search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் டீக்கடையில் சிலிண்டர் வெடித்த விபத்து - சிகிச்சையில் இருந்த மேலும் ஒருவர் சாவு - பலியானோர் எண்ணிக்கை 2 ஆனது
    X

    நாகர்கோவில் டீக்கடையில் சிலிண்டர் வெடித்த விபத்து - சிகிச்சையில் இருந்த மேலும் ஒருவர் சாவு - பலியானோர் எண்ணிக்கை 2 ஆனது

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, மாவட்ட கலெக்டர் அரவிந்த் தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரண நிதி
    • 7 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சுப்பையா பரிதாபமாக இறந்தார்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பெரு விளை பகுதியை சேர்ந்த வர் சபிக் (வயது 37).

    இவர் பார்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ் டீக்கடை நடத்தி வருகிறார். கடையில் தூத்துக்குடி நடுத்தெருவை சேர்ந்த மூசா(வயது 47) என்பவர் வடை மாஸ்டராக வேலை பார்த்தார்.

    வடசேரி பெரிய ராசிங்கன் தெருவை சேர்ந்த சேகர்(52), வெட்டூர்ணி மடத்தை சேர்ந்த பிரவீன் (25) ஆகியோரும் கடையில் வேலை செய்தனர். கடந்த 17-ந் தேதி கடையில் வடை தயார்செய்யும் வேலையில் மூசா ஈடுபட்டார்.

    இதற்காக அடுப்பை பற்ற வைத்தபோது கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு, தீ பிடித்தது. அப்போது சிலிண்டரும் வெடித்தது.

    இந்த விபத்தில் கடை ஊழியர்கள் மூசா, சேகர், பிரவீன் மற்றும் பொது மக்களான கட்டுப்புதூர் சுசீலா(50), தக்கலை சசிதரன்(63), முத்தலாகுறிச்சி சுதா(43), நெய்யூர் பக்ரு தீன்(35),வாத்தியார் விளை சுப்பையா (66) உள்ளிட்ட 8 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, மாவட்ட கலெக்டர் அரவிந்த் தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரண நிதி வழங்கினார்.

    இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த தக்கலை சசிதரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இருந்தார். மற்ற 7 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சுப்பையா பரிதாபமாக இறந்தார். இதையடுத்து சிலிண்டர் வெடித்ததில் பலியானோர் எண்ணிக்கை 2-ஆக உயர்ந்து உள்ளது.

    Next Story
    ×