முத்துப்பேட்டையில், போலீசார் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

வருகிற 24-ந்தேதி இந்து முன்னணி சார்பில் விநாயகர் ஊர்வலம் நடைபெற உள்ளது. புதிய பஸ் நிலையத்திலிருந்து போலீசார் அணிவகுப்பு ஒத்திகை புறப்பட்டது.
போலீசார் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
போலீசார் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
Published on

முத்துப்பேட்டை:

முத்துப்பேட்டையில் வருகிற 24-ந்தேதி இந்து முன்னணி சார்பில் 31-ம் ஆண்டு விநாயகர் ஊர்வலம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு முத்துப்பேட்டையில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக புதிய பஸ் நிலையத்திலிருந்து புறப்பட்ட அணிவகுப்பு ஒத்திகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தலைமையில், ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை முன்னிலையில், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் விவேகானந்தன், சோமசுந்தரம், ஆயுதப்படை டி.எஸ்.பி. சந்திரமோகன், இன்ஸ்பெக்டர்கள் முத்துப்பேட்டை ராஜேஷ், பெருகவாழ்ந்தான் முணியான்டி, எடையூர் அனந்த பத்மநாதன், களப்பாள் விஜயா, திருக்களார் செந்தில்குமரன், சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் உள்பட 200-க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com