்வலத்தை கோத்தகிரி ஆர்.எஸ்.எஸ் பொறுப்பாளர் ராஜேஷ் சந்தர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    நிர்வாகிகள் கணேசன், கன்னாவரை ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டானிங்டனில் இருந்து புறப்பட்ட ஊர்வலம், காமராஜர் சதுக்கம், மார்கெட்திடல், பஸ்நிலையம், தாலுகா அலுவலக சாலை, ராம்சந்த் சதுக்கம் வழியாக காமராஜர் சதுக்கத்தை அடைந்தது. தொடர்ந்து அங்குள்ள தனியார் அரங்கில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

    ஆர்.எஸ்.எஸ் பேண்டு வாத்தியத்துடன் சீருடை அணிந்து சென்ற அணிவகுப்பு ஊர்வலத்தில் பெண்கள் உள்பட சுமார் 250 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

    ஊர்வலத்தில் ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் உருவப்படம் மற்றும் பாரதா மாதா புகைப்படம் ஆகியவை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டது.

    முன்னதாக ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலம் செல்லும் பாதையை மாவட்ட எஸ்.பி. சுந்தரவடிவேல் ஆய்வு செய்தார்.

    ஊர்வலம் நடை பெறுவதையொட்டி குன்னூர் துணை போலீஸ் சூப்பிரண்டு குமார் தலைமையில் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் என சுமார் 200 மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    • ஆயுதப்படை மைதானத்தில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.
    • உயிர் நீத்த காவலர்களுக்கு அணிவகுப்பு மரியாதையை ஆயுதப்படை போலீசார் செய்தனர்.

    தரங்கம்பாடி:

    இந்தியா- சீனா எல்லை பகுதியில் 1959-ம் ஆண்டு நடந்த மோதலில் எல்லை பாதுகாப்பில் ஈடுபட்ட 20 இந்திய காவலர்கள் வீரமரணம் அடைந்தனர்.

    இந்த சம்பவத்தை நினைவுக்கூரும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 21-ந் தேதி காவலர் வீரவணக்க நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.

    இதனை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பாக ஆயுதப்படை மைதானத்தில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா, மயிலாடுதுறை மாவட்டத்தில் உயிர்நீத்த போலீசாருக்கு மலர் வளையம் வைத்து 36 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தினார்.

    தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மனோகர், சஞ்சீவ்குமார், சீர்காழி லாமேக், இன்ஸ்பெக்டர்கள் செல்வம், சிங்காரவேலன், மணிமாறன், புயல் பாலச்சந்திரன், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் விஜய் லூர்து பிரவீன்,மற்றும் போலீசார் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    முன்னதாக உயிர் நீத்த காவலர்களுக்கு அணிவகுப்பு மரியாதையை ஆயுதப்படை போலீசார் செய்தனர்.

    தொடர்ந்து உயிர் நீத்த காவலர்களுக்கு அஞ்சல் செலுத்தும் வகையில் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    இதில் மருத்துவமனை தலைமை மருத்துவர் செந்தில்குமார், ஊர் காவல் படை தளபதி அலெக்ஸ்,ஏராளமான காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • வருகிற 24-ந்தேதி இந்து முன்னணி சார்பில் விநாயகர் ஊர்வலம் நடைபெற உள்ளது.
    • புதிய பஸ் நிலையத்திலிருந்து போலீசார் அணிவகுப்பு ஒத்திகை புறப்பட்டது.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டையில் வருகிற 24-ந்தேதி இந்து முன்னணி சார்பில் 31-ம் ஆண்டு விநாயகர் ஊர்வலம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு முத்துப்பேட்டையில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னதாக புதிய பஸ் நிலையத்திலிருந்து புறப்பட்ட அணிவகுப்பு ஒத்திகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தலைமையில், ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை முன்னிலையில், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் விவேகானந்தன், சோமசுந்தரம், ஆயுதப்படை டி.எஸ்.பி. சந்திரமோகன், இன்ஸ்பெக்டர்கள் முத்துப்பேட்டை ராஜேஷ், பெருகவாழ்ந்தான் முணியான்டி, எடையூர் அனந்த பத்மநாதன், களப்பாள் விஜயா, திருக்களார் செந்தில்குமரன், சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் உள்பட 200-க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்றனர்.

    • கடந்த 2 வருடங்களாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சதுர்த்தி ஊர்வலமானது நடைபெற்று வருகிறது.
    • கொடி அணி வகுப்பில் 45 மத்திய தொழில் பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் 103 போலீசார் பங்கேற்றனர்.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விமரிசையாக கொண்டாடப்படும். இதையொட்டி அங்கு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில், கடந்த 2 வருடங்களாக அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமானது நடைபெற்று வருகிறது.

    இந்த ஆண்டு வருகிற 18-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள சூழலில், முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக செங்கோட்டை பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும், தமிழக போலீசாரும் இணைந்து கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர்.

    தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் தலைமையில் நேற்று நடைபெற்ற இந்த கொடி அணி வகுப்பில் 45 மத்திய தொழில் பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் 103 போலீசார் பங்கேற்றனர். செங்கோட்டை நகர பகுதியில் உள்ள முக்கிய வீதிகளில் வீரர்கள் ஆயுதங்களை ஏந்தியபடி கொடி அணி வகுப்பை நடத்தினர்.

    • அணிவகுப்பு சென்னையில் இருந்து இ.சி.ஆர் வழியாக பாண்டிச்சேரி சென்று அங்கிருந்து சென்னை திரும்பியது.
    • சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

    மல்லபுரம்:

    மாமல்லபுரம் இ.சி.ஆரில் உள்ள வெல்கம் ஹோட்டலில், ஹிஸ்டாரிக்கல் கார்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா மற்றும் சென்னை பெருநகர காவல்துறை இணைந்து, நடத்திய அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஜெர்மன், ஜப்பான், பிரான்ஸ் நாட்டின் பழமையான மெர்சிடிஸ் பென்ஸ், ஆஸ்டின், பியுக், செவர்லெட், பிளைன்மூத், பியட் உள்ளிட்ட நிறுவனங்களின் கார்-பைக் அணிவகுப்பு நடைபெற்றது.


    இந்த அணிவகுப்பு சென்னையில் இருந்து இ.சி.ஆர் வழியாக பாண்டிச்சேரி சென்று அங்கிருந்து சென்னை திரும்பியது.

    வரும் வழியில் மாமல்லபுரத்தில் நிறுத்தப்பட்டது. இதை ஹோட்டலில் தங்கியிருந்த விருந்தினர், சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

    • பொதுமக்கள் நட்புறவை பேணும் வகையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் போலீஸ் அணிவகுப்பு நடந்தது.
    • இதில் காவலர்கள் சுமார் 150 பேர் கலந்து கொண்டனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    பொதுமக்கள்-காவல்துறையினரிடையே நட்புறவை மேம்படுத்தவும், போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் ஸ்ரீவில்லிபுத்தூரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசபெருமாள் உத்தரவின்பேரில் போலீஸ் அணிவகுப்பு நடந்தது. மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோகன், ஸ்ரீவில்லிபுத்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முகேஷ் ஜெயக்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    நகர் வட்ட ஆய்வாளர் சங்கர் கண்ணன் வத்தராப் வட்ட ஆய்வாளர் ஆறுமுகம், கிருஷ்ணன் கோவில் வட்ட ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் போலீசார் அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் மங்காபுரம் பள்ளி விளை யாட்டு மைதானத்தில் இருந்து மதுரை ரோடு, சின்னக்கடை பஜார், பஸ் நிலையம், மார்க்கெட் ரோடு, மாரியம்மன் கோவில் தெரு வழியாக மங்காபுரம் விளையாட்டு மைதானத்தில் அணிவகுப்பு சென்றது. இதில் காவலர்கள் சுமார் 150 பேர் கலந்து கொண்டனர்.

    • போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் ஏற்றுக்கொண்டார்.
    • மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் உள்ள ராஜன்தோட்டம் சாய் விளையாட்டு மைதானத்தில் சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் கலெக்டர் மகாபாரதி தேசியகொடியை ஏற்றி வைத்தார். பின்னர், போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, சுதந்திர போராட்ட தியாகிகளும், அவரது குடும்பத்தினரும் கவுரவிக்கப்பட்டனர். பின்னர், பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். தொடர்ந்து, மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    • ரூ.2 கோடியே 22 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • பின்னர், போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவுக்கு நாகை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை தாங்கி, தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் காவல்துறை, ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்சிங் சமாதான புறா பறக்க விட்டனர்.

    தொடர்ந்து விழாவில் சுதந்திர போராட்ட தியாகிகள் கவுரவிக்கப்பட்டனர்.

    அதேபோல் சிறப்பாக பணியாற்றிய பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு துறைகள் சார்பில் ரூ.2 கோடியே 22 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    • சுதந்திர தினவிழாவில் காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
    • சுதந்திரதினத்தன்று முதலமைச்சரை காவல்துறை வாகன அணி வகுப்புடன் அழைத்து வருவது போன்று ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.

    சென்னை:

    76-வது சுதந்திர தின விழா நாளை மறுநாள் (15-ந்தேதி) நாடு முழுவ தும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

    சென்னை காமராஜர் சாலையில் கோட்டை கொத்தளத்தில் நடைபெறும் சுதந்திர தின நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்ற உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

    சுதந்திர தினவிழாவில் காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதையொட்டி இதற்கான இறுதி ஒத்திகை நிகழ்ச்சி இன்று சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்தது. இதில் போலீசார் சீருடையில் அணி வகுத்தனர்.

    இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் சுதந்திரதினத்தன்று முதலமைச்சரை காவல்துறை வாகன அணி வகுப்புடன் அழைத்து வருவது போன்று ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.

    அதனை தொடர்ந்து கமாண்டோ படை, குதிரைப் படை, பெண் காவலர்கள் உள்ளிட்ட 7 படைப்பிரிவினர் பங்கேற்ற அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் ஏற்றுக் கொண்டு தேசிய கொடியைஏற்றி பேசுவது போன்று ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

    அதன் பின் தகைசால் தமிழர் விருது, ஏபிஜே அப்துல்கலாம் விருது, துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா உள்ளிட்ட விருதுகள் வழங்குவது போன்று ஒத்திகை நடந்தது.

    இதையொட்டி இன்று காலை காமராஜர் சாலை பகுதியில் போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

    காலை 8 மணி முதல் ஒத்திகை நிகழ்ச்சி முடிவடைந்த 10 மணி வரையிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.நேப்பியர் பாலம் முதல் போர் நினைவுச் சின்னம் வரை உள்ள காமராஜர் சாலை, போர் நினைவுச் சின்னத்தில் இருந்து ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதி வரை உள்ள ராஜாஜி சாலை, கொடிமரச் சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது

    போலீசாரின் அணி வகுப்பு ஒத்திகையையொட்டி இன்று சென்னை தலைமைச்செயலகம் அமைந்துள்ள கோட்டை கொத்தளம், மற்றும் காமராஜர் சாலை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதில் ஏராளமான போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்கள்.

    • டி.ஜி.பி.க்கு பிரியாவிடை அணிவகுப்பு கொடுக்கப்பட்டது.
    • வழக்கத்துக்கு மாறாக போலீசாருக்கு இந்தியில் அறிவுறுத்தல்கள் (கமாண்ட்) வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில டி.ஜி.பி. மனோஜ்குமார் லால் டெல்லிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    இதையடுத்து கோரிமேடு போலீஸ் மைதானத்தில், அவருக்கு விடைகொடுக்கும் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. நிகழ்ச்சியில் டி.ஜி.பி. மனோஜ்குமார் லால் மற்றும் ஏ.டி.ஜி.பி, சீனியர் எஸ்.பி.க்கள் மற்றும் எஸ்.பி.க்கள் என போலீஸ் துறை அதிகாரிகள் அனைவரும் பங்கேற்றனர்.

    இதில் டி.ஜி.பி.க்கு பிரியாவிடை அணிவகுப்பு கொடுக்கப்பட்டது. இந்த அணிவகுப்பிற்கு காரைக்கால் சீனியர் எஸ்.பி. மணிஷ் தலைமை வகித்தார். வழக்கமாக அணிவகுப்பில் அறிவுறுத்தல்கள் (கமாண்ட்) ஆங்கிலத்தில் வழங்கப்படும். ஆனால் வழக்கத்துக்கு மாறாக போலீசாருக்கு இந்தியில் அறிவுறுத்தல்கள் (கமாண்ட்) வழங்கப்பட்டது.

    இவ்விவகாரம் போலீஸ் துறை வட்டாரத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    • விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அணிவகுப்பு நடந்தது.
    • 15 வாகனங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    அம்பேத்கர் 132-வது பிறந்தநாளையொட்டி மதுரையில் உள்ள அவரது சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாலை அணிவித்தனர்.

    கள்ளந்திரி, குறிஞ்சி நகர், ஏ.என்.புரம் முகாம் அமைப்பாளர்கள் மணிபாரதி, நொண்டிசாமி, அஜித் ஆகியோரது தலைமையில் 30 பேர், பொய்கைக்கரைப்பட்டி நந்தகோபால் தலைமையில் 10பேர், வெள்ளியங்குன்றம் நொண்டிசாமி தலைமையில் 10பேர், பில்லுச்சேரி தினேஷ் தலைமையில் 10பேர், மாத்தூர், மாத்தூர் காலனி காசி, சின்னையா ஆகியோரது தலைமையில் 20பேர், குருத்தூர் மாரி காளி தலைமையில் 25பேர், மாங்குளம் மீனாட்சி புரம் சபரிநாதன், கண்ணன், செல்வம் ஆகியோரது தலைமையில் 25பேர் அம்பேத்கரின் பிறந்தநாள் விழாவில் மலர் தூவி இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

    ராவணன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அணிவகுத்து வந்தனர். மேற்கு ஒன்றியம் சார்பில் 22 வாகனங்களில் அணிவகுப்பில் கலந்து கொண்டனர். கிழக்கு ஒன்றியம் சார்பில் 15 வாகனங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டனர். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அணிவகுப்பில் பங்கேற்றனர்.

    • மதுரை ரெயில் நிலையத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு நடந்தது.
    • அணிவகுப்பில் போலீசார் கவச உடை அணிந்தும், துப்பாக்கி ஏந்தியும் பங்கேற்றனர்.

    மதுரை

    கேரள மாநிலம் ஆலப்புலாவில் இருந்து கண்ணூருக்கு கடந்த 3-ந் தேதி சென்ற ரெயிலில் டி1 பெட்டியில் பயணம் செய்த பயணிகள் மீது மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இதில் ஒரு குழந்தை, பெண் உள்பட 3 பேர் பலியாகினர்.

    நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர் போலீசில் சிக்கி உள்ளார். அவரை கேரளாவுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த அம்மாநில போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்தநிலையில் பயணிகள் பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தமிழகத்தில் உள்ள ரெயில் நிலையங்களில் நடத்தப்பட்டு வருகிறது. மதுரை கோட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்களில் கொடி அணிவகுப்பு நடத்துவது என்று ரெயில்வே போலீசார் முடிவு செய்தனர்.

    அதன்படி மதுரை ரெயில் நிலையத்தில் இன்று கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் நடத்தப்பட்ட இந்த அணிவகுப்பில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் குருசாமி மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்துகொண்டனர்.

    மதுரை ரெயில் நிலையத்தின் அனைத்து நடைமேடை மற்றும் வளாகம் வழியாக அவர்கள் அணிவகுத்து சென்றனர். அணிவகுப்பில் போலீசார் கவச உடை அணிந்தும், துப்பாக்கி ஏந்தியும் பங்கேற்றனர்.

    மதுரை ரெயில் நிலையம் மட்டுமின்றி திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் போலீசாரின் கொடி அணிவகுப்பு இன்று நடந்தது.

    ×