search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "distinction"

    • 4-ம் வகுப்பு மாணவி ரித்திகா வரவேற்புரை வாசித்தார்.
    • மழலையரின் அலங்கார அணிவகுப்பு அனைவரையும் கவர்ந்தது.

    தஞ்சாவூர்:

    கும்பகோணம் தாமரை பன்னாட்டு பள்ளியில் மழலையர் பிரிவு மாணவர்களின் 7-ம் ஆண்டு விளையாட்டு விழா கடந்த 10-ந்தேதி நடைபெற்றது.

    விழாவை பள்ளி தலைவர் வெங்கடேசன், துணைத்தலைவர் நிர்மலா வெங்கடேசன் ஆகியோர் தொடக்கி வைத்தனர்.

    விழாவில் தஞ்சை தாமரை பன்னாட்டு பள்ளியின் முதுநிலை முதல்வர் ஜெயஸ்ரீ பத்ரிநாத் மற்றும் கும்பகோணம் தாமரை பன்னாட்டு பள்ளியின் முதல்வர் விஜயா ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    4-ம் வகுப்பு மாணவி ரித்திகா வரவேற்புரை வாசித்தார்.இதில் பெற்றோர்கள், மாணவ- மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    மழலையர் பிரிவு மாணவர்கள் சிலம்பம், கராத்தே, யோகா போன்றவற்றில் தங்கள் தனித்திறமைகளை வெளிப்படுத்தினர். மேலும், விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை பெற்றனர்.

    மழலையரின் அலங்கார அணிவகுப்பு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. பெற்றோர்களுக்கான விளையாட்டு போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    விழா பள்ளி முதல்வர் மற்றும் அவர்களது குழு ஆசிரியர்கள் மூலம் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டு நடைபெற்றது. முடிவில் 4-ம் வகுப்பு மாணவி ஸ்மித்திகா நன்றி கூறினார்.

    • ஆவணி கடைசி ஞாயிற்றுக்கிழமை பால் அபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
    • கோவில் தற்காலிகமாக பூட்டப்பட்டிருந்தது இதனல் பாலாபி ஷேகம் செய்ய வந்த பக்தர்கள் கோவில் பூட்டப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    நாகப்பட்டினம்,:

    நாகப்பட்டினம் மாவட்ட ம், அக்கரைப்பேட்டை மீனவ கிராம முத்துமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக புனரமைப்பு பணிகள் கடந்த மூன்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது.

    அதனால் ஆண்டு திருவிழா நிறுத்தப்பட்டு ஆவணி கடைசி ஞாயிற்றுக்கிழமை பால் அபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும் திருவிழா நடத்த 30 பஞ்சாயத்துதாரர்களில் ஒரு தரப்பினரான 18 பேர் மட்டுமே கையெழுத்திட்ட நிலையில் மீதமுள்ளோர் கையெழுத்திடவில்லை.

    இதனால் இருதரப்பினர் இடையே சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்க இருதரப்பினரையும் ஒன்றாக இணைந்து திருவிழா நடத்த மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது‌.இந்நிலையில் இன்று அதிகாலையில் இருந்து பெண்கள், ஆண்கள் என கிராம மக்கள் பாலாபிஷேகம் செய்வதற்காக கோவிலுக்கு வந்துள்ளனர்.

    இந்த நிலையில் மீனவ கிராமத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் கோவில் தற்காலிகமாக பூட்டப்பட்டது.

    இதனால் பாலாபி ஷேகம் செய்ய வந்த பக்தர்கள் கோவில் பூட்டப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    கோவில் பூட்டப்பட்ட விசயம் மீனவ கிராமத்தில் தீயாக பரவியது. பாலாபிஷேகம் செய்ய வந்த பக்தர்கள் கோவிலை திறக்க கூறி வலியுறுத்தி வந்தனர்‌.

    இதனை தொடர்ந்து இரு தரப்பு மீனவர்களிடம் நாகப்பட்டினம் வட்டா ட்சியர் கார்த்திகேயன், நாகை டி.எஸ்.பி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு இருதரப்பு மீனவர்களிடையே பேச்சுவார்த்தையில் ஈடுப்ப ட்டனர்.

    இந்நிலையில் உரிய பேச்சு வார்த்தை நடத்தி 12 மீனவ பஞ்சாயத்துதாரர்களிடம் கையொப்பம் பெறப்பட்டதை தொடர்ந்து கோவில் கதவு திறக்கப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டு பால் அபிஷேகம் நடைபெற்றது.

    பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவத் பஜ்வா, அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோவை நேற்று திடீரென தொலைபேசியில் தொடர்பு கொண்டு முக்கிய ஆலோசனை நடத்தினார்.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் அடுத்த மாதம் 25-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதன் காரணமாக அங்கு நீதிபதி நசிருல் முல்க் தலைமையில் இடைக்கால அரசு பதவி ஏற்று, நிர்வாகத்தை கவனித்து வருகிறது.

    இந்த தருணத்தில், அந்த நாட்டின் ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவத் பஜ்வா, அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோவை நேற்று திடீரென தொலைபேசியில் தொடர்பு கொண்டு முக்கிய ஆலோசனை நடத்தினார். இது பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இரு தரப்பு உறவுகள் பற்றி மைக் பாம்பியோவுடன் கமர் ஜாவத் பஜ்வா விவாதித்தார் என தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ள வேண்டிய அரசியல் நல்லிணக்க நடவடிக்கைகள் பற்றியும் இருவரும் பேசினர் என அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

    இந்த சந்திப்பு பற்றி அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹெதர் நவார்ட் விடுத்து உள்ள டுவிட்டர் பதிவில், “தெற்காசியாவில் உள்ள பயங்கரவாத அமைப்புகளை எந்த பாரபட்சமும் இன்றி இலக்கு வைத்து ஒடுக்குவது குறித்து பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவத் பஜ்வாவுடன் வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ விவாதித்தார்” என கூறப்பட்டு உள்ளது.  #Tamilnews 
    ×