search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறை"

    • திருச்சி சிறையில் இருந்த ஜேம்சை ஜாமீனில் எடுக்க அவருடைய மனைவி பாத்திமா பானு எந்த முயற்சி எடுக்கவில்லை.
    • திடீரென ஆரோக்கிய மேரி மற்றும் பாத்திமாபானு இடையே ஜாமீன் எடுப்பது சம்பந்தமாக மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே கழுகுப்புலிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ஜேம்ஸ் (வயது 38). இவரது மனைவி பாத்திமா பானு (35). இந்த தம்பதிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜேம்ஸ்சுக்கும், பாத்திமா பானுவுக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இது குறித்து பாத்திமா பானு பட்டுக்கோட்டை தாலுகா போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜேம்சை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர். திருச்சி சிறையில் இருந்த ஜேம்சை ஜாமீனில் எடுக்க அவருடைய மனைவி பாத்திமா பானு எந்த முயற்சி எடுக்கவில்லை.

    இந்நிலையில் ஜேம்ஸ்சின் தாயார் ஆரோக்கிய மேரி ( 57) தன்னுடைய மகனை ஜாமீனில் எடுக்க முயற்சி செய்து உள்ளார். இதனை கேள்விப்பட்ட பாத்திமா பானு மாமியாரிடம் தன்னுடைய கணவரை ஜாமீனில் எடுக்க வேண்டாம். அவ்வாறு எடுத்தால் அவர் வெளியில் வந்த பிறகு என்னை கொலை செய்து விடுவார் என்று கூறிதடுத்துள்ளார்.

    ஆனால் அதை கேட்காத ஆரோக்கிய மேரி தனது மகனை ஜாமீனில் எடுக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு திடீரென ஆரோக்கிய மேரி மற்றும் பாத்திமாபானு இடையே ஜாமீன் எடுப்பது சம்பந்தமாக மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கோபம் அடைந்த பாத்திமா பானு தன்னுடைய மாமியார் ஆரோக்கியமேரியை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆரோக்கிய மேரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து பாத்திமாபானுவை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இச்சம்பவம் பட்டுக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதனால் பயந்துபோன விஜய குமார் முத்தாண்டிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் முத்தாண்டிக்குப்பத்தை அடுத்த காட்டுக்கூடலூர் மெயின் ரோட்டில் ஒட்டல் நடத்தி வருபவர் விஜய குமார். இவரது ஒட்டலில் கடந்த 9-ந் தேதி 2 பேர் வந்து மாமுல் கேட்டு மிரட்டி னர். பணம் கொடுக்க மறுத்த தால், மறைத்து வைத்தி ருந்த கத்தியை காட்டி கல்லா விலிருந்த பணத்தை எடுத்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்தனர். இத னால் பயந்துபோன விஜய குமார் முத்தாண்டிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து இன்ஸ் பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் விசா ரணை மேற்கொண்டு விருத்தாச்சலம், பெரிய காப்பான்குளம், இளைய ராஜா (எ) சிங்கில் ராயர் (36), மணிவர்மா (42)ஆகி யோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தார்.

    கைது செய்யப்பட்ட இளையாராஜா (எ) சிங்கில் ராயர் மீது நெய்வேலி தெர்மல் போலீஸ் நிலை யத்தில் 2 கொலை முயற்சி வழக்குகளும், முத்தாண்டிக் குப்பம் போலீஸ் நிலை யத்தில் 2 வழிபறி வழக்கு களும் என மொத்தம் 4 வழக்கு கள் இருந்தது. இவரின் தொடர் குற்ற செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் ராஜாராம் பரிந்துரையின் பேரில், மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் 1 ஆண்டு தடுப்பு காவலில் வைக்க ஆணையிட்டார். இதனைத் தொடர்ந்து இளையாராஜா (எ) சிங்கில்ரார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப் பட்டார்.

    இவர் தனது வீட்டின் முன்பு இரு சக்கர வாகனத்தை இரவு நிறுத்திவிட்டு, மறுநாள் காலை பார்த்தபோது காணவில்லை.

    ஜெயங்கொண்டம், நவ.24-

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிவண்ணன் மகன் அருண்பிரசாத் (வயது 28). இவர் தனது வீட்டின் முன்பு இரு சக்கர வாகனத்தை இரவு நிறுத்திவிட்டு, மறுநாள் காலை பார்த்தபோது காணவில்லை.

    இதுகுறித்து அவர் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்ப–திவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில், ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் ஆலோசனையின்படி இந்த வழக்கில், குற்றவாளியை கைது செய்ய ஜெயங்கொண்டம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் விசாரணை செய்தனர்.

    விசாரணையில், சேலம் மாவட்டம், வீராணம் கிராமத்தை சேர்ந்த வீமனூர் தங்கராஜ் மகன் சரவணன்(19), மோட்டூர் கோவிந்தசாமி மகன் கோகுலகண்ணன்(19), கோரத்துப்பட்டி சுப்பிரமணியன் மகன் சந்திரன்(20) ஆகிய 3 பேரும், அருண்பிரசாத்தின் மோட்டார் சைக்கிளை திருடியது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து, ஒரு மோட்டார் சைக்கிள், சுமை ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • தக்கலை அருகே பொதுமக்கள் மடக்கினர்
    • ஓட்டல் கழிவுகளை ஏற்றி வந்த டெம்ேபாவை பறிமுதல் செய்தனர்.

    தக்கலை :

    கேரளாவில் இருந்து இறைச்சி மற்றும் மருத்துவ கழிவுகள் உள்பட பல்வேறு கழிவுகளை, தமிழகத்திற்கு கொண்டு வந்து இங்குள்ள நீர்நிலை கரைகள், சாலை யோரம் கொட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக குமரி மாவட்டம் களியக்காவிளை, தக்கலை உள்ளிட்ட பகுதி களில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதாக பொது மக்கள் குற்றம் சாட்டினர். இதனை தொடர்ந்து கழிவு பொருட்கள் ஏற்றி வரும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன.

    ஆனால் கண்காணிப் பையும் மீறி சில வாகனங்கள் குமரி மாவட்ட எல்லைப் பகுதிக்குள் வந்து கழிவுகளை கொட்டிச் செல்வது நடந்து வருகிறது. ஒரு சில இடங் களில் அந்த வாகனங்களை பொதுமக்கள் சிறைபிடித்து போலீசில் ஓப்படைத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தக்கலை அருகே கோழிப்போர்விளை வழியாக நேற்று இரவு ஒரு டெம்போ வந்தது. அந்த டெம்போவில் இருந்து பயங்கர துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் டெம்போவை பள்ளியாடி செல்லும் சாலையில் மடக்கி சிறை பிடித்தனர்.

    பின்னர் டெம்போவை சோதனையிட்ட போது அதில் கேரளாவில் இருந்து ஓட்டல் கழிவுகள் கொண்டு வந்தது தெரியவந்தது. இது குறித்து தக்கலை போலீசா ருக்கு தகவல் கொடுக்கப் பட்டது. அவர்கள் விரைந்து வந்து, ஓட்டல் கழிவுகளை ஏற்றி வந்த டெம்ேபாவை பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், வாகனத்தை ஓட்டி வந்தது கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (வயது 27) என்பதும், அவர் கோவ ளத்தில் இருந்து உணவு கழிவுகளை கோழிப்போர் விளை பகுதியில் உள்ள பன்றி பண்ணைக்கு கொண்டு வந்ததாகவும் தெரியவந்தது. இது சம்பந்தமாக தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    • திருவெண்ணைநல்லூர் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • ஆனத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தனர்.

    விழுப்புரம்:

    திருவெண்ணை நல்லூர் அருகே உள்ள ஆனத்தூர் கிராமத்தில் நேற்று மாலை திருவெண்ணைநல்லூர் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போ லீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆனத்தூர் காலனியை சேர்ந்த ரவி மகன் ஜான் என்கிற ராஜ் (வயது 19), சென்னை புழல் பகுதியை சேர்ந்த மோகன் மகன் அபினேஷ் (20), சந்திரசேகரன் மகன் சுபாஷ் (22) ஆகிய 3 பேரும் ஆனத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தனர். இதனை கண்ட போலீசார் கஞ்சா விற்ற 3 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்துனர்.அவர்களிடமிருந்த 100 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். 3 வாலிபர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சிறுமிக்கு கட்டாய திருமணம்4 பேருக்கு 22 ஆண்டுகள் சிறை
    • அரியலூர் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு

    அரியலூர்,  

    அரியலூர் மாவட்டம், திருமானூர் அடுத்த குந்தபுரம், காலனித் தெருவைச் சேர்ந்த பழனியாண்டி முருகன் என்பவரின் மகன் ராதாகிருஷ்ணன்(வயது 23).

    இவர், கடந்த 2021-ம் ஆண்டு 11 -ம் வகுப்பு படித்து வந்த 15 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். அதற்கு அச்சிறுமியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ராதா கிருஷ்ணன் ஊர் நாட்ட மைகள் மூலம் பேசி, சிறுமியின் பெற்றோர் விருப்பமில்லாமல் அச்சிறு மியை கட்டாயப்படுத்தி கடந்த 23.5.2021 அன்று திருமணம் செய்து குடும்பம் நடத்தியுள்ளார்.

    இதற்கு ராதாகிருஷ்ணன் பெற்றோர் பழனியாண்டி (55), லதா(45), சகோதரர் பாலச்சந்தர்(25) ஆகியோர் உடந்தையாக இருந்து உள்ளனர்.

    இதுகுறித்து புகாரின் பேரில், அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து மேற்கண்ட 4 பேரையும் கைது செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்து வந்த நீதிபதி செல்வம், 4 பேருக்கும் தலா 22 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து அவர்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞர் ம.ராஜா ஆஜரானார்.

    • பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்து சிறையில் இருந்து வந்தார்.
    • வைத்தியநாதன் மற்றும் சுரேஷ் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப் பட்டது.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த தொரப்பாடியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் மணிகண்டன்(28), திருமணமானவர்.இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட புகாரின்பேரில் பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்து சிறையில் இருந்து வந்தார்.

    சிறையில் இருந்து ஜாமீனில் வந்து மீண்டும் அதே சிறுமியை கடத்தி சென்றதாக புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த 6 மாதங்களாக தேடப்பட்டு வந்தார்.இந்த நிலையில் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டத்தில் ஆய்வு செய்த டி.எஸ்.பி.சபியுல்லா உத்தரவின் பேரில் புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்- இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி, போலீஸ்கா ரர்கள் வைத்திய நாதன் மற்றும் சுரேஷ் ஆகி யோர் கொண்ட தனிப்படை அமைக்கப் பட்டது. தனிப்ப டை போலீசார் கன்னியா குமரி, நாகர் கோவில், திரு வண்ணா மலை ஆகிய இடங்களில் தேடி மணி கண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.மணிகண்டனை கைது செய்த தனிப்படை போலீ சாரை பண்ருட்டி டி.எஸ்.பி. சபியுல்லா பாராட்டினார்.

    • இவரது ஆடுகள் அசூர் கருப்பு கோவில் அருகே மேய்ந்து கொண்டு இருந்தது.
    • அப்போது திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் ஆட்டை திருடி சென்றனர்

    துவாக்குடி

    திருவெறும்பூர் அருகே அசூர் பொய்கை குடி பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 44). இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் இவரது ஆடுகள் அசூர் கருப்பு கோவில் அருகே மேய்ந்து கொண்டு இருந்தது. அப்போது திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் ஆட்டை திருடி சென்றனர். இச்சம்பவம் குறித்து கோபிநாத் உடனடியாக துவாக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து இரு சக்கர வாகனத்தில் ஆட்டை திருடி சென்ற அசூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சக்திவேல் (27) மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா கீரனூர் பகுதியை சேர்ந்த சிவகுமார் (25) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • பண்ருட்டியில் சாராயம் விற்ற திருநங்கைகள் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் மாறு வேடத்தில் இரவு முழுவதும் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில்சப்-இன்ஸ் பெக்டர்கள் பிரசன்னா தங்கவேலு மற்றும் போலீசார் மாறு வேடத்தில் இரவு முழுவதும் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பண்ருட்டி மணி நகர் பஞ்சமுக ஆஞ்நேயர்கோவில் அருகில் புதுவை சாராயம் மற்றும் மது பாட்டில்கள் விற்பனை செய்த 2 திருநங்கைகளை அதிரடியாக கைது செய்து அவர்களிடம் இருந்து 50 லிட்டர் சாராயம் மற்றும் ஏராளமான புதுவை மதுபாட்டில்கள் ஆகியவற்றை கைப்பற்றி அதனை பறிமுதல் செய்தனர். பின்னர் கைதான 2 பேரையும் பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • பண்ருட்டியில் சாராய வியாபாரி கைது செய்யப்பட்டார்.
    • பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேலு, பிரசன்னா மற்றும் போலீசார் அங்கு திடீர் சோதனை நடத்தினர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே கண்டரக்கோட்டை கிராமத்தில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக பண்ருட்டி போலீசாருக்கு ரகசிய தகவல்கிடைத்தது. அதன்பேரில், பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேலு, பிரசன்னா மற்றும் போலீசார் அங்கு திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த பழனிமுருகன் (வயது49) என்பவர் சாராயம் விற்பனை செய்வது தெரியவந்தது. அவரை கைது செய்து அவரிடம் இருந்து ஏராளமான புதுவை சாராய பாக்கெட்டுகள், மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். இவரை பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையிலான போலீசார் தேடி வந்தனர்.
    • அவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம், 1பவுன் நகை ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் போலீசார் என்று கூறி 3 பேர் தனியாக வசிக்கும் பெண்களை குறிவைத்து நகை, பணத்தை மிரட்டி பறிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வந்தது. இது குறித்து வடக்கு போலீஸ் நிலையத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டது. குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையிலான போலீசார் தேடி வந்தனர்.இந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பாக திருப்பூர் பாண்டியன் நகரை சேர்ந்த ஜெயராம் (வயது 47), கோவை அண்ணா நகரை சேர்ந்த அய்யப்பன் (51), ஆறுமுகம் (47) ஆகிய 3 பேரை பிடித்தனர். இவர்கள் தனியாக வசிக்கும் பெண்களை குறி வைத்து போலீசார் போல் நடித்து அவர்களை மிரட்டி பணம் மற்றும் நகைகளை பறித்து

    சென்றது தெரிய வந்தது. கஞ்சா வழக்கு போடுவதாக மிரட்டி பணம் பறித்துள்ளனர். ஆறுமுகம் போலீஸ் போல் போலியான அடையாள அட்டை மற்றும் காக்கி சீருடை வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம், 1பவுன் நகை ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் மூன்று பேரையும் சிறையில் அடைத்தனர்.

    • செந்தில்குமாரை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட தலைவர் முகமத் ரபி தலைமையிலான நிர்வாகிகள் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
    • குல்ஜார்ஷா மற்றும் இப்ராஹிம் ஷா ஆகியோர் உடன் இருந்தனர்.

    கள்ளக்குறிச்சி :

    சிறையில் உள்ள சிறுபான்மையினரை விடுவிக்க அ.தி.மு.க. சார்பில் சட்டமன்றத்தில் பேசிய கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., செந்தில்குமாரை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட தலைவர் முகமத் ரபி தலைமையிலான நிர்வாகிகள் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது மாவட்ட துணைத் தலைவர் ஷபி, கல்வியாளர் அணி மாநில தலைவர் மாலிக் பாஷா, மாவட்ட பொருளாளர் தாஹிர் அலி, தொகுதி தலைவர் சல்மான், செயற்குழு உறுப்பினர் அசாருதீன், நகர தலைவர் சலிம் பாஷா, நகர பொருளாளர் அப்துல் ரஹீம், ஊடக அணி பொறுப்பாளர் குல்ஜார்ஷா மற்றும் இப்ராஹிம் ஷா ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×