search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கோட்டை அருகே குண்டாற்று புதிய பாலத்தின் இணைப்பு மேல் பட்டையில் அரிப்பு-பயன்பாட்டிற்கு வந்த 2 ஆண்டுகளில் விரிசல்
    X

    குண்டாற்று பாலத்தின் இணைப்பு மேல் பட்டை சேதமடைந்திருப்பதை படத்தில் காணலாம்.

    செங்கோட்டை அருகே குண்டாற்று புதிய பாலத்தின் இணைப்பு மேல் பட்டையில் அரிப்பு-பயன்பாட்டிற்கு வந்த 2 ஆண்டுகளில் விரிசல்

    • கடந்த 2002-ல் ஏற்பட்ட வெள்ளபெருக்கால் பாலம் பாதிப்படைந்தது.
    • புதியபாலம் கடந்த 2021-ல் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டத்தில் உள்ள தமிழக-கேரள எல்லையை இணைக்க செங்கோட்டை குண்டாற்று பாலம் பெரும்பங்கு வகித்து வருகிறது. இந்த பாலம் கொல்லம்-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் செங்கோட்டை நகருக்கு செல்லும் மிக முக்கிய பாலமாக உள்ளது. இந்த பாலத்தின் வழியாக நாள்தோறும் ஆயிரக் கணக்கான வாகனங்கள் வந்து செல்லுகிறது.

    புதிய பாலம்

    இந்நிலையில் இந்த பாலமானது மிகவும் பழமையானதால் அதன் சுற்று சுவர்களின் உறுதித் தன்மை குறைந்து விட்டது. கடந்த 2002-ல் ஏற்பட்ட வெள்ளபெருக்கால் இந்த பாலம் பாதிப்படைந்தது. இதனால் அந்த பாலத்தின் அருகில் புதிய பாலம் அமைக்க வேண்டும் என பல்வேறு கட்சியினரும், பொதுமக்களும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்ததுடன் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தனர். இதையடுத்து ரூ.2.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, கடந்த 2019-ம் ஆண்டு பணிகளை தொடங்க உத்தர விடப்பட்டது. தொடர்ந்து பணிகள் முடிவடைந்த நிலையில் புதியபாலம் கடந்த 2021-ல் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை இந்த பாலத்தில் வழியாக கனரக வாகனங்கள் உள்பட ஏராளமான வாகனங்கள் வந்து செல்லுகிறது.

    பயன்பாட்டிற்கு வந்து 2 ஆண்டுகளில் இந்த பாலத்தின் மேல்பகுதியில் இணைப்பு பட்டையை யொட்டிய பகுதி யில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் செல்லும்போது மேல் பட்டை அதிர்வு ஏற்பட்டு வருகிறது. இதனால் பட்டையை யொட்டிய பகுதிகளில் கூடுதலாக அரிப்பு ஏற்பட்டு கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரியும்படியாக இருக்கிறது. இந்த விரிசல் நாளடைவில் பெரிதாக வாய்ப்பு உள்ளது.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தி பேராபத்து ஏற்படும் முன்பாக அதனை சரிசெய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    Next Story
    ×