search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிலிண்டர்"

    • கோடிக்கணக்கான இல்லத்தரசிகள், சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தி வருகின்றனர்.
    • கேஸ் டியூப் பரிசோதிப்பதற்காக ரூ.230 கட்டணம் என்பதை ரூ.200 ஆக குறைக்க வேண்டும்.

    பல்லடம் :

    பல்லடம் தாலுகா நுகர்வோர் விழிப்புணர்வு இயக்க தலைவர் மணிக்குமார் திருப்பூர் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாவட்டத்தில் கோடிக்கணக்கான இல்லத்தரசிகள், சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு கூடுதல் தொகை வசூலிப்பதாக புகார்கள் வருகிறது.

    எனவே திருப்பூர் மாவட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு கூடுதல் தொகை வசூலிப்பதை தடுக்க வேண்டும். சிலிண்டர் ஏற்றி வரும் வாகனங்களில் சம்பந்தப்பட்ட ஏஜென்சியின் பெயர் எழுதப்பட்டிருக்க வேண்டும். இருசக்கர வாகனங்களில் சிலிண்டர் எடுத்துச் செல்லக்கூடாது. 5 வருடங்களுக்கு ஒருமுறை சிலிண்டர் வால்வு, கேஸ் டியூப் பரிசோதிப்பதற்காக ரூ.230 கட்டணம் என்பதை ரூ.200 ஆக குறைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • இந்தியன் ஆயில் நிறுவனம் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும் வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடையிலும், சமையல் கியாஸ் சிலிண்டர்களை விற்பனை செய்கிறது.
    • தொழிலாளர்கள் தாங்கள் வசிக்கும் நகரங்களில் முகவரி சான்று இல்லாததால் சிலிண்டர் இணைப்பு பெற சிரமப்பட்டனர்.

    திருப்பூர் :

    பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில் நிறுவனம் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும் வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடையிலும், சமையல் கியாஸ் சிலிண்டர்களை விற்பனை செய்கிறது. இந்த இரு பிரிவுகளிலும் சிலிண்டர் இணைப்பு பெற கியாஸ் ஏஜென்சிகளில் ஆதார் எண் ,முகவரி சான்று ஆகிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இதனிடையே திருப்பூர், சென்னை ,கோவை போன்ற ஊர்களுக்கு வேலைக்காக இடம் பெயரும் தொழிலாளர்கள் தாங்கள் வசிக்கும் நகரங்களில் முகவரி சான்று இல்லாததால் சிலிண்டர் இணைப்பு பெற சிரமப்பட்டனர். அதே போல் வெளிமாநில தொழிலாளர்கள், தள்ளுவண்டி வியாபாரிகள் போன்றவர்களின் வசதிக்காக இந்தியன் ஆயிலுடன் இணைந்து மினி சிலிண்டர் ரேஷன் கடைகளில் விற்க கூட்டுறவுத்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டது.

    முதல் கட்டமாக திருப்பூர் அரண்மனைபுதூர் பகுதியில் உள்ள தெற்கு நியாய விலை கடையில் இந்தத் திட்டமானது இன்று துவங்கப்பட்டது. இரண்டு கிலோ, ஐந்து கிலோக்களில் , இந்த சிலிண்டர்கள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளதாகவும் வெளி மாவட்டம் மற்றும் மாநில தொழிலாளர்களின் வசதிக்காக இத்திட்டம் அறிமுகப்படுத்தியு ள்ளதாகவும் தெரிவித்தனர். ஆதார் கார்டு அல்லது அவர்களது விலாசம் குறித்து ஏதோ ஒரு ஆவணத்தை காண்பித்து சிலிண்டர்களை பெற்று செல்லலாம் . தற்போது திருப்பூர் நகரில் முதல் முறையாக இத்திட்டமானது இக்கடையில் அறிமுகப்ப டுத்தப்ப ட்டுள்ளதாகவும் , இதன் வரவேற்பு பொறுத்து விரைவில் ஒவ்வொரு நியாய விலை கடைகளிலும் இத்திட்டம் நடைமுறைக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
    • ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

    கும்பகோணம்:

    திருப்பனந்தாள் அருகே சோழபுரம் கடைவீதியில் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை உயர்ந்து தற்போது 1100 ரூபாயைத் தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

    இதனால் ஏழை, நடுத்தர குடும்பங்கள் பொருளாதார ரீதியாக தத்தளித்து வருகின்றனர்.

    சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

    இந்நிலையில் சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை திரும்பப் பெற கோரியும் சிலிண்டருக்கு மாலை அணிவித்து மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜீவா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு அரியலூர் மாவட்ட தலைவி மாரியம்மாள், மாவட்ட துணைத்தலைவி லதா மகேஸ்வரி, நகரத் தலைவி செல்வி, திருவிடைமருதூர் வட்டாரத் தலைவி ஆர்கனைஸ் மேரி, மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

    • குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
    • ரூ.15 அதிகமாக பெற்றது நேர்மையற்ற வணிக நடைமுறை

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலை அடுத்த வட்டகரையை சேர்ந்தவர் மேரி புஷ்பராணி.

    இவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் கியாஸ் நிறுவனத்திடம் கியாஸ் சிலிண்டர் முன் பதிவு செய்திருந்தார். இதற்காக கொடுத்த கட்டண ரசீதில் சிலிண்டரின் விலை ரூ.969 மற்றும் ரூ.15 ஆக மொத்தம் ரூ.984 என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    ஆனால் சிலிண்டரின் விலை, வரிகள் உள்பட சேர்த்து ரூ.969 மட்டுமே. எனவே ரூ.15 அதிகமாக பெற்றது நேர்மையற்ற வணிக நடைமுறை என அவர் நிறுவனத்திடம் கூறினார். மேலும் தன்னிடம் கூடுதலாக வாங்கிய ரூ.15-ஐ திருப்பி தர வேண்டுமென்று கியாஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் நிறுவனத்திடம் மேரி புஷ்பராணி கேட்டார்.

    அதோடு பல நுகர்வோர் குறைதீர்க்கும் அரசு அமைப்புகளிடமும் இது குறித்து புகார் செய்தார். மேலும் வக்கீல் மூலம் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன் பின்னரும் அவருக்கு உரிய பதில் கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மேரி புஷ்பராணி குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கை நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் விசாரித்தனர்.

    இதைத் தொடர்ந்து கியாஸ் நிறுவனத்தின் சேவை குறைப்பாட்டினை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட மேரி புஷ்பராணிக்கு நஷ்ட ஈடு (அபராதம்) ரூ.7500 வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது. மேலும் மேரி புஷ்பராணியிடம் கூடுத லாக வசூலிக்கப்பட்ட ரூ.15 மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.2,500 என மொத்தம் ரூ.10,015-ஐ ஒரு மாத காலத்துக்குள் வழங்க வேண்டும் என்றும் உத்தர விடப்பட்டது.

    • மதுரையில் 2 இடங்களில் சிலிண்டர் வெடித்தது.
    • பாலசுப்பி ரமணியன். பேக்கரி கடை நடத்தி வருகிறார்.

    மதுரை

    மதுரை சுப்பிரமணிய புரம், 3-வது தெருவை சேர்ந்தவர் பாலசுப்பி ரமணியன். பேக்கரி கடை நடத்தி வருகிறார்.

    பேக்கரி ஊழியர்கள் இன்று காலை சிலிண்டரை மாற்றும்போது எதிர்பாராத விதமாக கியாஸ் கசிவு ஏற்பட்டு தீ பிடித்தது. இது குறித்து திடீர்நகர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.வீரர்கள் விரைந்து வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    இதேபோன்று கோமதி புரம், பாரதி தெரு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கியாஸ் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. தல்லாகுளம் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இது குறித்து அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    இதில் குமார் என்பவர் அங்கு வீடு கட்டி கிரகபிரவேசம் நடத்தினார். மதிய உணவு விருந்துக்கு, அப்பளம் பொறித்து கொண்டிருந்தனர். சிலிண்டரின் ரெகு லேட்டரில் கியாஸ் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது தெரியவந்தது.

    மதுரையில் இன்று ஒரே நாளில் 2 இடங்களில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஈரோடு மாவட்டத்தில் இருந்தும் ஏராளமான போலீசார் இங்கு வரவழைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
    • பாரதீய ஜனதா அலுவலகம் மற்றும் நிர்வாகிகள் வீடுகள் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டு கோவையில் பதட்டம் ஏற்பட்டது.

    கோவை மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள தெருவில் பிரசித்தி பெற்ற கோட்டை ஈஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவிலை மையமாக வைத்து இந்த தெருவும் ஈஸ்வரன் கோவில் வீதி என்றே அழைக்கப்படுகிறது.

    இன்று அதிகாலை 4.10 மணிக்கு இந்த வீதியில் நுழைந்த ஒரு கார் கோவில் வழியாக சென்றது. கோவில் முன்புள்ள வேகத்தடையில் ஏறி இறங்கியபோது திடீரென கார் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

    சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது கார் 2 துண்டாக உடைந்து கிடந்தது. மேலும் காரில் தீ மளமளவென பற்றி எரிந்தது. அருகில் செல்ல முடியாதவாறு தீப்பற்றி எரிந்ததால் பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது காருக்குள் ஒருவர் உடல் கருகி இறந்து கிடந்தார். அங்கு உக்கடம் போலீசாரும் விரைந்து வந்தனர்.

    அவர்கள் அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டனர். உடல் கருகி இறந்து கிடந்தவரின் பிணத்தை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தீப்பிடித்து எரிந்த காரில் 2 சிலிண்டர்கள் இருந்தது. அந்த 2 சிலிண்டர்களும் கருகிய நிலையில் காணப்பட்டன.

    பலியான நபர் காரில் சிலிண்டர்களை எடுத்துச் சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது. 2 சிலிண்டர்களும் ஒன்றோடு ஒன்று உரசியதில் கியாஸ் கசிவு ஏற்பட்டு கார் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.

    கார் பற்றி விசாரித்தபோது அந்த கார் சென்னை பதிவெண்ணை கொண்டு இருந்தது. கார் யாருக்கு சொந்தமானது என்பது பற்றி விசாரித்தபோது அது பொள்ளாச்சியைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில்தான் இறந்தவர் யார்? என்ற விவரம் தெரியவரும்.

    விபத்து ஏற்பட்ட இடம் முக்கியமான சாலை கிடையாது. அப்படி இருக்கும்போது கார் அந்த வழியாகச் சென்றது ஏன் என்பது மர்மமாகவே உள்ளது. மேலும் கோவில் முன்பு கார் வெடித்தது பற்றி இந்து அமைப்பினர் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். இது விபத்தா? அல்லது சதி செயலா? எனவும் அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

    இதனால் கோவையில் கார் வெடித்த சம்பவம் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து விபத்து நடந்த கோவில் பகுதிக்கு யாரும் செல்லாதவாறு போலீசார் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் மாவட்டம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் இருந்தும் ஏராளமான போலீசார் இங்கு வரவழைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    கோவில் முன்பு கார் வெடித்து கோவையில் பதட்டமான நிலை ஏற்பட்டதால் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனை போனில் தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டறிந்தார்.

    தொடர்ந்து கோவைக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, சட்ட ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன், உளவுத்துறை டிஜிபி டேவிட்சன் ஆகியோர் விரைந்துள்ளனர். இவர்கள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.

    இதையடுத்து, சம்பவ இடத்தை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சம்பவம் பற்றி கேட்டபோது அவர் கூறியதாவது:-

    சிலிண்டர் வெடித்ததால் தான் கார் தீப்பிடித்து எரிந்துள்ளது என்பதை உறுதி செய்துள்ளோம். காரில் கொண்டு செல்லப்பட்ட சிலிண்டர்கள் எப்படி வெடித்தது? என்பது பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.

    உயிரிழந்த நபர் யார்? என்பது தெரியவில்லை. அவரை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. அவர் எதற்காக இந்த சாலைக்கு வந்தார்? என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது. உயிரிழந்த நபர் அடையாளம் காணப்பட்டால் அதற்கான விடைகள் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சமீபத்தில் பாரதீய ஜனதா அலுவலகம் மற்றும் நிர்வாகிகள் வீடுகள் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டு கோவையில் பதட்டம் ஏற்பட்டது. அந்த பதட்டம் ஓய்வதற்குள் தற்போது கோவில் முன்பு கார் வெடித்து ஒருவர் பலியான சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • சிலிண்டர் வெடித்து தீப்பிடித்து எரிந்ததில் ஊழியர்கள் அலறியடுத்து தீ காயங்களுடன் வெளியே ஓடினர்.
    • தீ விபத்து ஏற்பட்டதற்கு என்ன காரணம்? என்பது குறித்து ஒரகடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த தேவரியம்பாக்கம் பகுதியில் தனியார் கியாஸ் சிலிண்டர் குடோன் உள்ளது. இங்கு வீட்டுக்கு பயன்படுத்தும் கியாஸ் சிலிண்டர்கள் வைக்கப்பட்டுள்ளது. சிலிண்டரில் ஏற்பட்ட கசிவின் காரணமாக நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    தீ விபத்தால் சிலிண்டர் வெடிக்க தொடங்கியது. சிலிண்டர் வெடித்து தீப்பிடித்து எரிந்ததில் ஊழியர்கள் அலறியடுத்து தீ காயங்களுடன் வெளியே ஓடினர். கியாஸ் சிலிண்டர் குடோனில் ஏற்பட்ட தீ அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்கும் பரவ தொடங்கியது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த விபத்தில் அங்கு இருந்த பூஜா (வயது 19), கிஷோர் (13), கோகுல் (22) உள்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் ஏற்பட்டவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத் பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டது. இந்த தீ விபத்தால் அந்த பகுதியில் கரும்புகை சூழ்ந்தது. சம்பவ இடத்திற்கு சென்ற ஒரகடம் போலீசார் இந்த சிலிண்டர் குடோன் அனுமதியுடன் நடத்தப்படுகிறதா? இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கு என்ன காரணம்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர், வருவாய் ஆர்.டி.ஓ. கனிமொழி, உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ. க.சுந்தர் காஞ்சிபுரம் எம்.பி. செல்வம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளை மேற்பார்வையிட்டனர்.

    சம்பவ இடத்திற்கு காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, வடக்கு மண்டல ஐ.ஜி. தேன்மொழி ஆகியோர் வந்து மீட்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    • சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் உடனே வந்து தீயை மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டுவந்தார்கள்.
    • டிபன் கடைக்கு எதிரே பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது.

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே கல்லடிமாமூடு பகுதியில் சாலையோர டிபன்கடை நடத்தி வருபவர் ஜாண். இவர் அதே பகுதியில் வசித்து வருகிறார். தினமும் காலை, மாலை வேளைகளில் டிபன் விற்பனை செய்துவந்தார். இரவு 10 மணிவரை தினமும் கடை திறந்து இருக்கும். இதன் எதிரே பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது.

    நேற்று மாலை டிபன் கடை நடத்தி கொண்டு இருக்கும்போது கியாஸ் சிலிண்டரில் இருந்து திடீரென கியாஸ் கசிந்து தீ பிடித்தது. இதில் கடைமுழுவதும் தீயில் கருகியது. அங்கு உணவு சாப்பிட்டு கொண்டு இருந்தவர்கள் அலறி அடித்து கொண்டு ஓடினார்கள். அந்த பகுதி பொதுமக்களும், ரோட்டில் நடந்து சென்றவர்களும் தீயை அணைக்கும் முயற்சியில் உடனே குலசேகரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் உடனே வந்து தீயை மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டுவந்தார்கள். டிபன் கடையின் மேற்கூரை இரும்பு தகடுகளால் மாட்டப்பட்டு இருந்தது இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இது அந்த பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்படுத்தியது.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, மாவட்ட கலெக்டர் அரவிந்த் தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரண நிதி
    • 7 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சுப்பையா பரிதாபமாக இறந்தார்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பெரு விளை பகுதியை சேர்ந்த வர் சபிக் (வயது 37).

    இவர் பார்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ் டீக்கடை நடத்தி வருகிறார். கடையில் தூத்துக்குடி நடுத்தெருவை சேர்ந்த மூசா(வயது 47) என்பவர் வடை மாஸ்டராக வேலை பார்த்தார்.

    வடசேரி பெரிய ராசிங்கன் தெருவை சேர்ந்த சேகர்(52), வெட்டூர்ணி மடத்தை சேர்ந்த பிரவீன் (25) ஆகியோரும் கடையில் வேலை செய்தனர். கடந்த 17-ந் தேதி கடையில் வடை தயார்செய்யும் வேலையில் மூசா ஈடுபட்டார்.

    இதற்காக அடுப்பை பற்ற வைத்தபோது கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு, தீ பிடித்தது. அப்போது சிலிண்டரும் வெடித்தது.

    இந்த விபத்தில் கடை ஊழியர்கள் மூசா, சேகர், பிரவீன் மற்றும் பொது மக்களான கட்டுப்புதூர் சுசீலா(50), தக்கலை சசிதரன்(63), முத்தலாகுறிச்சி சுதா(43), நெய்யூர் பக்ரு தீன்(35),வாத்தியார் விளை சுப்பையா (66) உள்ளிட்ட 8 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, மாவட்ட கலெக்டர் அரவிந்த் தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரண நிதி வழங்கினார்.

    இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த தக்கலை சசிதரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இருந்தார். மற்ற 7 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சுப்பையா பரிதாபமாக இறந்தார். இதையடுத்து சிலிண்டர் வெடித்ததில் பலியானோர் எண்ணிக்கை 2-ஆக உயர்ந்து உள்ளது.

    • அதிக விலைக்கு சிலிண்டர் விற்ற தனியார் கியாஸ் ஏஜென்சிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு விட்டது.
    • கேஸ் கம்பெனியின் அதிக வசூல், குறித்து வாடிக்கையாளர் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டியைச் சேர்ந்தவர் சசிகலா. இவர் கடந்த ஆண்டு 2019 மே 6-ந் தேதி சமையல் கேஸ் சிலிண்டர் ரீபிள் கேட்டு, நாமக்கல்லில் உள்ள தனியார் கேஸ் ஏஜென்சியில் பதிவு செய்தார். கேஸ் ஏஜன்சியினர் சசிகலா பெயரில் ரசீது போட்டு கட்டணம் ரூ.746 என பதிவு செய்துள்ளனர்.

    மே 11-ந் தேதி கேஸ் கம்பெனியினர் சமையல் கேஸ் சிலிண்டரை சசிகலாவின் வீட்டிற்கு கொண்டு வந்து விநியோக புத்தகத்தை வாங்கி கையெழுத்திட்டு, கேஸ் சிலிண்டருக்கு ரூ.800 கட்டணம் கேட்டுள்ளனர். வாடிக்கையாளர் சசிகலா ரசீதில் ரூ.746 என்று தான் உள்ளது. அதை மட்டுமே தருவேன் என்று கூறவே, பணியாளர் ரூ.800 கொடுத்தால் தான் சிலிண்டர் தரமுடியும், இல்லையெனில் நான் திருப்பி எடுத்துப் போகிறேன் என்று கூறிவிட்டு சிலிண்டரை எடுத்துச் சென்றுவிட்டார்.

    கேஸ் கம்பெனியின் இத்தகைய அதிக வசூல், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்படி சேவைக்குறைபாடு மற்றும் நேர்மையற்ற வணிக முறையாகும் என சசிகாலா நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். மாவட்ட நுகர்வோர் கோர்ட் நீதிபதி தமிழ்ச்செல்வி, உறுப்பினர்கள் முத்துக்குமார், ரத்தினசாமி ஆகியோர் வழக்கை விசாரித்தனர்.

    விசாரணை முடிவில், வாடிக்கையாளருக்கு பில் விலையிலேயே கேஸ் சிலிண்டரை விநியோகம் செய்ய கோர்ட் உத்திரவிட்டது. மேலும், சசிகலாக்கு கேஸ் ஏஜென்சி ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்கவும், மனஉளைச்சல் இழப்பீடாக ரூ.5 ஆயிரம், வழக்கின் செலவுத் தொகை ரூ.5 ஆயிரம் மற்றும் நல நிதிக்கு ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை 2 மாதத்தில் நிறைவேற்றா விட்டால் சசிகலாக்கு 9 சதவீத வட்டியுடன் வழங்கவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் சசிகலாவுக்கு ஆதரவாக தமிழ்நாடு பயனீட்டாளர் சங்க செயலாளர் சுப்பராயன் கோர்ட்டில் ஆஜராகி வாதிட்டார்.

    ×