search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுரண்டையில் இன்று  அழகு பார்வதி அம்மன் கோவில் சித்திரை தேரோட்டம்
    X

    சுரண்டையில் இன்று அழகு பார்வதி அம்மன் கோவில் சித்திரை தேரோட்டம்

    • ஸ்ரீஅழகு பார்வதி அம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழா கடந்த 2-ந் தேதி தொடங்கியது.
    • 9-ம் நாள் திருநாளான இன்று பிற்பகல் 3 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

    சுரண்டை:

    சுரண்டை ஸ்ரீஅழகு பார்வதி அம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழா 10 நாட்கள் விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 2-ந் தேதி தொடங்கியது. முதல் மண்டகப்படி ஜமீன் தாரால் நடத்தப்பட்டது. 2-வது மண்டகப்படி தேவர் சமுதாயத்திற்கும், 3-ம் நாள் மண்டகப்படி செட்டியார் மற்றும் பிள்ளைமார் சமூகத்தினர் சார்பில் நடத்தப்பட்டது. 4-ம் மண்டக படி நாடார் சமுதாயத்திற்குரி யவர்களாலும், 5-வது மண்டகப்படி சேனைத் தலைவர், முதலியார் சமுதாயத்தினர் சார்பிலும் நடத்தப்பட்டது.

    6-ம் நாள் மண்டகப்படி படையாட்சி சமுதாயத்தினர், 7-ம் மண்டகப்படி கோட்டைத்தெரு தேவர் சமுதாயத்தினர் மண்டகபடியாகவும், 8-ம் நாள் அனைத்து சமுதாயம் சார்பில் கொண்டாடப்பட்டது. நேற்று முளைப்பாரி தீச்சட்டி, ஆயிரம் பானை உருவம் மற்றும் மாவிளக்கு எடுத்து அம்மனை வழிபட்டனர். அப்போது தங்கள் பிரச்சினைகளை தீர்க்க கூறி அம்மனை மனம் உருகி வணங்கினர்.

    இதனால் அம்மனுக்கு பட்டு பரிவட்டங்களை காணிக்கையாக செலுத்தினர்.

    9-ம் நாள் திருநாளான இன்று பிற்பகல் 3 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி சிலம்பாட்டம், செண்டை மேளம் முழங்க தேரோட்டம் நடக்கிறது. அம்மன் ஒய்யாரமான தேரில் எழுந்தருளி பவனி வருகிறார். திருவிழாவை காண திரளான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    தேர்த்திருவிழா மட்டும் இன்றி ஆண்டுதோறும் பல திருவிழாக்கள் இந்த ஆலயத்தில் நடைபெறுகின்றன. தமிழ் மாத கடைசி வெள்ளி விளக்கு பூஜை நடைபெறுகிறது. இதில் சுரண்டை மட்டுமின்றி சுற்றுவட்டார கிராம பெண்கள் கலந்து கொள்கிறார்கள். நாளை (11-ந் தேதி) நிறைவு திருவிழாவாக 10-ம் நாள் மண்டகப்படியாக விஸ்வ பிரம்மா சமுதாயத்தினர்கள் சார்பில் நடக்கிறது.

    Next Story
    ×