சுரண்டையில் இலவச கண் பரிசோதனை முகாம்

கண் பரிசோதனை முகாமில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். முகாமில் கலந்து கொண்டவர்களில் தேவைபட்டோருக்கு மேல் சிகிச்சைக்கான ஏற்பாடு செய்யப்பட்டது.
சுரண்டையில் இலவச கண் பரிசோதனை முகாம்
Published on

சுரண்டை:

சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளி முருகன் மற்றும் தென்காசி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கத்தின் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் சுரண்டையில் நடைபெற்றது. நகராட்சி சேர்மன் வள்ளி முருகன் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் முரளி ராஜா, நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமை பழனிநாடார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இதில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு தேவைபட்டோருக்கு மேல் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

முகாமில் சுரண்டை நகர தி.மு.க. செயலாளர் ஜெயபாலன், வியாபாரி சங்கத் தலைவர் காமராஜ், வத்தல் வியாபாரி சங்க பொறுப்பாளர் ரத்தினசாமி, காமராஜர் தினசரி மார்க்கெட் வியாபாரி சங்கத் தலைவர் சேர்மசெல்வன், நகர காங்கிரஸ் பிரதிநிதி சமுத்திரம், கவுன்சிலர்கள் அமுதா சந்திரன், ராஜ்குமார், வேல்முத்து, பூபதி செல்லத்துரை, ஜெயராணி வள்ளி முருகன், கல்பனா அன்னபிரகாசம், உஷா பிரபு, செல்வி, ரமேஷ், சாந்தி பட்டு முத்து, மாரியப்பன், காங்கிரஸ் நிர்வாகிகள் பால் என்ற சண்முகவேல், தெய்வேந்திரன், பிரபாகர், பிரபு, கந்தையா, மகேஷ், கஸ்பா செல்வம், அரசு ஒப்பந்தக்காரர் சண்முகராஜ், ஆட்டோ செல்வராஜ், அய்யப்பன், பாலகணேஷ்சங்கர், மகேந்திரன், மாரிச்செல்வம், பிரபாகரன், ராஜன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com