search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுரண்டை"

    • வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை மாரியப்பன்அவதூறாக பேசி உள்ளார்.
    • இளம் பெண் வீட்டுக்குள் இருந்தபடியே தனது உறவினர்களுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார்.

    நெல்லை:

    ஆலங்குளம் அருகே உள்ள கல்லூத்து வடக்கு தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். தொழிலாளி. இவர் சம்பவத்தன்று வி.கே.புதூர் பகுதியில் தனியாக வீட்டில் இருந்த திருமணமான ஒரு இளம்பெண்ணை அவதூறாக பேசி உள்ளார்.

    மேலும் ஆட்கள் இல்லாததை அறிந்த அவர் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து, கதவை தட்டி உள்ளார். அந்த இளம் பெண்ணிடம் பாலியல் ரீதியாக அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

    உடனே அந்த பெண், வீட்டுக்குள் இருந்தபடியே தனது உறவினர்களுக்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் அங்கு உறவினர்கள் விரைந்து வந்தனர்.

    வழக்கு

    அதனை பார்த்த மாரியப்பன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது தொடர்பாக பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரில் வி.கே.புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரியப்பனை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • கோவிலில் புகுந்த மர்ம நபர் கேட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளார்.
    • திருட்டில் ஈடுபட்டது அருணாசலம் என்பது விசாரணையில் தெரியவந்தது.

    நெல்லை:

    சுரண்டை அருகே உள்ள குலையநேரியில் சூரி முத்தாரம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று புகுந்த மர்ம நபர் ஒருவர் கேட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளார். பின்னர் அங்கு இருந்த சில்வர் உண்டியலை பெயர்த்து எடுத்து தூக்கி சென்றுவிட்டார்.

    சிறிது நேரம் கழித்து கோவில் பூசாரி சென்று பார்த்தபோது அங்கு உண்டியல் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் சுரண்ைட போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து பார்த்தபோது அதில் மர்ம நபர் ஒருவர் உண்டியலை தூக்கி சென்ற காட்சி பதிவாகி இருந்தது.

    தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது அதே ஊரில் வடக்கு தெருவில் வசிக்கும் அருணாசலம் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து உண்டியலை பறிமுதல் செய்தனர்.

    • குரோசா -2023 கலைத்திறன் போட்டியில் 40-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சார்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
    • ஹிவஸ்திகா, சாதனா ஹரிணி ஆகியோர் ஜோடி நடனத்தில் 2-ம் இடம் பெற்றனர்.

    சுரண்டை:

    தூத்துக்குடி ஹோலிகிராஸ் பள்ளியில் குரோசா -2023 கலைத்திறன் போட்டி நடைபெற்றது. இதில் அழகர் பப்ளிக், பாரத் வித்யாமந்திர், கீதா மெட்ரிக், குட் ஷெப்பெர்டு, ஹோலிகிராஸ், எஸ்.ஆர். ஸ்கூல் ஆப் எக்சலன்ஸ் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சார்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்த கலைத்திறன் போட்டியில் எஸ்.ஆர்.ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் சிவ டமோக்னஸ் ராஜேந்திரா குழுவினர் மேற்கத்திய நடனத்தில் முதலிடம் பெற்றனர். மேலும் இதே பள்ளியை சார்ந்த ஹிவஸ்திகா, சாதனா ஹரிணி ஆகியோர் ஜோடி நடனத்தில் 2-ம் இடம் பெற்றனர்.

    கணக்கதேஜஸ், சுபநந்தன் ஆகியோர் கணிதப்புதிர் போட்டியில் 3-வது இடம் பெற்றனர். குரோசா கலைத்திறன் போட்டியில் ஜீனியர் பிரிவில் எஸ்.ஆர். பள்ளி மாணவ, மாணவிகள் 3-வது இடம் பெற்றுச் சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற அணியினரை குழல்வாய்மொழி அம்மாள் சிவன் நாடார் அறக்கட்டளை நிறுவனத்தின் நிறுவனர் சிவ பபிஸ்ராம், பள்ளி செயலர் சிவ டிப்ஜினிஸ் ராம், முதல்வர் பொன் மனோன்யா மற்றும் தலைமை ஆசிரியர் மாரிக்கனி ஆகியோர் பாராட்டினர்.

    • நெல்லை ஷிபா மருத்துவமனை டாக்டர்கள் கலந்துகொண்டு பொது மருத்துவம், மகளிர்நலம் ஆகியவற்றிற்கு சிகிச்சை அளித்தனர்.
    • தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவ பத்மநாதன் பாண்டியனார் நூலகத்தை திறந்து வைத்தார்.

    சுரண்டை:

    சுரண்டை நாடார் வாலிபர் சங்கம் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா, சங்க ஆண்டு விழா, பாண்டியனார் நூலக திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழா சிவகுருநாதபுரம் காமராஜர் அரங்கத்தில் நடந்தது.

    நாடார் வாலிபர் சங்க கவுரவ தலைவர் எஸ்.வி.கணேசன் தலைமை தாங்கினார். சிவகுருநாதபுரம் இந்து நாடார் உறவின்முறை மகமை கமிட்டி டிரஸ்ட் நாட்டாண்மை எஸ்.தங்கையா நாடார் மற்றும் ஊர் கமிட்டி நிர்வாகிகள், முன்னாள் சங்க தலைவர்கள் வி.கே.எஸ். பன்னீர்செல்வம், வி.கே.ரத்தினநாடார், காமராஜர் வணிக வளாக வியாபாரிகள் சங்க தலைவர் ஏ.கே.எஸ் சேர்மசெல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க தலைவர் அண்ணாமலை கனி அனைவரையும் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளர்களாக தென்காசி எம்.எல்.ஏ. பழனி நாடார், சுரண்டை பொன்ரா மருத்துவமனை டாக்டர் பொன்ராஜ், நெல்லை ஷிபா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் எம்.கே.எம்.முகம்மது ஷாபி ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடந்த மருத்துவ முகாமை பொன்ரா மருத்துவமனை டாக்டர் பொ.காசிராணி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

    நெல்லை ஷிபா மருத்துவமனை டாக்டர்கள் கலந்துகொண்டு பொது மருத்துவம், மகளிர்நலம் ஆகியவற்றிற்கு சிகிச்சை அளித்தனர். பாண்டியனார் நூலகத்தை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவ பத்மநாதன் பாண்டியனார் நூலகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து மாணவ-மாணவிகள், முதியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    முன்னதாக சிவகுருநாதபுரம் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு அங்கிருந்து விழா நடக்கும் காமராஜர் அரங்கத்திற்கு ஊர்வலம் நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை எஸ்.முருகன், துணைச் செயலாளர் கே.டி.பாலன், பொருளாளர் டி.ரவி, நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் ஆர்.வி.ராமர், சி.எம்.சங்கரேஸ்வரன் உட்பட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • மாணிக்கம் மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.
    • கடந்த 4 ஆண்டுகளாக மாணிக்கம் தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

    நெல்லை:

    சுரண்டை அருகே உள்ள கடையாலுருட்டி அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் மாணிக்கம்(வயது 65). இவர் மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சம்பவத்தன்று அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து சேர்ந்தமரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் அவர் கடந்த 4 ஆண்டுகளாக தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பார்த்தும் குணமாகாததால் அவர் வாழ்வில் வெறுப்படைந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தொடர்ந்து இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

    • நிகழ்ச்சியின்போது நீர் நிலைகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
    • பொதுமக்களிடம் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    சுரண்டை:

    சுரண்டையில் நகராட்சி சேர்மன் வள்ளிமுருகன் அறிவுறுத்தலின் பேரில் கமிஷனர் உத்தரவின்படி நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் கூட்டு துப்புரவு பணி, நீர் நிலைகளை சுத்தம் செய்தல், கட்டிட இடிபாடு கழிவுகளை அகற்றுதல், அனுமதி இன்றி வைக்கபட்ட பேனர்கள், போஸ்டர்களை அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் பொதுமக்களிடம் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர், சுகாதார மேற்பார்வையாளர்கள், தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் டெங்கு தடுப்பு பணியாளர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவரும் தூய்மை இயக்க உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.

    • கண் பரிசோதனை முகாமில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
    • முகாமில் கலந்து கொண்டவர்களில் தேவைபட்டோருக்கு மேல் சிகிச்சைக்கான ஏற்பாடு செய்யப்பட்டது.

    சுரண்டை:

    சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளி முருகன் மற்றும் தென்காசி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கத்தின் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் சுரண்டையில் நடைபெற்றது. நகராட்சி சேர்மன் வள்ளி முருகன் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் முரளி ராஜா, நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமை பழனிநாடார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இதில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு தேவைபட்டோருக்கு மேல் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    முகாமில் சுரண்டை நகர தி.மு.க. செயலாளர் ஜெயபாலன், வியாபாரி சங்கத் தலைவர் காமராஜ், வத்தல் வியாபாரி சங்க பொறுப்பாளர் ரத்தினசாமி, காமராஜர் தினசரி மார்க்கெட் வியாபாரி சங்கத் தலைவர் சேர்மசெல்வன், நகர காங்கிரஸ் பிரதிநிதி சமுத்திரம், கவுன்சிலர்கள் அமுதா சந்திரன், ராஜ்குமார், வேல்முத்து, பூபதி செல்லத்துரை, ஜெயராணி வள்ளி முருகன், கல்பனா அன்னபிரகாசம், உஷா பிரபு, செல்வி, ரமேஷ், சாந்தி பட்டு முத்து, மாரியப்பன், காங்கிரஸ் நிர்வாகிகள் பால் என்ற சண்முகவேல், தெய்வேந்திரன், பிரபாகர், பிரபு, கந்தையா, மகேஷ், கஸ்பா செல்வம், அரசு ஒப்பந்தக்காரர் சண்முகராஜ், ஆட்டோ செல்வராஜ், அய்யப்பன், பாலகணேஷ்சங்கர், மகேந்திரன், மாரிச்செல்வம், பிரபாகரன், ராஜன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • ஒவ்வொரு நாளும் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடை பெற்றது.
    • அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன், பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    சுரண்டை:

    சுரண்டை ஸ்ரீஅழகு பார்வதி அம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழா 10 நாட்கள் விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

    இந்தாண்டு திருவிழா

    இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 2-ந் தேதி தொடங்கியது. முதல் மண்டகப்படி ஜமீன் தாரால் நடத்தப்பட்டது. 2-வது மண்டகப்படி தேவர் சமுதாயத்திற்கும், 3-ம் நாள் மண்டகப்படி செட்டியார் மற்றும் பிள்ளைமார் சமூகத்தினர் சார்பில் நடத்தப்பட்டது. 4-ம் மண்டக படி நாடார் சமுதாயத்திற்குரியவர்களா லும், 5-வது மண்டகப்படி சேனைத் தலைவர், முதலியார் சமுதாயத்தினர் சார்பிலும் நடத்தப்பட்டது.

    6-ம் நாள் மண்டகப்படி படையாட்சி சமுதா யத்தினர், 7-ம் மண்டகப்படி கோட்டைத்தெரு தேவர் சமுதா யத்தினர் மண்டகபடி யாகவும், 8-ம் நாள் அனை த்து சமுதாயம் சார்பில் கொண்டா டப்பட்டது.

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமுதாயம் சார்பில் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றது.

    தேர்த்திருவிழா

    நேற்று 9-ம் நாள் சிகர நிகழ்ச்சியான தேர்த் திருவிழா நடந்தது. மாலை 4 மணிக்கு அலங்கரிக்க ப்பட்ட தேரில் அழகு பார்வதி அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    கோவில் வளாகத்தில் இருந்து புறப்பட்டு கோட்டைத் தெரு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வழியாக சுரண்டை நகராட்சி அலுவலகம் அரு கில் வந்தடைந்து. பின்பு அங்கிருந்து புறப்பட்டு கோவில் வளாத்திற்கு வந்தது.

    இன்று 10-வது நாள் சப்தாவரண நிகழ்ச்சி விஸ்வகர்மா சமுதாயம் சார்பில் நடக் கிறது. விழா ஏற்பாடுகளை அனைத்து சமுதாய விழா கமிட்டியினர் செய்துள்ளனர்.

    • ஸ்ரீஅழகு பார்வதி அம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழா கடந்த 2-ந் தேதி தொடங்கியது.
    • 9-ம் நாள் திருநாளான இன்று பிற்பகல் 3 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

    சுரண்டை:

    சுரண்டை ஸ்ரீஅழகு பார்வதி அம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழா 10 நாட்கள் விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 2-ந் தேதி தொடங்கியது. முதல் மண்டகப்படி ஜமீன் தாரால் நடத்தப்பட்டது. 2-வது மண்டகப்படி தேவர் சமுதாயத்திற்கும், 3-ம் நாள் மண்டகப்படி செட்டியார் மற்றும் பிள்ளைமார் சமூகத்தினர் சார்பில் நடத்தப்பட்டது. 4-ம் மண்டக படி நாடார் சமுதாயத்திற்குரி யவர்களாலும், 5-வது மண்டகப்படி சேனைத் தலைவர், முதலியார் சமுதாயத்தினர் சார்பிலும் நடத்தப்பட்டது.

    6-ம் நாள் மண்டகப்படி படையாட்சி சமுதாயத்தினர், 7-ம் மண்டகப்படி கோட்டைத்தெரு தேவர் சமுதாயத்தினர் மண்டகபடியாகவும், 8-ம் நாள் அனைத்து சமுதாயம் சார்பில் கொண்டாடப்பட்டது. நேற்று முளைப்பாரி தீச்சட்டி, ஆயிரம் பானை உருவம் மற்றும் மாவிளக்கு எடுத்து அம்மனை வழிபட்டனர். அப்போது தங்கள் பிரச்சினைகளை தீர்க்க கூறி அம்மனை மனம் உருகி வணங்கினர்.

    இதனால் அம்மனுக்கு பட்டு பரிவட்டங்களை காணிக்கையாக செலுத்தினர்.

    9-ம் நாள் திருநாளான இன்று பிற்பகல் 3 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி சிலம்பாட்டம், செண்டை மேளம் முழங்க தேரோட்டம் நடக்கிறது. அம்மன் ஒய்யாரமான தேரில் எழுந்தருளி பவனி வருகிறார். திருவிழாவை காண திரளான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    தேர்த்திருவிழா மட்டும் இன்றி ஆண்டுதோறும் பல திருவிழாக்கள் இந்த ஆலயத்தில் நடைபெறுகின்றன. தமிழ் மாத கடைசி வெள்ளி விளக்கு பூஜை நடைபெறுகிறது. இதில் சுரண்டை மட்டுமின்றி சுற்றுவட்டார கிராம பெண்கள் கலந்து கொள்கிறார்கள். நாளை (11-ந் தேதி) நிறைவு திருவிழாவாக 10-ம் நாள் மண்டகப்படியாக விஸ்வ பிரம்மா சமுதாயத்தினர்கள் சார்பில் நடக்கிறது.

    • மைதீன் கான் நள்ளிரவு தான் வீட்டுக்கு வருவார் என்று கூறப்படுகிறது.
    • வீராணத்தில் உள்ள ஒரு அலுவலகத்தில் மைதீன்கான் தற்கொலை செய்து கொண்டார்.

    ஆலங்குளம்:

    சுரண்டை அருகே உள்ள வி.கே.புதூரை அடுத்த வீராணம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் காஜா மைதீன். இவரது மகன் மைதீன்கான்

    (வயது 21). இவர் சுரண்டையில் உள்ள ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார்.

    தற்கொலை

    தினமும் கல்லூரிக்கு சென்றுவிட்டு மதியம் வீட்டுக்கு வந்துவிடும் மைதீன் கான், அதன்பின்னர் நண்பர் களுடன் சேர்ந்து வெளியில் சென்று விடுவதாகவும், நள்ளிரவு நேரத்தில் தான் தினமும் வீட்டுக்கு வருவார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று கல்லூரிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய மைதீன்கான், வீராணத்தில் உள்ள ஒரு அலுவலகத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்த வி.கே.புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவுசல்யா மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு தூக்கில் தொங்கி கொண்டிருந்த மைதீன்கான் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • நோன்பு திறப்பு நிகழ்ச்சியை அஹ்மது ஷா தொடங்கி வைத்தார்.
    • நகராட்சி சேர்மன் வள்ளி முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    சுரண்டை:

    சுரண்டை முகைதீன் ஜும்மா பள்ளிவாசலில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியை பேஸ் இமாம் அஹ்மது ஷா 'கிராத்' ஓதி தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளர்களாக பழனிநாடார் எம்.எல்.ஏ., சுரண்டை நகராட்சி சேர்மன் வள்ளி முருகன் ஆகியோர் பங்கேற்றனர். பள்ளிவாசல் செயலாளர் கமாலுதீன் வரவேற்று பேசினார். பள்ளிவாசல் துணை செயலாளர் சாகுல் ஹமீது பாதுஷா நோன்பின் மாண்பு பற்றி பேசி னார். பழனி நாடார் எம்.எல்.ஏ. சிறப்புரையாற்றினார்.

    நகராட்சி சேர்மன் வள்ளி முருகன் நகராட்சி துணைத் தலைவர் சங்கராதேவி முருகேசன், சுரண்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்லப்பா ஆகியோர் உரையாற்றி னார். சுரண்டை எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த தலைவர், செயலாளர், மாவட்ட செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    சுரண்டை முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் தலைவர் சாகுல் ஹமீது இப்தார் விழாவில் கலந்து கொண்ட அனைத்து சமுதாய தலைவர்கள், அதிகாரிகள், எம்.எல்.ஏ., உள்ளாட்சி பிரதிநிதிகள், ரவி பிரஸ் உரிமையாளர் தனபால் ஆகியோர் சுரண்டை முகைதீன் பள்ளி வாசல் பொறுப்பாளர்களால் கவுரவிக்கப் பட்டார்கள்.

    • நேற்று இரவு அம்மனுக்கு சிறப்பு பூஜையும், வழிபாடும் நடைபெற்றது.
    • 9-ம் நாளான இன்று மாலை 3 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.

    சுரண்டை:

    சுரண்டை சிவகுரு நாதபுரம் இந்து நாடார் உறவின்முறை மகமைக்கமிட்டி டிரஸ்ட்டுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ முப்பிடாறி அம்மன் கோவில் பங்குனி திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

    விழா நாட்களில் இரவில் சிறப்பு பட்டிமன்றம், ஆன்மிக சொற்பொழிவு, வில்லிசை, இன்னிசை கச்சேரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 7-ம் நாள் விழாவான நேற்று முன்தினம் இரவு இன்னிசை கச்சேரி, நள்ளிரவு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ஸ்ரீ முப்பிடாறி அம்மன் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்றது. பின்னர் சிவகுருநாதபுரம் காமராஜ் சிலம்பாட்ட குழுவினர் சிலம்பாட்டம் நடந்தது. 8-ம் திருநாளான நேற்று இரவு 7 மணிக்கு வில்லிசை, அம்மனுக்கு சிறப்பு பூஜையும், வழிபாடும் நடைபெற்றது. தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழா நடந்தது.

    விழாவில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் நாளான இன்று மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது. தேரோட்டத்தில் சுரண்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர். தொடர்ந்து மெல்லிசை கச்சேரி நடைபெறும்.

    ×