search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கேரளாவில் இருந்து ஓட்டல் கழிவுகளுடன் வந்த டெம்போ சிறைபிடிப்பு
    X

    கேரளாவில் இருந்து ஓட்டல் கழிவுகளுடன் வந்த டெம்போ சிறைபிடிப்பு

    • தக்கலை அருகே பொதுமக்கள் மடக்கினர்
    • ஓட்டல் கழிவுகளை ஏற்றி வந்த டெம்ேபாவை பறிமுதல் செய்தனர்.

    தக்கலை :

    கேரளாவில் இருந்து இறைச்சி மற்றும் மருத்துவ கழிவுகள் உள்பட பல்வேறு கழிவுகளை, தமிழகத்திற்கு கொண்டு வந்து இங்குள்ள நீர்நிலை கரைகள், சாலை யோரம் கொட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக குமரி மாவட்டம் களியக்காவிளை, தக்கலை உள்ளிட்ட பகுதி களில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதாக பொது மக்கள் குற்றம் சாட்டினர். இதனை தொடர்ந்து கழிவு பொருட்கள் ஏற்றி வரும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன.

    ஆனால் கண்காணிப் பையும் மீறி சில வாகனங்கள் குமரி மாவட்ட எல்லைப் பகுதிக்குள் வந்து கழிவுகளை கொட்டிச் செல்வது நடந்து வருகிறது. ஒரு சில இடங் களில் அந்த வாகனங்களை பொதுமக்கள் சிறைபிடித்து போலீசில் ஓப்படைத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தக்கலை அருகே கோழிப்போர்விளை வழியாக நேற்று இரவு ஒரு டெம்போ வந்தது. அந்த டெம்போவில் இருந்து பயங்கர துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் டெம்போவை பள்ளியாடி செல்லும் சாலையில் மடக்கி சிறை பிடித்தனர்.

    பின்னர் டெம்போவை சோதனையிட்ட போது அதில் கேரளாவில் இருந்து ஓட்டல் கழிவுகள் கொண்டு வந்தது தெரியவந்தது. இது குறித்து தக்கலை போலீசா ருக்கு தகவல் கொடுக்கப் பட்டது. அவர்கள் விரைந்து வந்து, ஓட்டல் கழிவுகளை ஏற்றி வந்த டெம்ேபாவை பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், வாகனத்தை ஓட்டி வந்தது கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (வயது 27) என்பதும், அவர் கோவ ளத்தில் இருந்து உணவு கழிவுகளை கோழிப்போர் விளை பகுதியில் உள்ள பன்றி பண்ணைக்கு கொண்டு வந்ததாகவும் தெரியவந்தது. இது சம்பந்தமாக தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    Next Story
    ×