சுரண்டை அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீற முயற்சி - தப்பி ஓடிய தொழிலாளிக்கு வலைவீச்சு

வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை மாரியப்பன்அவதூறாக பேசி உள்ளார். இளம் பெண் வீட்டுக்குள் இருந்தபடியே தனது உறவினர்களுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார்.
சுரண்டை அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீற முயற்சி - தப்பி ஓடிய தொழிலாளிக்கு வலைவீச்சு
Published on

நெல்லை:

ஆலங்குளம் அருகே உள்ள கல்லூத்து வடக்கு தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். தொழிலாளி. இவர் சம்பவத்தன்று வி.கே.புதூர் பகுதியில் தனியாக வீட்டில் இருந்த திருமணமான ஒரு இளம்பெண்ணை அவதூறாக பேசி உள்ளார்.

மேலும் ஆட்கள் இல்லாததை அறிந்த அவர் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து, கதவை தட்டி உள்ளார். அந்த இளம் பெண்ணிடம் பாலியல் ரீதியாக அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

உடனே அந்த பெண், வீட்டுக்குள் இருந்தபடியே தனது உறவினர்களுக்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் அங்கு உறவினர்கள் விரைந்து வந்தனர்.

வழக்கு

அதனை பார்த்த மாரியப்பன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது தொடர்பாக பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரில் வி.கே.புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரியப்பனை வலைவீசி தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com